Digital Time and Date

Welcome Note

Saturday, March 9, 2013

ஹலோ! நான் அயோத்தி ராமர் பேசுகிறேன்!

ரிங் ரிங் - படித்ததில் பிடித்தது
ஹலோ! நான் அயோத்தி ராமர் பேசுகிறேன்!

ஹலோ ... யாரு பேசுறது அத்வானியா? ஆமா நீங்க யாரு . நான்தான் ராமர் பேசுறேன். எந்த ராமரு! என்னை வைத்து கட்சி நடத்தி விட்டு என்னையே மறந்துட்டியா?

உன் பத்திரிகை பேட்டி பார்த்தேன் "வாழ்நாளில் ராமர் கோவில் கட்டுவது தான் என் இலட்சியம்" என்ற வார்த்தையை கேட்டு மெய்மறந்து விட்டேன். ஏன்பா அயோத்தியாவில் மட்டும் ராமர் கோவில் கட்டினா போதுமா?

நாடாளுமன்றத்தில் ஒரே சண்டையும், கூப்பாடுமா இருக்குது.அந்த கட்டிடம் நமக்கு தேவையா? முதலில் அதை இடித்து விட்டு ராமர் கோவில் கட்டு. காங்கிரஸ்காரங்க நம்ம ஆளுதான் அவர்களிடம் பேசு ஒத்துகொள்வார்கள். BJPக்கு எல்லாம் கட்சி அலுவலகம் தேவையா? அதையெல்லாம் உடைத்து விட்டு கோவில் கட்டுங்கள்.எந்த BJP அலுவுலகத்திலாவது எனக்கு ஒரு கோவில் கட்டி இருக்கியா? நீயெல்லாம் ஒரு பக்தனா! எல்லாம் அரசியல்தானா. சரி மனு தர்மம் இருக்கும் போது எதுக்குப்பா அம்பேத்கர் எழுதிவைத்த சட்ட புத்தகமெல்லாம். உயர்நீதி, உச்சநீதி மன்றம் என்று சொல்லிக்கிட்டு ஒரே பிரச்சனை. அதை இடித்துவிட்டு கோவிலை கட்டு.

சரிங்க சாமி இனி போன் பண்ணாதீங்கள் போனை ஒட்டு கேட்கிறார்கள் தெரியுமா? இனி எதுவந்து சொல்றதா இருந்தாலும் கனவுல வந்து சொல்லுங்கள் சரியா! எல்லாத்தையும் என்தலையிலே கட்டி விட்டுடாதீன்கள். மோடியிடம் கொஞ்சத்தை தள்ளிவிடுங்கள்.

2) நான் ராமர் பேசுறேன் மோடியா? ஆமா! எந்த ராமரு!! என்னை வைத்து கட்சி நடத்தி விட்டு என்னையே மறந்துட்டியா? சாரி சாமி கும்பிடுறேனுங்க! இந்த நடிப்புக்கு எல்லாம் குறைச்சல் இல்ல.

இப்பத்தான் அத்வானியோட பேசினேன். போங்க சாமி அவனைபத்தி என்கிட்ட பேசாதீங்க, நான் பிரதமரா வரலாமுன்னு பார்த்தா அவன் விடமாட்டேன்கிறான். ஒரே கட்சிக்குள்ள இருந்துகிட்டு சதி பண்றான்.

அவன் என்பெற சொல்லி கலவரம் பண்ணி தப்பிச்சிட்டான். அவன்மேல யாரும் கைவைகிறார்களா? நீதான் குஜராத் குள்ளேயே குப்பை கொட்டுற. நீ என்பெயரை சொல்லாம கலவரம் பண்ணி இப்போ போலிசு, கோர்ட்டு என்று மாட்டிகிட்டு முழிக்கிற. இனி எது செய்தாலும் என்பெயர சொல்லு.

இந்த கோர்ட்டு, சி.பி.ஐ. போலீஸ் ஸ்டேசன் எல்லாம் இருக்கிறதால் தானே உங்களை புடிச்சி வழக்கு போடுகிறார்கள். முதலில் அதையில்லாம் இடிச்சி தள்ளிவிட்டு கோவில் கட்டுங்கள். இப்படி எதையாவது ஒழுங்கா செய்தால்தான் உன்னை பிரதமர் ஆக்குவார்கள் புரிந்ததா அபிஷ்டு.

