நமது தேசத்தில்,
கள்ளக் காதல்கள்,
கற்பழிப்புகள்,
கலப்புத் திருமணங்கள்,
திடீர் கொலைகள்,
தீண்டாமை கொடுமைகள்,
அதிரடித் தீர்ப்புகள்,
அரசியல் சூழ்ச்சிகள்,
ஆட்சி கவிழ்ப்புகள்.
சினிமா கவர்ச்சிகள்,
விளையாட்டுத் தோல்விகள்,
இன்னும் பல..
இது ஒன்றும் புதிதல்ல....
இன்று இதை மீடியாக்கள்
பரபரப்பாக வெளியிட்டு காசு பார்க்கும்...விமர்சனங்கள் செய்யும்,
விவாதங்கள் நடத்தும்...
அது அடுத்த சம்பவம் நடக்கும் வரை..
பின்னர் இவை எல்லாம்..மக்கள் மத்தியில் மறந்து போகும்,,,ஏன் பாதிக்கப் பட்டவரின் மனதிலிருந்தும் தான் ...
அடுத்த சம்பவம் நடக்கும் முன்னே அதற்கான
சட்ட திருத்தங்கள் செய்திருந்தால்,
சரியான தீர்ப்பை உரிய நேரத்தில் வழங்கி இருந்தால்,
பாதிக்கப்பட்டவருக்கு அவருடைய உரிமையை முறையாக வழங்கி இருந்தால்…
முக்கியமாக ஊடகங்கள் ஊகித்து அதுவாக இருக்குமோ,இதுவாக இருக்குமோ
என்று சின்ன விசய்த்தை கூட ஊதி பெரிதாக்கி,மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை உண்டாக்காமல் இருந்திருந்தால்,
அடுத்த சம்பவம் நடக்க வாய்ப்பே இருக்காது..
நன்றி சேனை தமிழ் உலா
No comments:
Post a Comment