Digital Time and Date

Welcome Note

Wednesday, December 26, 2012

மருந்துகளின் சரியான விலையினை அறிய

நமது ஒவ்வொருவரின் வீட்டிலும் குடும்பத்தினை நடத்துவதற்கான போதுமான அளவு நிதிநிலை இல்லாத நிலையிலும், மருத்துவ செலவிற்கென தனியாக நிதியினை ஒதிக்கிவைப்போம். அனைத்து வகை மக்களிடமும் மருத்துவத்திற்கான செலவுகள் மட்டும் மிகவும் அவசியமான செலவினமாக  உள்ளது. இதனை நிச்சயம் ஒதுக்கிவிடமுடியாத ஒன்றாக இருக்கும். அதிலும் மருத்துவர் தரும் மருந்துகளின் விலை நமது இரத்த அழுத்தத்தை உயர்த்திவிடும்.

நமது மருத்துவர்கள் நமக்கு பரிந்துரைக்கும் மருந்துகளின் குறியீட்டு பெயர்களை (BRAND NAME) மட்டும்தான் குறிப்பிடுகிறார். ஆனால் அதன் இனப்பெயரினை (GENERIC) என்னும்  வேதிபெயரினை கொண்டு குறிப்பிடுவதில்லை. அதன் காரணமாக நமக்கு வழங்கப்படும் மருந்துகளின் மாற்று பிராண்ட் உள்ளதா இல்லையா என்பதினை அறிய முடிவதில்லை மற்றும் அதன் விலையினை ஒப்பிட்டு பார்க்கவும் முடிவதில்லை. ஒரே வகையான மருந்துகள் ஒரே விகிதாச்சார கலவை மற்றும் அதே நோய்க்காக தரப்பட்டிருக்கும். ஆனால் இதனை நாம் அறியமுடிவத்தில்லை. இதனால் நமது பணம் விரயத்தை தவிர்க்கவும்  முடியவில்லை. 
இதனை அறிவதற்கென ஒரு தளம் உள்ளது இதனை எனது முகநூல் நண்பர் மூலம் அறிந்துக்கொண்டேன். இவை அனைவருக்கும் பயன்படும் என இங்கு பதிவிடுகிறேன். இதன் மூலம் மருந்துகளை ஒப்பிட்டு பார்த்து வாங்கி பணத்தினை மிச்சப்படுத்தலாம்.
இத்தளத்தின் முகவரி : http://www.medguideindia.com
மேலே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரு திரை தோன்றும். அதில் கீழ்வருமாறு செயல்களை மேற்கொள்ளவும்.

 Click on ' Drugs ' 


01.Click on 'Brand'

பின்பு  2-என வட்டமிட்டு கட்டியுள்ள பகுதியில் நமது மருந்தின் பெயரினை தரவேண்டும். பின்பு search என தரும் போது நாம் குறிப்பிட்ட மருந்தின் விவரம் திரையில் தோன்றும். 
பின்பு 3-ல் குறிப்பிட்ட பெட்டியில் உள்ள Active Ingredients/Matched Brands என்பதினை அழுத்தினால் நாம் குறிப்பிட்ட மருந்தின் Generic Name தெரியவரும்.
அதில் Constituents என்பதின் கீழே உள்ளதுதான் மருந்தின் Generic Name ஆகும்.
Click on 'Generic' 
தோன்றும் திரையில் Generic Name என்ற பகுதியில் நாம் மேலே தெரிந்து கொண்ட  Generic Name-னை தந்து Search என்பதினை கிளிக் செய்து தோன்றும் திரையில் உள்ள Matched Brands with Single Generic அல்லது Matched Brands with Combination of Generic(s) என்பதின் கீழே உள்ளதை அழுத்தும் போது நாம் குறிப்பிட்ட மருந்தின் ஒத்த வேறு மருந்துகளும் அதன் விலையும் காட்டப்படும்.  

இதன் மூலம் ஒத்த பார்மூலா உள்ள  பலதரப்பட்ட நிறுவன மருந்துகளை ஒப்பிட்டு பெறலாம். மேலும் இதில் அந்த நிறுவன மருந்துகளின் முழுவிவரங்களையும் இந்த தளத்தின் மூலம் அறியலாம். ஒருமுறை சென்று பாருங்கள் மற்ற விவரங்களை முழுதும் அறிந்துகொள்ளலாம். 
எப்பொழுதும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் மூலமே எடுத்துகொள்வது மிகவும் சிறந்தது.

நன்றியுடன் 
அறிவு கடல்

No comments:

Post a Comment