Digital Time and Date

Welcome Note

Tuesday, December 4, 2012

நிமிடத்துக்கு நிமிடம் நடந்த சம்பவங்கள்...

டிசம்பர் 5, 6, 7, 8, (1992) ஆகிய தேதிகளில் அயோத்தியில் நடந்த சம்பவங்கள் குறித்து 'பிரண்ட்லைன்' ஆங்கில இதழில் வெளிவந்த தகவல்களின் தொகுப்பை . இங்கே வழங்குகிறோம்.

டிசம்பர் 5, 1992

 காலை 11 மணி: சாமியார்களையும், மகந்த்துகளையும் கொண்ட 'மார்க்தர்ஷத் மண்டில்' எனும் அமைப்பு, திட்டமிட்டபடி 'கரசேவை'யை நடத்த முடிவு செய்தது. கரசேவையில் என்ன செய்யப்
 போகி றார்கள் என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை.

 பகல் 12.30 மணி: பிரச்சினைக்குரிய (பாபர் மஸ்ஜித் வளாகம்) பகுதிக்கு அருகே ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ''ஒவ்வொரு பிரதி நிதிகள் குழுவிலிருந்தும் இரண்டு பேர் மட்டும் வாருங்கள். கடந்த 2 மாதங்களாக உங்களுக்குத் தரப்பட்ட ஒத்திகைப் பயிற்சியை இப்போது செய்து காட்ட வேண்டும்; குழுவின் தலைவர்களுக்குப் லி பயிற்சி செய்யும் தொண்டர்கள் யார் என்பதும், என்ன பயிற்சி தரப்பட்டது என்பதும் தெரியும்'' என்று அந்த அறிவிப்புக் கூறியது.

 பகல் 2 மணி: விசுவ இந்து பரிஷத் சார்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ராம்சங்கர் அக்னிஹோத்ரி, 'கரசேவை'யின் முதல்கட்டமாக ராமன் கோயிலுக் காக கட்டப்பட்ட மேடையை சுத்தம் செய்து, சரயுநதி நீர் தெளிக்கப்படும் என்றார்.

 பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை: அருகே இருந்த ராம்கதாகுஞ்சி என்ற மலைப்பகுதியில் 500 கரசேவைத் தொண்டர்கள் பயிற்சி ஒத்திகை எடுத்தனர். மசூதியில் எப்படி ஏறுவது, பிறகு கயிறு மூலம் மசூதிக் கோபுரத்தை இடித்து எப்படிக் கீழே தள்ளுவது என்பதற்கான ஒத்திகையும் நடந்தது.

 மாலை 5 மணி: விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் அசோக் சிங்கால், கரசேவகர்களின் முகாம்களைச் சுற்றிப் பார்த்து, சில பிரமுகர்களுடன் பேசினார். தேவைப்பட்டால், ஒருவேளை, மசூதியை இடிக்காமல் சுத்தப்படுத்தும் வேலையோடு நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என்றார். கரசேவகர்கள், ஆத்திரமடைந்தனர்.

 இரவு 7 மணி: லக்னோவிலிருந்த எல்.கே.அத்வானிக்கு அன்று இரவே அயோத்திக்கு வருமாறு 2வது அழைப்பு விடுக்கப்பட்டது. டிசம்பர் 6லிம் தேதி பகல் 1 மணிக்கு அயோத்திக்கு வருவதாக அத்வானி முன்கூட்டியே, திட்டமிட்டிருந்தார்.

 இரவு 11 மணி: அத்வானி அயோத்திக்கு வந்து, தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

டிசம்பர் 6, 1992

 காலை 8 மணி: சிவசேனை நாடாளுமன்றத் தலைவர் மோர்ஷ்வர் சேவே, பஜ்ரங்தள் தலைவர் வினய் கட்டியார் எம்.பி., அத்வானி ஆகிய மூவரும் லி கட்டியார் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

 காலை 8.15 மணி: 2.77 ஏக்கர் நிலத்தைச் சுற்றி எல்லையை நிர்ணயிக்க இரும்புக் குழாய்கள் நடப்பட்டிருந்தன. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், அந்த இரும்புக் குழாய்களைப் பிடுங்கி, மசூதிக்கு அருகே கொண்டு போய் நாட்டினார்கள். இதன்மூலம் பிரச்சினைக் குரிய இடம் சுற்றி வளைக்கப்பட்டு, எல்லை நிர்ணயிக்கப்பட்டது.

 காலை 9 மணி: இதன்மூலம் வெளியே 2.77 ஏக்கர் நிலத்தின் பெரும்பகுதி திறந்து விடப்பட்டதால் லி மேலும் ஏராளமான ஆர்எஸ்எஸ் காரர்கள், அங்கே வந்து குழுமினார்கள். கூடவே, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் வந்தார்கள். அந்தப் பகுதியைச் சுற்றி, வட்டமிட்டு நின்றார்கள்.

 காலை 10.15 மணி: கூட்டத்தினர் வளையத்தை உடைத்துக் கொண்டு மசூதிக்குள் நுழைவதற்கு, 20 நிமிடமாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் சம்பவம் நடக்கும் இடத்துக்கு வந்தனர். பலர், வளையத்தை உடைத்து, மசூதிக்குள் நுழைய முன்னேறிக் கொண்டிருப்பதை, இந்தத் தலைவர்கள் பார்த்தனர்.

 காலை 10.30 முதல் 11.30 வரை: கரசேவகர்கள், மசூதியை சுற்றிப் போடப் பட்டிருந்த வளையத்தைத் தகர்த்து விட்டனர்.

 பகல் 11.35 மணி: 2.77 ஏக்கர் நிலத்தில் கரசேவைக்கான பூஜைகள் தொடங்கின.

 பகல் 11.35 முதல் 11.50 வரை: 2.77 ஏக்கர் நிலத்துக்கு வெளியே திரண்டிருந்த கரசேவகர்கள், ரிசர்வ் போலீஸ் படை மீது கல்வீசித் தாக்கி, அப்பகுதிக்குள் நுழைந்தனர். மசூதிக்குள் நுழையவும் ஒரு கூட்டம் முயற்சித்தது.

 பகல் 11.50 மணி: மசூதியின் லி வலதுபுற கோபுரத்தின் மீது ஒரு ஆள் ஏறிவிட்டான். கூடியிருந்த கூட்டம் 'ஜெய்ராம்' என்று வெறிக் கூச்சலிட்டது.

 பகல் 11.51 மணி: அங்கே இருந்த 100 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது கரசேவைக் கும்பல், மோசமாக கற்களை எடுத்து வீசி, அவர்களை ஓடச் செய்தது. மேலும் ஒரு கும்பல் மசூதியின் மீது ஏறியது.

 பகல் 11.55 மணி: ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மசூதிக்குள் நுழைந்து, சுற்றிப் போடப்பட்டி ருந்த பாதுகாப்பு வேலியையே மசூதி சுவற்றில் ஏணியாக வைத்து கோபுரத்துக்கு மேல் ஏறினார்கள். எல்லா பக்கங்களிலிருந்தும் மசூதியை உடைத்தார்கள்.

 பகல் 1.30 மணி: பைசாபாத்திலிருந்து அதிரடிப்படையின் நான்கு பிரிவு வழியில் இருந்த தடைகளை எல்லாம் அகற்றிக் கொண்டு அயோத்திக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகேத் கல்லூரிக்கு அருகே வந்து கொண்டிருந்தது.

 பகல் 2 மணி: பைசாபாத் மாவட்ட நீதிபதி ரவீந்திரநாத் ஸ்ரீவத்சவா, நிலைமை கட்டுக்குள் வந்து விட்டது என்றும், மத்திய போலீஸ் வரத் தேவை யில்லை என்றும் ஒயர்லஸ் மூலம் தகவல் கொடுத்தார். உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் உடனே பைசாபாத் திரும்பி விடுங்கள் என்று கூறினார்.

 பகல் 2.55 மணி: இடிப்பு வேலை மிகவும் திட்டமிட்ட முறையில் நடந்து கொண்டிருந்தது. இடதுபக்க கோபுரம் அப்போது காணப்படவில்லை!

 பகல் 3.05 மணி: வலதுபக்க கோபுரமும் வீழ்ந்தது.

 பகல் 3.15 மணி: ஒலிபெருக்கியில் அத்வானி அயோத்தியாவுக்குள் ராணுவம் நுழையாமல், நுழைவாயில் களில் தடைகளை ஏற்படுத்துமாறும், இல்லாவிட்டால் ராணுவத்தினர் எல்லா வற்றையும் தடுத்து விடுவார்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
 மாலை 4.50 மணி: மசூதியின் நடுக்கோபுரமும் வீழ்ந்தது.

 மாலை 6.10 மணி: மசூதி இருந்த பகுதியில் இடிபாடுகள் மட்டுமே காணப்பட்டது.

 மாலை 6.35 மணி: ஏற்கெனவே வெளியே இருந்த ராமன் சிலையை மீண்டும் கொண்டு வந்து, அந்த சிலை இருந்த இடத்திலேயே நிறுவினர்.

 இரவு 7 மணி முதல் 11 மணி வரை: இடிபாடுகள் அகற்றப்பட்டன. தண்ணீர் டாங்குகள் வந்தன. அந்தப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன.

 இரவு 1 மணி: வேதமந்திரங்களுடன் ராமன் சிலை 'பிரதிஷ்டை செய்யப் பட்டது. சுற்றிலும் காவித்துணியை கட்டினார்கள். அசோக் சிங்கால், வினய் கட்டியார், ஆச்சாரியா தர்மேந்திரா, ஆச்சாரியா ராம்தேவ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டார்கள்.

டிசம்பர் 7, 1992

 காலையிலிருந்து மாலை வரை ராமன் சிலையைச் சுற்றி, சுவரெழுப்பும் வேலைகள் நடந்தன. அதேநேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் நடந்து கொண்டிருந்தன. சுமார் 100 முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். 150 முஸ்லிம்கள், 'ராம ஜென்ம பூமி' காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்தனர். குடிப்பதற்குத் தண்ணீரோ, உணவோ இல்லாமல், ஒருநாள் முழுதும் அங்கேயே பட்டினி யாகக் கிடந்தார்கள்.

 மாலை 5 மணி: ராமன் சிலையைச் சுற்றி 5 அடி உயர சுவர் கட்டி முடிக்கப் பட்டது. அசோக் சிங்கால், ஒலிபெருக்கி மூலம் ''நாளை விடியற்காலையில் ராணுவம் வரக்கூடும். யாரும் ராணு வத்தை எதிர்க்க வேண்டாம். அமைதி யாக திரும்பிச் செல்லுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

 மாலை: கரசேவகர்கள் விசேஷ ரயில்களில் ஊர் திரும்ப ஆரம்பித்தனர்.

 நள்ளிரவு: கரசேவகர்களை அப்புறப் படுத்துமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு உத்தரவு வந்தது.

 டிசம்பர் 8, 1992

 காலை 3.30 மணி: ரிசர்வ் போலீஸ் படையின் நான்கு பிரிவு, அயோத்திக்குள் பிரச்சினைக்குரிய பகுதியில் நுழைந்தது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த கரசேவகர்கள் அவர்கள் மீது கல் வீசினார்கள். ராணுவம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது; சிலருக்கு காயம்; பெரும்பான்மை கரசேவகர்கள், எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளியேறினார்கள்.

 காலை 4.15 மணி: ராணுவம், அந்தப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கரசேவகர்களைத் திருப்பி அனுப்ப அயோத்தியிலிருந்து விசேஷ ரயில்கள் விடப்பட்டன. ஆம்! குற்றவாளிகள் தப்ப அரசே உதவியது

டிசம்பர் 5, 6, 7, 8, (1992) ஆகிய தேதிகளில் அயோத்தியில் நடந்த சம்பவங்கள் குறித்து 'பிரண்ட்லைன்' ஆங்கில இதழில் வெளிவந்த
தகவல்களின் தொகுப்பை . இங்கே வழங்குகிறோம்.

No comments:

Post a Comment