Digital Time and Date
Welcome Note
Saturday, June 29, 2013
செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
1500 கி.மீ., நீளமும், 7 கி.மீ., அகலமும் கொண்ட அந்த ஆறு செல்கிறது. ஜரோப்பிய வின்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ள இந்த நதி சில குறிப்பிட்ட இடங்களில் 1000 அடி ஆழம் கொண்டதாக இருக்கிறது. தற்போது வற்றிய நிலையில் காணப்படும் இந்த நதி, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாய்ந்திருக்கக்கூடும் என கருதப்படுகின்றது.
"ரூயேல் வாலிஸ்" என இந்த வற்றிய நதிக்கு பெயரிட்ட ஜரோப்பிய வின்வெளி ஆய்வு மையம், இந்த நதிக்கு நிறைய கிளை நதிகள் இருந்ததையும் உறுதி செய்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஆறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்து, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு சூடுபிடித்துள்ளது.
Labels:
News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment