''டெங்குவைத் தவிர்க்கக் கொசு ஒழிப்பு ஒன்றே வழி. டெங்குவைப் பரப்பும்
'ஏடிஸ் எஜிப்டி’ கொசு நன்னீரில் முட்டை இடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு
இல்லாதவாறு சுகாதாரமாகச் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டும்.
வீட்டுக்குள்
கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். வாசலில் நீண்ட
திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே
போன்றவையும் பயன் கொடுக்கும்.
வீட்டுச் சுவர்கள் மீது 'டி.டி.டி.’
மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச்
சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிப்பது பலன் கொடுக்கும். ஜன
நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில், 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ்
'கிரிசாலை’ப் புகையை செலுத்துவதும் கொசுக்களை விரட்ட உதவும்.
இவை எல்லாவற்றுடன், சுற்றுப்புறச் சுத்தம் முக்கியம்!''
டெங்கு காய்ச்சல் தடுக்க...
வீட்டைச்
சுற்றிலும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால்
சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றுவதற்குக் காத்திருக்காமல், நீங்களே தண்ணீரை
அகற்றுங்கள்.
கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம். கொசு எதிர்ப்புக் களிம்பைப் பூசிக்கொள்ளுங்கள்.
குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள்.
காய்ச்சல் வந்தால் உடனே செய்ய வேண்டியது...
டெங்கு அறிகுறி தெரிந்தால், சிறிதும் தாமதம் இன்றி உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
டெங்கு
காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். உடலின் நீர் இழப்பைத்
தடுக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் போன்ற நீராகாரமாக அதிகம்
எடுத்துக்கொள்ள வேண்டும்.
எப்படிப் பரவாது...
ஒருவரை ஒருவர் தொடுவதால் டெங்கு பரவாது. தும்மல், இருமல் மூலமும் இது பரவாது.
நன்றி ;படித்தேன் பகிர்ந்தேன்
No comments:
Post a Comment