லண்டன்: இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 4000
ஆண்டு பழமை வாய்ந்த எகிப்திய சிலை ஒன்றுதானாக நகர்ந்து வருவதால் பீதி
ஏற்பட்டுள்ளது. எப்படி இந்த சிலை நகர்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
இதனால் இந்த சிலை வைக்கப்பட்டுள்ள மான்செஸ்டர் அருங்காட்சியக நிர்வாகிகள்
குழப்பமடைந்துள்ளனர். இதுவரை அநத் சிலை 180 டிகிரி அளவுக்கு நகர்ந்து
நிற்கிறது. சுழன்றபடி அது நகர்வதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிலை வெறும் 10 இன்ச் உயரம்தான் கொண்டது. கி.மு. 1800ம் ஆண்டு சிலை இது.
80
ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலையை எகிப்து மம்மி ஒன்றிடமிருந்து
கண்டுபிடித்து எடுத்தனர். பின்னர் இது மான்செஸ்டர் அருங்காட்சியகத்திற்குக்
கொண்டு வரப்பட்டது.
இந்த சிலையானது கடந்த சில வாரங்களில் மெதுவாக
சுழன்றபடி நகர்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதலில்
யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திடீரென சிலை இருந்த நிலையிலிருந்த வேறு
பக்கம் திரும்பியபடி இருப்பதைப் பார்த்துஅருங்காட்சியக நிர்வாகிகள்
அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் சிலை நகர்ந்தது தெரிய வந்தது.
அவர்களுக்கு.
இந்த சிலையில் உள்ள நபரின் பெயர் நெப் சீனு
என்பதாகும். இந்த சிலை இரவில் நகருவதில்லை. பகலில்தான் சுழன்று நகர்கிறது.
இதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாரோ மன்னர்கள் விடுத்த சாபம்தான் இந்த சிலையின் மர்மத்திற்கு காரணம் என்று ஒரு குரூப் கதையைக் கிளப்பி விட்டுள்ளது.
இதுகுறித்து
அருங்காட்சியகத்தின் கியூரேட்டர்களில் ஒருவரான காம்பல் பிரைஸும்
நம்புகிறார். அவர் கூறுகையில், இருக்கலாம், சாபமாகக் கூட இருக்கலாம்
என்றார் பிரைஸ்.
பிரைஸ் மேலும் கூறுகையில், என்னிடம் மட்டுமே சிலை
வைக்கப்பட்டுள்ள பெட்டகத்தின் சாவி உள்ளது. இந்த நிலையில் சிலை எப்படி
நகருகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. யாரும் சிலையைத் தொடவே முடியாது. எனவே
இதில் இறை மர்மமும் இருக்கலாம் என நம்புகிறேன் என்றார்.
No comments:
Post a Comment