Digital Time and Date

Welcome Note

Wednesday, June 26, 2013

வங்கி வாடிக்கையாளர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு கட்டணங்கள்

பல வாடிக்கையாளர்கள், வங்கிகளின் பொதுக் கட்டணங்களான ஆண்டு பராமரிப்புத் தொகை, மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் தவிர, அவ்வங்கிகள், அவ்வப்போது விதிக்கும் பல வகையான இடை நிகழ்வுக் கட்டணங்களைப் பற்றி பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.


வங்கிகள், பல வகையான சேவைகளுக்கு விதிக்கும் கட்டணங்களை, வங்கி போர்ட்டல் மற்றும் கணக்கு ஆரம்பிப்பதற்காக நிரப்பப்படும் படிவம் ஆகியவற்றில் காணலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படியே, வங்கிகள் தங்கள் கட்டணங்களை நிர்ணயித்து, வெளியிடுகின்றன. சில சமயங்களில், அனைத்து வங்கிகளும், கிட்டத்தட்ட ஒரே அளவு கட்டணம் விதிப்பது போல் தோன்றுவதால் வாடிக்கையாளர்கள் இதனை அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. ஆனால், பொதுவாக பெரிய அளவில் வெளியில் தெரிய வராத இக்கட்டணங்களை, ஒப்பிட்டுப் பார்த்து, அலசி ஆராய்ந்தால், இவற்றிடையே காணப்படும் வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு கட்டணங்கள் பின் வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.

1. வங்கிக் கணக்கில் உள்ள குறைந்த பட்ச இருப்புத்தொகை (எம்ஏபி) தொடர்பான கட்டணங்கள்:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தவிர, மற்ற வங்கிகள் பல, வாடிக்கையாளரை, குறைந்த பட்ச இருப்புத்தொகையாக, சுமார் 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வைத்திருக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கின்றன. இக்குறிப்பிட்ட குறைந்த பட்ச இருப்புத்தொகை இல்லையெனில், வாடிக்கையாளர் அபராதமாக ஒரு குறிப்பிட்ட நான்-மெயின்டனன்ஸ் தொகையை செலுத்த வேண்டும். இந்த அபராதத் தொகை, ஹெடிஎஃப்சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளில் தலா ரூபாய் 250 - ஆகவும், ரூபாய் 350 - ஆகவும், உள்ளது.

2. வங்கிக் கணக்கை மூடுவதற்கான கட்டணங்கள்:

வாடிக்கையாளர், தன் வங்கிக் கணக்கை குறிப்பிட்ட ஆபரேஷன் காலத்திற்கு முன்னரே மூட விரும்பினால், அவர் 150 முதல் 300 ரூபாய் வரை, அதற்காக கட்டணம் செலுத்த வேண்டும். ஐசிஐசிஐ வங்கியில், வங்கிக் கணக்கை, ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் மூடினால், 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

3. வங்கிக் கணக்கை மாற்றுவது தொடர்பான கட்டணங்கள்:


வங்கிக் கணக்கை ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு மாற்ற ஆகும் கட்டணம், ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை ஆகும். எஸ்பிஐ, தபால் செலவுகளையும் சேர்த்து 102 ரூபாயை, கட்டணமாக வசூலிக்கிறது. எனினும், சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட ஆபரேஷன் காலத்திற்குப் பின், கட்டணம் ஏதும் வாங்காமல் வங்கிக் கணக்கை கிளை விட்டு கிளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கின்றன.

4. பாஸ்புக் தொடர்பான கட்டணங்கள்:


பொதுவாக வங்கிகள் பாஸ்புக் வழங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. ஆனால், வேறு நகரத்திலோ அல்லது ஒரே நகரிலுள்ள வேறொரு கிளையிலோ, பாஸ்புக்கை புதுப்பிக்கும் பட்சத்தில், அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, இது போன்ற ஆபரேஷன்களுக்கு, எஸ்பிஐ-ல் 10 ரூபாய் கட்டணம் வாங்கப்படுகிறது.

5. செக்புக் தொடர்பான கட்டணங்கள்:

தற்போது, பெரும்பாலான வங்கிகள் சிடிஎஸ் -க்கு உடன்பட்டே காசோலைகள் (செக் புக்குகள்) வழங்குகின்றன. தற்சமயம், சிடிஎஸ் -சுடன், எவ்வித உடன்பாடுமில்லாத பழைய செக் புக்குகளை மாற்றிக் கொடுப்பதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. எனினும், காசோலை வழங்கும் சமயம், அவ்வங்கியின் விதியைப் பொறுத்து, ஒவ்வொரு காசோலைக்கும் 2 ரூபாய் வீதம் கட்டணம் விதிக்கப்படுகிறது.


அவ்வாறு வழங்கப்படும் செக், பற்றாக்குறையான இருப்பு நிதியினால் மறுதலிக்கப்படும் பட்சத்தில், சுமார் 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஹெடிஎஃப்சி வங்கி, ஒரு காலாண்டில் முதன் முறையாக ஒரு காசோலை மறுதலிக்கப்பட்டால், 350 ரூபாயும், அதே காலாண்டில் மறுதலிக்கப்படும் ஒவ்வொரு காசோலைக்கும் சுமார் 750 ரூபாய் வீதமும் அபராதமாக விதிக்கிறது.

6. டெபிட் கார்டுகள் தொடர்பான கட்டணங்கள்:


வங்கிகள், தங்கள் டெபிட் கார்டு சேவைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுக் கட்டணமாக விதிக்கின்றன. இத்தொகை, ரூபாய் 50-லிருந்து 200 ரூபாய் வரை வேறுபடலாம். குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல், பிற வங்கிகளின் ஏடிம்-களில் பணத்தை எடுத்தால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஐடிபிஐ வங்கி, நிதி ட்ரான்ஸாக்ஷன் அல்லாத பிற சேவைகளான இருப்பு நிதி விசாரணை ஆகியவற்றுக்கு 8 ரூபாய் வசூலிக்கிறது. ஒரு மாதத்தில் ஐந்து தடவைக்கு மேல் பிறவங்கிகளில் செய்யப்படும் நிதி ட்ரான்ஸாக்ஷன்களுக்கு, இவ்வங்கி 20 ரூபாய் வசூலிக்கிறது.

7. இன்டெர்நெட் பாங்க்கிங் தொடர்பான கட்டணங்கள்:

எல்க்ட்ரானிக் பில் பேமெண்டுகள், நிதி பரிமாற்றம், ஆகியவற்றுக்கு கட்டணங்கள் உள்ளன. உதாரணமாக இரயில்வே இ-டிக்கெட் பேமண்டுகளின் போது, ஒரு பதிவுக்கு, ரூபாய் 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது.

8. வங்கிக் கிளைகளில் செய்யப்படும் நிதி ட்ரன்ஸாக்ஷன்:


ஹெடிஎஃப்சி, ஐசிஐசிஐ, யெஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏடிஎம்-கள், இன்டெர்நெட் பாங்க்கிங், கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கும்படி வற்புறுத்துவதன் மூலம் தங்கள் கிளைகளின் நிர்வாகச் செலவுகளை குறைக்க எத்தனிக்கின்றனர். அதனால், ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் கிளைகளில் செய்யப்படும் ட்ரான்ஸாக்ஷன்களுக்கு, வங்கிகள், கட்டணங்கள் விதிக்கின்றன. கட்டணமில்லாத ட்ரான்ஸாக்ஷன் வரையறைக்குப் பின் செய்யப்படும் ஒவ்வொறு ட்ரான்ஸாக்ஷனுக்கும், ஹெடிஎஃப்சி வங்கி 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.


கிட்டத்தட்ட, அனைத்து வங்கிகளும் இவ்வகைக் கட்டணங்களை தங்கள் வெப்சைட்டுகளில் பட்டியலிட்டுள்ளனர். அதனால் யார் வேண்டுமானாலும் இவ்வெப்சைட்டுகளுக்குச் சென்று எளிதாக இக்கட்டணங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இவை தவிர, அவ்வப்போது, மேலும் சில கட்டணங்கள், சில குறிப்பிட்ட சேவைகளுக்காக விதிக்கப்படுகின்றன.


முடிவாக சில வாடிக்கையாளர்கள், இது போன்ற திடீர் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால், தங்கள் வங்கிகள் மேல் கோபம் கொள்கின்றனர். இது போன்ற திடீர் மற்றும் எதிர்பாராத திகைப்புகளைத் தவிர்க்க வேண்டுமெனில், வாடிக்கையாளர்கள், ஒரு வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி நன்கு அலசி ஆராய்ந்த பின்னரே அவர்களுக்கான வங்கியை தேர்வு செய்ய வேண்டும். வங்கிகளை, அவற்றின் சேவைகளின் தரம், கூடுதல் நிதி சேவைகள் கிடைக்கும் வாய்ப்பு, கட்டுபடி ஆகக் கூடிய அளவிலான சேவை விலைகள் ஆகிய பலவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். ஆர்பிஐ-யின் அறிவுறுத்தலின் படி, வங்கிகள் இயங்கும் முறை, அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளும் வண்ணம், வெளிப்படையானதாக இருக்க வேண்டும். அதனால், வங்கிகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்கு புரிந்துகொண்டு, தேவையற்ற கட்டணங்களைக் குறைப்பது என்பது, வாடிக்கையாளர்களின் கைகளிலேயே உள்ளது.

நன்றி யூஜின்

No comments:

Post a Comment