Digital Time and Date

Welcome Note

Monday, February 11, 2013

அப்சல் குரு விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி நியாயம்!

அப்சல் குரு விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி நியாயம்!

அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பின் மூலம் நீதி சாகடிக்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டில் அடுத்தடுத்து தொடர் சமபவங்கள் அரங்கேறி வருகின்றன.

வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பத்திரிக்கையாளர்:

டெல்லியில் உள்ள பிரபல பத்திரிக்கையாளர் இப்திகார் ஜிலானியின் வீட்டை டெல்லி போலீசார் சுற்றி வளைத்து அவரை வீட்டுக்காவலில் அடைத்து நமது நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து(?) வருகின்றார்கள்.

பாராளுமன்றம் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான இப்திகார் ஜிலானியின் வீட்டுக்கு சென்ற டெல்லி போலீசார், ஜிலானி வீட்டை விட்டு வெளியே போக முடியாதபடி அவரை தடுத்து நிறுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் கவுன்சிலிங் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜுவிடம் ஜிலானி புகார் தெரிவித்தார். தனது குடும்பத்தை சேர்ந்த பெண்களையும் குழந்தைகளையும் டெல்லி போலீசார் அவமதித்து வேதனைப்படுத்தியதாகவும் அவர் புகாரில் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜிலானியை வெளியே போக விடாமல் தடுத்து நிறுத்திய டெல்லி போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து மார்கண்டேய கட்ஜு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ,””சட்டத்தை மீறிய வகையில் ஜிலானியில் வீட்டுக்குள் நுழைந்த டெல்லி போலீசார் அவரை வீட்டுக் காவலில் கைது செய்ததுபோல் செயல்பட்டு வெளியே போகவிடாமல் தடுத்து சிறைபடுத்தி வைத்தனர். அவரது குடும்பத்தார், குழந்தைகள் ஆகியோரையும் துன்புறுத்தியுள்ளனர். இத்தகைய செயல்கள் ஜெர்மனியில் நடைபெற்ற நாஜியின் சர்வாதிகார ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது.

ஜனநாயகத்துக்கு மாறான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரான இந்த செயல்களில் ஈடுபட்ட போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது இன்னும் 48 மணி நேரத்துக்குள் சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.”"என்று அந்த கடிதத்தில் மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

இப்படி முஸ்லிம்கள் என்றால் ஒரு நீதியும், முஸ்லிம் அல்லாதவர்கள் என்றால் ஒரு நீதியும் வழங்கும் அரசுகளும், நீதிமன்றங்களும் சிறுகச் சிறுக நீதி நியாயங்களை சாகடித்து வருகின்றனர்.

கிலானி சொன்ன உண்மைகள்:

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட இதே நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு கொடுமையான சித்தரவதைகள் அனுபவித்து பிறகு குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட டெல்லி பேராசிரியர் கீலானி அவர்கள் சில செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்சல் குருவிற்காக அவரது மனைவிதான் கருணை மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனைவி தபாசமிற்கு இந்தத்தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் அவரது உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காதது மிகப்பெரிய மோசடி என்று பேராசிரியர் கீலானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நான் இப்போதுதான் அப்சல் மனைவியிடம் பேசினேன். அவருக்கு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது தெரியவில்லை. செய்தி சானல்கள் வழியேதான் அவர் தெரிந்து கொள்ளவேண்டியிருந்தது, இது மனித உரிமைக்கு விழுந்துள்ள பெரிய அடி” என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிப்ரவரி 4ஆம் தேதியே தூக்கு உறுதி செய்யப்பட்டது என்றால் ஏன் அவரது மனைவியிடம் தெரிவிக்கப்படவில்லை? இது மட்டுமல்ல கருணை மனு நிராகரிப்பு மீதான நீதித்துறை மறுபரிசீலனையும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் மக்புல் பட் 1984ஆம் ஆண்டு இவ்வாறுதான் அவரது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரக்சியமாக தூக்கிலிடப்பட்டு திகாரிலேயே புதைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் அனைத்து சட்ட நடைமுறைகளும் புறந்தள்ளப்பட்டுள்ளது. அவருக்கு தூக்கு தண்டனை அளித்தது முழுதும் அரசியல் தீர்மானமே. சட்டம் ஒழுங்கு என்று கூறப்படுவது ஒரு சாக்குப் போக்குதான். இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார் பேராசிரியர் கீலானி.

