Digital Time and Date
Welcome Note
Sunday, July 7, 2013
இரகசிய குறியீடு ( Bar codes) நாம் எப்படி உருவாக்குவது?
நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கின்றோம்.
பெரும்பாலானவர்களிற்கு அந்தக் கோடுகள் எதற்க்காக அச்சிடப்பட்டுள்ளது என்றும் அந்த ரகசியக்குறியீட்டினுள் அப்படி என்னதான் இருக்கிறது என்றும் தெரிவதில்லை. இந்த ரகசியக்குறியீடுகள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் முழுமையாக ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம்.
விற்பனைப் பொதிகளில் அச்சிடப்படும் இந்த ரகசியக்குறியீடுகள் ஆங்கிலத்தில் Barcodes என அழைக்கப்படும். Barcode என்பது குறிப்பிட்ட பொருட்களின் மீது அதுபற்றிய சில தகவல்களைக் காண்பிக்கும் ஒரு குறியீடாகும்.இவ் Barcodes இனுள்ளே அது அச்சிடப்பட்டுள்ள உரிய பொருளிற்கான விலை, உற்பத்தி தேதி , காலாவதி தேதி , அப்பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இணையமுகவரி போன்ற தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.இவற்றை நம் வெறும் கண்ணினால் பார்த்து அறிய முடியாது.இவற்றை Barcode Scanner கள் மூலமாகவே வாசித்து அறிய முடியும்.
இந்த ரகசியக்குறியீட்டினை Barcode Scanner இற்கு முன்பாக பிடித்தால் போதும், இரகசியக்குறியீட்டிற்குள் ஒழிந்திருக்கும் இரகசிய விடயங்கள் அனைத்தையும் அறிந்துவிடலாம்.
ஆனால் தற்போது Barcode Scanner களைப் போலவே கையடக்கத் தொலைபேசிகளும் இந்த இரகசியக்குறியீடுகளை இனங்கண்டுகொள்ள பெரிதும் உதவுகின்றன.
குறித்த இரகசியக் குறியீட்டினை கையடக்கத் தொலைபேசியின் கமராவினால் Scan செய்து அதனுள் மறைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் அறிந்துவிடலாம்.இதற்காகவே பெரும்பாலான கையடக்கத் தொலைபேசிகளில் (Smart Phones) இவ் Barcode களை வாசிப்பதற்க்குரிய மென்பொருள் காணப்படுவது பயனுடையதொரு விடயமாகும்.மேலும் கையடக்கத் தொலைபேசியில் இவ்மென்பொருள் இல்லையென்றால் இணையத்திலிருந்து இலவசமாக Download செய்து நிறுவிக்கொள்ளலாம்.
இரகசியக் குறியீடுகளை வாசிப்பது பற்றி அறிந்து விட்டோம், அடுத்ததாக பார்க்கபோகும் விடயம் அனைவரிற்கும் நிச்சயமாகப் பிடிக்கும்.எமது அடிப்படை விபரங்களை (பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி, மேலும் பலவற்றை) புகுத்தி எமக்கென்று ஒரு இரகசியக் குறியீட்டினை உருவாக்கிக்கொள்ளலாம்.
Barcodes பல வகைப்படும், அவற்றுள் QR Code என்ற Barcode வகையே பாவனைக்கு இலகுவானதாகும்.
எனவே “QR Code Generator” என Google இல் Type செய்து தேடினால் இவ் Barcode இனை இலவசமாக உருவாக்கித்தருகின்ற பல இணையதளங்கள் உங்கள் முன் தோன்றும்.
அவற்றில் ஏதாவதொரு இணையதளத்திற்கு சென்று உங்கள் இரகசியக் குறியீட்டினுள் நீங்கள் உள்ளடக்க விரும்பும் விடயங்களை வழங்கினால் போதும், உடனே உங்களிற்குரிய இரகசியக் குறியீடு தயாராகிவிடும், அதனை நீங்கள் புகைப்படமாக Download செய்து அதனை அச்சிட்டு (Print எடுத்து) பெற்றுக்கொள்ளலாம்.
இவ் இரகசிய குறியீட்டினுள் அதிகபட்சமாக 250 சொற்கள் கொண்ட தகவல்களை உள்ளடக்க முடியும் என்பது பிரமிக்கத்தக்கவொரு விடயமாகும். இந்த Barcode 1948 இல் தான் முதன்முதலாக பயன்பாட்டிற்கு வந்தது. Barcode ஆனது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
வைத்தியசாலையில் நோயாளிகளின் மணிக்கட்டுப் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் Barcode இன் மூலம் குறித்த நோயாளியின் முழுத்தகவல்களையும் மருத்துவமனையில் பணியாற்றுபவர்களினால் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
வாடகை கார்கள், விமானப் பயணப்பெட்டி, அணுக்கருக் கழிவு, அஞ்சல் மற்றும் பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்களின் நகர்வைக் கண்காணிப்பதிலும் பயன்படுகிறது.
நன்றி:அமர்க்களம்
Labels:
Information
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment