தொழாதவர்களுக்கு எச்சரிக்கை!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !!!!
நபி (ஸல்) அவர்கள் ஒருவனிடத்தில் போர் செய்கிறார்கள் என்றால் அவன் சாதாரண குற்றத்தை செய்திருக்க முடியாது. தொழாதவனிடத்தல் போர் செய்வேன் என்று சொல் இருக்கிறார்கள் என்றால் தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதர்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்பி தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர்புரிய வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர)
நூல் : புகாரி (25)
தொழுகையை விடுவது என்பது சாதாரணமான குற்றமில்லை. இறைமறுப்புச் செயல் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் ஒன்றை இறைமறுப்புச் செயல் என்று சொன்னால் அதுவென்ன சிறிய குற்றமாகவா இருக்கும்?. இதை தொழாதவர்கள் உற்று நோக்க வேண்டும்.
இறைவனை நம்பியவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு இந்த தொழுகை தான். இறைவனû ஏற்காதவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கத் தயாராகிவிட்டால் முஸ்ம்களாக மாறிவிடுவார்கள். இறைவனை வணங்குவதற்கு அவர்கள் தாயராக இல்லாத காரணத்தினால் அவர்கள் இறைமறுப்பாளர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டத் தொழுகையை விட்டுவிட்டால் நமக்கும் இறைமறுப்பாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையை கைவிடுவது தான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ர) அவர்கள்
நூல் : முஸ்ம் (116)
ஆட்சியாளர்கள் குடிமக்களுக்கு அநீதி இழைத்தாலும் அதற்காக அவர்களிடத்தில் குடிமக்கள் சண்டையிடக் கூடாது. ஆனால் அவர்கள் தொழுகையை நிலைநிறுத்தாமல் இருந்தால் அவர்களிடத்தில் சண்டையிடலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது சம்பந்தமாக வரக்கூடிய ஒரு ஹதீஸில் நீங்கள் தெளிவான இறைமறுப்பை அவர்களிடத்தில் கண்டால் சண்டையிடலாம் என்று வந்துள்ளது. ஆக நபி (ஸல்) அவர்கள் தொழுகையை விடுவதை தெளிவான இறைமறுப்புச் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்கள். தொழுகை ஒரு முஃமினிடத்தில் இருக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்பதால் ஆட்சியாளர்கள் தொழுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கக் கூடாது என்று சொன்னார்கள்.
ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களிடம் நாங்கள் சண்டையிடமாட்டோம். எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நாங்கள் கண்டாலேத் தவிர என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.
அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ர)
நூல் : புகாரி (7056)
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள். தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையை தெளிவாக) அறிந்துகொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாற்றமாக) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணைபோனாரோ (அவருக்கு குற்றத்தில் பங்குண்டு) என்று கூறினார்கள். மக்கள் அவர்களுடன் நாங்கள் போரிடலாமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ர)
நூல் : முஸ்ம் (3447)
மறுமை நாளில் நரகவாசியிடம் சொர்க்கவாசிகள் ஏன் நரகத்தில் வந்து அவதிப்படுகிறீர்கள் என்று கேட்பார்கள் அதற்கு அந்த நரகவாசிகள் சொல்லும் முதல் காரணம் நாங்கள் தொழவில்லை என்பது தான். இறைவன் நம்மை படைத்த நோக்கத்தை நாம் பாழாக்கினால் அவன் தரும் தண்டனை நரகம் என்பதை பின்வரும் வசனம் உணர்த்துகிறது.
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.
குற்றவாளிகளிடம் ''உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் (எனக் கூறுவார்கள்)
அல்குர்ஆன் (74 : 40)

No comments:
Post a Comment