டிசம்பர் 29
சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்
1170
– இங்கிலாந்து, கண்டர்பரி ஆயர் தோமஸ் பெக்கெட் அவரது தேவாலயத்தில் வைத்து
இரண்டாம் ஹென்றி மன்னனின் நான்கு ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
1690 – இத்தாலியின் அன்கானோர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானிய போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.
1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயோர்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர்.
1835
- மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள்
அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டது
1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.
1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு YMCA பொஸ்டனில் அமைக்கப்பட்டது.
1876 – ஐக்கிய அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் தொடருந்து பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர்.
1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
1891 - தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.
1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார்.
1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1930
- அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான
முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது
இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
1937 - ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாசி ஜெர்மனியர் தீக்குண்டுகள் வீசியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
1975 – நியூயோர்க் நகர விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.
1987 - 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.
1989 - ஹொங்கொங் வியட்நாமிய அகதிகளை பலவந்தமாக வெளியேற்றியதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது.
1996
- குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு
வந்தது.
1997 - ஹொங்கொங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.
1998 - கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
2001 – பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment