Digital Time and Date

Welcome Note

Wednesday, December 26, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 26



பிரிட்டனில் டிசம்பர் 26 ஆம் நாள் Boxing தினமாகக் கொண்டாடப்படுகிறது. பிரிட்டனில் இன்று பொது விடுமுறை.

1793 - கைஸ்பேர்க் என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களைத் தோற்கடித்தனர்.

1825 - முதலாம் நிக்கலாஸ் மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய இராணுவத்தினர் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.

1860: கழகங்களுக்கிடையிலான முதலாவது கால்பந்தாட்டப்போட்டி, இங்கிலாந்தின் ஷீபீல்ட் மைதானத்தில் ஹல்லாம், ஷீபீல்ட் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது.

1870 - ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.

1898 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.

1925 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1933 - பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது.

1937: மத்திய ஐரோப்பாவில் வீசிய புயலினால் 137 பேர் பலி.

1944 - ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.

1973 - சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.

1974 - சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1976 - நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.

1979 - சோவியத் விசேட படையினர் ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.

1982 - கணினி யுகத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையிலும், அது மனுக்குலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை முன்னுரைக்கும் வகையிலும் கணினியை Man of the Year என கௌரவித்து பிரசுரித்தது டைம்.

1986 - உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டியது (www.ibiblio.org).

1991 - சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

1998 - அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது.

2003: ஈரானின் பாம் நகரில் பூகம்பத்தினால் சுமார் 10 ஆயிரம் பேர் பலி.

2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 300,000 பேருக்கு மேல் இறந்தனர்.

2006: நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய் குழாயொன்று வெடித்ததால் 260 பேர் பலி.

2006 - சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.

No comments:

Post a Comment