நல்ல நண்பர்களைக் கொண்டவர்களின் வாழ்க்கை நலமாக அமையும். முன்பின்
தெரியாதவர்கள் பலருடன் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை
உள்ள வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல நடபை இனம் காணுதல்
முக்கியமானதாக இருக்கிறது. நல்ல நட்பின் அடையாளங்கள்:
1. சொன்னதைச்
செய்தல்: நட்பிற்கு அடிப்படையாக அமைவது நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தக்க
வைத்துக்கொள்ள முக்கியமாகத் தேவைப்படுவது சொன்னதைச் செய்தலாகும்.
2. அருகிருந்தால் மகிழ்ச்சி: நல்ல நண்பன் அருகில் இருந்தால் நல்ல உணர்வு எமக்குக் கிடைக்கும்.
3. கவனித்துக் கேட்டல்: நல்ல நண்பர்கள் நாம் கதைக்கும் போது கவனித்துக் கேட்பார்கள்.
4. உயர்வு கண்டு மகிழ்வார்கள்: நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் நாம் பெறும் வெற்றிகள் உயர்வுகள் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.
5. மாற்றிக் கொள்ளுதல்: நல்ல நண்பர்கள் ஒருவருக்காக ஒருவர் தம்மை மாற்றிக் கொள்வார்கள்.
6.
இரகசியம் பேணுதல்: நல்ல நண்பர்களிடம் எமது குறைகள் நிறைகளைப் பகிர்ந்து
கொள்ளுவோம். வெளியில் சொல்ல முடியாதவற்றையும் நல்ல நண்பர்களிடம் பகிர்ந்து
கொள்வோம். இதற்கு இரகசியம் பேணுதல் நல்ல நட்பிற்கு அவசியம்.
7. ஒத்துப் போகும் ரசனைகள்: நல்ல நண்பர்களின் ரசனைகள் ஒத்துப் போகக்கூடியவையாக இருக்கும்.
8 வழிநடத்துதல்: நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் தவறான வழியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.
9. ஊக்கப்படுத்துதல்: நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் வாழ்வில் முன்னேற ஊக்கப்படுத்துவார்கள்.
நன்றி ;ஜனனி
No comments:
Post a Comment