அப்சல் குருவை துக்கிலிட்டு புதைக்கப்பட்ட பிறகு அவரது குடும்பத்திற்கு கிடைத்த கடிதம்:

பிப்ரவரி 6ஆம் தேதியே அப்சல் குரு குடும்பத்திற்கு தூக்கிலிடப்படும் செய்தியை ஸ்பீட் போஸ்டில் அனுப்பிவிட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் கூறியிருந்தது. ஆனால் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் உறையில் உள்ள ஸ்டாம்பில் பிப்ரவரி 8ஆம் தேதி என்று இருந்தது.

பிப்ரவரி 9ஆம் தேதி சனிக்கிழமையன்று திகார் ஜெயிலில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு, தூக்கிலிடப்படும் செய்தி அடங்கிய ஸ்பீட் போஸ்ட் மிகவும் ஸ்பீடாக பிப்ரவரி 11ஆம் தேதி அவரது குடும்பத்தினரிடம் சேர்ந்துள்ளது!! ஸ்பீட் போஸ்டின் ஸ்பீட் இதுவென்றால் சாதாரண போஸ்ட் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்!

இதைவிடக்கொடுமை, இந்தக் கடிதம் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பிப்ரவரி 9ஆம் தேதியன்று மாலை ஜம்மு காஷ்மீர் தபால் நிலையத்திற்கு கிடைத்துள்ளது.

கடிதத்தில் அப்சல் குருவின் கிராமத்தின் முகவரி இருந்துள்ளது.

“கடிதத்தை நாங்கள் வாங்க முதலில் மறுத்தோம், ஆனால் உறவினர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினார்கள் அதனால் வாங்கினோம், தூக்கிலிடப்பட்டு உடலும் புதைக்கப்பட்ட பிறகு தூக்கிலிடப்படும் செய்தி எங்களுக்குக் கிடைத்து என்ன பயன்” என்று அவரது குடும்பத்தினர் ஆதங்கத்துடன் கேள்வியெழுப்பினர்.

உள்துறை அமைச்சகம் அன்று வாய்கிழிய தொலைக்காட்சியில் அப்சல் குருவின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதாக கூறிவந்தது. இப்போது குட்டு உடைந்தது.

மற்றொரு வேதனையான வேடிக்கை என்னவெனில் அரசு தரப்பில் பிப்ரவரி 6ஆம் தேதியே அப்சல் குரு குடும்பத்திற்கு தூக்கிலிடப்படும் செய்தியை ஸ்பீட் போஸ்டில் அனுப்பிவிட்டோம் என்று கூறியிருந்தது. ஆனால் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் உறையில் உள்ள ஸ்டாம்பில் பிப்ரவரி 8ஆம் தேதி என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது.

இப்போது இந்தக் கடிதம் கையில் கிடைப்பது மிகவும் கொடூரமானது என்று அப்சல் குடும்பத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர். வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் உள்ளது இந்த செயல் என்றும் அப்சல் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதுதான் இவர்கள் கடைபிடிக்கும் நீதி பரிபாலனம்..

காங்கிரஸ் கயவர்களுக்கு சமாதி கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து முஸ்லிம் விரோதப்போக்கை கடைப்பிடித்து வரும் காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் தக்க பாடம் கற்பிப்பது நிச்சயம்.

இந்த தகவல் tntj.net ல் இருந்து எடுத்து
வெளியிடுகிறோம்

No comments:

Post a Comment