Digital Time and Date

Welcome Note

Monday, July 1, 2013

ஆத்திரத்தில் துடுப்பெடுத்தான் அவசர‌த்தில் படகு விட்டான்

ஆத்திரத்தில் துடுப்பெடுத்தான்
அவசர‌த்தில் படகு விட்டான்

சத்தியத்தை மறந்து விட்டான்
ஆன்றோரும் சான்றோரும் அனைத்து கவிஞர்களும்
வாழ்வை நதி,கடல் என்றும்
பயண‌த்தை படகு,கப்பல் என்றும்
உருவகப்படுத்துவது ஒரு அழகு
பலருக்கு இது அவசரமாக,ஆத்திரமாக மாறிவிடுவதுதான் ஆபத்து
பதட்டமாக,படபடப்பாக,கோபமாக வேகமாக வாகனத்தை ஓட்டினால் விபத்து
வாழ்வை நடத்தினால் அதைவிட ஆபத்துதானே.
ஆனால் நடைமுறையில் நமது பயணங்கள் பல அவசரமாக நடக்கின்றன‌
நமது முடிவுகள் எல்லாம் ஆத்திரத்தில் விளைகின்றன‌
அமைதியின்மையும் பொறுமையின்மையும் நமது உடன் பிறந்த சகோதரர்கள்
ஒப்பிடுதலும் பொறாமையும் ஒட்டி பிறந்த மச்சங்கள்
அடுத்த‌வரை பார்த்து ஒப்பிடுதல்தான் முதல் சைத்தானின் ஆக்ரமிப்பு
முதலாளித்துவ சமூகத்தில் நூறு கோடியாளரின் வாழ்க்கை தரமும்
நூறூ கோடி அடுக்குகளாக அமைந்து விடுகின்றன.
அடி மட்டத்தில் ஒருவனது சராசரி வருமானம் அய்ம்பது ரூபாயாககூட‌
உள்ளது சிலருக்கு அந்த கோடு கூட அடைய முடியாத அவல நிலை
இன்னொரு பக்கம் முதலாவது இடத்தில் உள்ள செல்வரின் ஒரு நொடிவருமானம் கூட பல ஆயிரம் கோடி என்று கணக்கு சொல்லப்படுகிறது
சொல்லாமல் இருப்பது தெரியாத நமக்கு தெரியாது
விரலுக்கு தகுந்த வீக்கம் என்பார்
சிலர் விரல் மோதிரத்தால் வீங்க‌
பலர் விரல் வியாதியால் வீங்கி கிடக்கிறது
அவரவர் வரவுக்கு தக்க வாழ்க்கை த‌ரம் மாறுபடுகிறது
சிலர் பாலுக்கு சீனியில்லையென அழ‌
பலர் கூலுக்கு உப்பில்லையென ஏங்க
இந்த ஒப்பிடுதல் பல கோடி உள்ளங்களில் உறங்கி கிடக்கிறது
இத‌ன் விளைவாக வரும் சோகமும்
தாழ்வு மனப்பான்மையும்
பொறாமையாக உருவம் கொள்கிறது.
இந்த உணார்வுகள் ஆத்திரத்தை தூண்டுகின்றன‌
அவசரத்தை தாண்டுகின்றன‌
அமைதின்மையும் பொறுமையின்மையும் வன்முறையாகின்றன‌
வன்மையில்லை ஒரு வறுமையில்லையானால் என்பார் கவிஞர்
இந்த எதிர்மறை உணர்வுகள் யாவும் ஆற்றாமையைத் தூண்ட
அறிவு தயங்குகிறது.
வாழ்வுக்கு தடையூறு வரும் போது அவசரமாக ஆத்திரமாக‌
படகெடுத்து துடுப்பு போட்டால் சத்யம் எனும் நூல் கயிறு
என்னவாகும்.
சத்யத்தை மறந்து விட்டால் சட்டம் இல்லை,
ஒழுங்கு இல்லை நியாயம்,நீதி தலைமறைவாகும்,
வாய்மை.நேர்மை எல்லாம் வண்டிகளுக்குதான் மையாகும்
ஒழுக்கம்,கட்டுபாடு,எல்லாம் உடைந்து போன பொருளாகி போகும்
அதனால்தான் வாழ்வின் பயணம் நிதானமாக நிதர்சனமாக நடக்க வேண்டுமென்றார்.

 DrBALA SUBRA MANIAN

No comments:

Post a Comment