பெப்ரவரி 19
நிகழ்வுகள்
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674
- இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு
எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கில-டச்சு போர் முடிவுக்கு வந்தது. இதன்படி
டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக்
கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.
1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942
- இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 ஜப்பானியப் போர் விமானங்கள்
ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில்
243 பேர் கொல்லப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.
1968
- சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய
விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட
எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15
எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட
சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர்
மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய
வீரர்கள் பலி.
1985 - ஸ்பெயினில்வின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
1986 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.
1986
- அம்பாறை உடும்பன்குளம் படுகொலை: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60
விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
பிறப்புகள்
1473 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543)
1833 - ஏலி டூக்கோமன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1906)
1855 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)
1859 - சுவாண்டே ஆரேனியஸ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர், (இ. 1927)
1900 - ஜியோர்கஸ் செஃபேரிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர், (இ. 1971)
1941 - டேவிட் குரொஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1943 - டிம் ஹண்ட், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்
1956 - ரொடெரிக் மாக்கினன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
இறப்புகள்
1951 - அண்டிரே கைட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், (பி. 1869)
1952 - நூட் ஹாம்சன், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், (பி. 1859)
1988 - அண்டிரே கூர்னான்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
No comments:
Post a Comment