Digital Time and Date

Welcome Note

Wednesday, December 26, 2012

கணினிக்கான சில எளிய வழி செயல்கள்

கணினிக்கான சில எளிய வழி செயல்கள்

01 சரியாகத் திரையைப் படிக்கமுடியவில்லையா?
     தட்டச்சு பலகையில் இடது பக்கம் உள்ள ஷிப்ட் + இடது  ஆல+
     பிரிண்ட் ஸ்க்ரீன் [Left Shift+Left Alt+PrtScreen] ஒருசேர அழுத்துங்கள் கீழ்  
     உள்ளது போல் ஒரு  பெட்டி வரும்.அதில் OK பட்டனை அழுத்தினால்
     திரையின் Contrast மாறும்.


    அதில் நமக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம் .இது கண்   
    பார்வைக்  குறைவாக உள்ளவர்களுக்கு உதவும்.


02.கணினியை 5 வினாடிகளில் ஷட் டவுண் செய்ய 

இது WIN XP பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்.கணினியை பயன்படுத்திவிட்டு விரைவாக அணைக்க வேண்டும் எனில் டெஸ்க்டாப்பில் உள்ள காலி இடத்தில மவுஸ் கொண்டு ரைட் கிளிக் செய்திடவும்.அதில் வரும் மெனுவில் New/Shortcut என்பதை கிளிக் செய்யவும்.அதில் ஷட்டவுண்(shutdown) என டைப் செய்து பின்பு ஒரு ஸ்பேஸ் விட்டு கீழ்வருவதை போல் டைப் செய்யவேண்டும்
c:\windows\system32\shutdown.exest05 



படத்தில் உள்ளது போல் செய்து Next பட்டனை அழுத்திய உடன் ,கணினி 05 வினாடிகலில் மூடப்படும் என  ஒரு செய்தி வரும்.இதனை நேரம் கூடுதலாகவும் வைத்து மாற்றிக்கொள்ளலாம்.

இதன் பின் NEXT என்பதை கிளிக் செய்து பின்னர் வரும் கட்டத்தில் உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பெயரைக் கொடுக்கவும்..அதன் பின்பு FINISH என்பதை கிளிக் செய்து வெளியேறவும் .

நீங்கள் செய்ததெல்லாம் Shutdown.exe என்ற பைலை உங்களுக்கு ஏற்றப்படி இயக்க வழிசெய்ததுதான்.இந்த பைல் %systemroot%\system32  என்ற இடத்தில இருக்கிறது.


03.இன்டர்நெட்டில் லிங்குகள் புதிய டேப்பில் திறக்க


இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools Menu சென்று Internet option என்னும் பிரிவினை தேர்ந்தெடுக்கவும்.கிடைக்கும் விண்டோவில் Advance Tab செல்லவும்.இதில் உள்ள பிரவுசிங் செக்க்ஷனில் Reuse windoe for launching shorcuts என்று தரப்பட்ட இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால் Tools Option  செல்லவும்.அதன் பின் "Advanced"  என்ற பட்டனைக் கிளிக் செய்க.. கிடைக்கும் விண்டோவில் Tabbed Browsing என்ற ஒரு பிரிவு காணாப்படும்.அதில் நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அதற்கேற்றர் போல் தேர்ந்தெடுத்து  OK கொடுத்து வெளியேறவும்.

இனி லிங்க் கிளிக் செய்தால் புதிய விண்டோவில் மட்டுமே கிடைக்கும் .


04.அவுட்லுக் எக்ஸ்பிரஸில் காணாமல் போன பட்டனை மீண்டும்  கொண்டுவருவது எப்படி?

சில நேரங்களில் நாம் அவசரமாக செயல்படும் போது தவறுதலாக சிலவற்றை அழித்துவிடுவோம்.அவ்வாறாக CreateMail, Reply, Forward, Send/Received, Delete போன்ற பட்டன்களை மறைந்து போக செய்து விடுவோம்.

அதனை மீண்டும் அங்கு கொண்டு வர அந்த பட்டன்கள் வழக்கமாக எங்கு அமருமோ அந்த இடத்தில் காலியாக கிரேயாக உள்ள இடத்தில ரைட் கிளிக் செய்திடுங்கள் கிடைக்கும் மெனுவில் Customize என்பதை தேர்ந்தெடுங்கள்.Current Toolbars என்று காட்டப்படும் பெட்டியில் Reset என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.செய்த பின்பு பார்த்தால் அனைத்தும் மீண்டும் அதே இருப்பதை காணலாம்.

05.DLL File அழிந்துவிட்டால் எங்கு கிடைக்கும்
பல நேரங்களில் Software புரோகிராம்கள் இயங்காமல் நின்று விடும்.அப்போது காரணம் என்னவென்று பார்த்தல் குறிப்பிட்ட டி.எல்.எல் பைல் இல்லை (Could not find ***dll") என செய்திவரும் அல்லது கெட்டுவிட்டது என்று செய்தி வரும்.

சரி அந்த 'dll 'file க்கு எங்கே செல்வது.அந்த சாப்ட்வேர் தொகுப்பின் ஒரிஜினல் CD-ஐ எடுத்து தேடினால் குறிப்பிட்ட பைல் எளிதில் கிடைக்காது.இதற்கு இணையம் ஒரு வழியினை தருகிறது.

www.dllfiles.com என்ற தளத்திற்கு செல்லுங்கள்.அதில் உள்ள தேடும் கட்டத்தில் search box-ல் உங்களுக்கு தேவையான டி.எல்.எல் பைலின் பெயரினை டைப் செய்யவும்.அந்த பைல் சம்பந்தமானவை  என்ற
செய்தி வரும் .


பின் அதில் உள்ள டவுண் லோட் பிரிவிற்கு சென்று நமக்கு தேவையான
 பைலினை தரவிறக்கி  கொள்ளலாம் .  இது போன்ற டி.எல் .எல் பைல்கள்  எல்லாம்  அனைத்து Software தொகுப்புகளும் பயன்படுத்தும் வகையில் பொதுவானதாக உள்ளதால் இவை இந்த தளத்தில் கிடைக்கின்றது. இந்த தளம் இது போன்ற பைல்கள்  கிடைத்திட  மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


நன்றியுடன்

அறிவு கடல்

No comments:

Post a Comment