3) ஹலோ.. ஜெயலிலதாவா நான் அயோத்தி குழந்தை ராமர் பேசுறேன். இப்பத்தான் மோடியோட பேசினேன். நீ அவன் சொல்வதை கேட்டு ஆட்சி நடத்துகிறாய் சந்தோசம். அவனை போல் எல்லா கேஸ்களில் இருந்தும் தப்பிவிட்டாய். புதிய சட்ட மன்றத்தை வேண்டாம் என்று சொன்னாயே! அதை இடித்து தமிழக பக்தர்கள் என்னை வழிபட ராமர் கோவில் ஏன் கட்ட மறந்தாய்.

4) ஹலோ நான் ராமர் பேசுறேன் இந்து முன்னணி ராமகோபால ஐயரா? ஆமா! எந்த ராமரு!!என்னை வைத்து கட்சி நடத்தி விட்டு என்னையே மறந்துட்டியா? சாமி கும்பிடுறேனுங்க!

எனக்கு அயோத்தியாவில் கோவில் கட்ட போறேன்னு பொய் சொல்லிகிட்டா அலையுரே. எதுக்குப்பா தமிழ் நாட்டில் இருந்து அயோத்திக்கு போயி ராமர்கோவில் கட்ட கஷ்டப்படுறே. தமிழ்நாட்டில் அங்கங்கே கட்டி விடவேண்டியதுதானே. ராமர் பாலம்னு சொல்லி சேது சமுத்திரத்திட்டத்தை தடுக்கிறே. சரி எந்த கடல் கரையிலாவது எனக்கு ஒரு கோவில் கட்டி இருக்கியா?

கூடன்குளம் அணு மின்நிலையத்தை திறக்கணும் என்று மல்லுகட்டுற. அதனால் என்ன பிரோஜனம் உனக்கு. அதனால் ஏற்ப்படும் பாதிப்பால் கொஞ்சமான மக்களைத்தானே கொல்ல முடியும். அதனால் அங்கே ராமர் கோவில் கேட்டபோறேன் என்று சொல்லு அதைவைத்து கலவரம் நடத்தி நிறையபேரை கொல்லலாம் அதுதானே உன் ஆசை.

5) ஹலோ நான் ராமர் பேசுறேன் இடையூரப்பாவா? ஆமா! எந்த ராமரு!! என்னை வைத்து கட்சி நடத்தி விட்டு என்னையே மறந்துட்டியா? நல்லா ஊர் சொத்தை கொள்ளை அடித்து முதல்வர் பதவியும் தொரந்திட்டே. திப்புசுல்தான் நாடகத்தை போடக்கூடாது என்று தடை செய்யச்சொல்லிகலவரம் செய்து பல உயிர்களை பறித்து எல்லோரும் மகாபாரதம் பார்க்கச்சொன்னோம்.எல்லோரையும் மகாபாரதம் பார்க்க சொல்லிவிட்டு நாம் மட்டு காம சூத்திரா பார்கிறோமே.

6) ஹலோ நான் ராமர் பேசுறேன் பால்தாக்ரேயா? ஆமா! எந்த ராமரு!! என்னை வைத்து கட்சி நடத்தி விட்டு என்னையே மறந்துட்டியா? நீ என்னப்பா என்னை மறந்துவிட்டு பிள்ளையாரை தூக்கி பிடிக்கிறே. பிள்ளையாரை தூக்கி போடு என்னை கையில் எடு அப்போதான் நீயும் முன்னுக்கு வரமுடியும். சிவாஜிக்கு கடலில் சிலைவைக்க பலகோடி செலவு செய்கிறாய். யார் அந்த சிவாஜிஎன்னை விட உயர்ந்தவனா?

7) ஹலோ தினமலர் பத்திரிக்கையா நான் ராமர் பேசுறேன். நல்லா நம்ம ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவாருக்கு ஊதுகுழலா இருக்கீங்கள். தமிழ் நாட்டில் பத்திரிகை நடத்தி கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரா செயல்பட உங்கள் அளவுக்கு தைரியம் யாருக்கும் வராது. தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். என்ற உண்மை வெளியே வந்தபோது அந்த செய்தியை இருட்டிப்பு செய்தது சூப்பர். இந்தியா அளவுக்கு நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் தினமலர் பத்திரிகை அலுவுலகத்தை உடைத்து விட்டு ராமர் கோவில் கட்டுங்கள்.