Digital Time and Date

Welcome Note

Saturday, January 5, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 05





1846: அமெரிக்காவின் ஓரிகன் பிராந்தியத்தை பிரிட்டனுடன் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது.

1854: சான் பிரான்ஸிஸ்கோவில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 300 பேர் பலி.


1896: வில்லியம் ரொஞ்ஜன் கதிர்வீச்சொன்றை கண்டுபிடித்ததாக ஆஸ்திரிய பத்திரிகையொன்று செய்திவெளியிட்டது. இக்கதிர்வீச்சு எக்ஸ்றே கதிர் எனப் பிரபலமாகியது.

1909: பனாமாவின் சுதந்திரத்தை கொலம்பியா அங்கீகரித்தது.

1925 - திருமதி. நெலி டெய்லர் ராஸ் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஆளுநர்.

1933 - அமெரிக்காவின் புகழ் பெற்ற கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது.

1940 - கத்தோலிக்கக் காலண்டர்படி செயிண்ட் சைமன் ஸ்டைலெட்ஸ் தினம். தனக்குக் கடவுளிடத்திலுள்ள தீவிர பக்தியைக் காட்டுவதற்காக ஒரு தூணின் உச்சியிலேயே 37 ஆண்டுகள் வாழ்ந்தவர்.

1940: எவ்.எம். வானொலி முதல்தடவையாக இயக்கிக் காண்பிக்கப்பட்டது.

1971: உலகின் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

1976: கம்போடியாவின் பெயர் 'ஜனநாயக கம்பூச்சியா' என மாற்றப்பட்டது.

1993: ஸ்கொட்லாந்துக்கு அருகில் எண்ணெய் தாங்கி கப்பலொன்று மூழ்கியதால் 84,700 தொன் எண்ணெய் கடலில் கசிந்தது.

1999 - ஹரியானாவில் கிறித்தவர் வெளியேறக் காலக்கெடு விதித்தல்.

2000: அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சித்தலைவர் குமார் பொன்னம்பலம் வெள்ளவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வரலாற்றில் இன்று

ஜனவரி 04



கி.மு. 45: ரஷ்பினா சமரில் டைட்டஸ் லாபீனஸை ஜூலியஸ் சீசர் தோற்கடித்தார்.

1642: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸ், நாடாளுமன்ற அங்கத்தவர்களை கைது செய்வதற்கு படையினரை அனுப்பியதையடுத்து சிவில் யுத்தம் மூண்டது.

1762: ஸ்பெய்ன் மற்றும் நேப்பிள்ஸ் மீது பிரிட்டன் யுத்தப் பிரகடனம் செய்தது.

1865: நியூயோர்க் பங்குச் சந்தை தனது முதலாவது நிரந்தர தலைமையகத்தை நியூயோர்க் நகர வோல் ஸ்ரீட்டில் திறந்தது.

1948: பிரிட்டனிடமிருந்து பர்மா சுதந்திரம் பெற்றது.

1951: கொரிய யுத்தத்தில் சீன-வடகொரிய படைகள் சியோல் நகரை கைப்பற்றின.

2004: நாசாவினால் ஏவப்பட்ட மார்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

2007: அமெரிக்காவில் முதலாவது பெண் சபாநாயகராக நான்ஸி பெலோஸி தெரிவானார்.

2010: உலகின் மிக உயர்ந்த கட்டிடமான கட்டிடமான 'புர்ஜ் கலீபா' (2717 அடி) துபாயில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.

Friday, January 4, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 03

1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

1496 – லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டது வெற்றியளிக்கவில்லை.

1754 – அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.

1815 – ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் ரஷ்யாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.

1833 – போக்லாந்து தீவுகளை பிரித்தானியா கைப்பற்றியது.

1859 – தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது.

1870 – புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.

1888 – 91 சமீ முறிவுத் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் உபயோகிக்கப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் தொலைநோக்கி ஆகும்.

1921 – துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.

1924 – பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.

1925 – இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக முசோலினி அறிவித்தார்.

1932 – பிரித்தானியர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.

1947 – அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

1956 – ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1957 – முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.

1958 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.

1959 – அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமானது.

1961 – அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது.

1961 – இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1966 – இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் டாஷ்கெண்டில் ஆரம்பமாயின.

1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.

1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1990 – பனாமாவின் முன்னாள் அதிபர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.

1994 – ரஷ்யாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

1995 – விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.

2004 – எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று

ஜனவரி 02





533: பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட மேர்கூரியஸ் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் என்ற பெயரை சூடிக்கொண்டார். பாப்பரசராக தெரிவானபின் புதிய பெயரை சூடிக்கொண்ட முதல் பாப்பரசர் இவர்.

1833: பாக்லாந்தில் மீண்டும் பிரித்தானிய ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1942: ஜப்பானிய படைகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கைப்பற்றின.

1955: பனாமா ஜனாதிபதி ஜோஸ் அன்டானியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.

1959: சோவியத் யூனியன் லூனா 1 விண்கலத்தை ஏவியது.

1971: ஸ்கொட்லாந்தில் இரு கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியின்போது ஏற்பட்ட மோதலில் 66 ரசிகர்கள் கொல்லப்பட்டனர்.

Tuesday, January 1, 2013

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள்...

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள்...



நா‌ம் பெரு‌ம்பாலு‌ம் எ‌ப்போது வை‌ட்ட‌மி‌ன்க‌ள் ப‌ற்‌றி பேசுவோ‌ம் எ‌ன்றா‌ல், நமது உட‌லி‌ல் ஏதேனு‌ம் ஆரோ‌க்‌கிய‌க் குறைவு ஏ‌ற்ப‌ட‌்டு, மரு‌த்துவ‌ர் செ‌ய்யு‌ம் சோதனை‌‌யி‌ல் இ‌ந்த ‌வை‌ட்ட‌மி‌ன் குறைவாக இரு‌க்‌கிறது எ‌ன்று தெ‌ரி‌ந்த ‌பி‌ன்தா‌ன் நா‌ம் அ‌ந்த வை‌ட்ட‌மி‌ன் ப‌ற்‌றி அ‌க்கறை கொ‌ள்வோ‌ம்.

ஆனா‌ல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். வை‌ட்ட‌மி‌ன் குறை‌வினா‌ல் நோ‌ய்களு‌ம் உ‌ண்டாகு‌ம்.

எனவே, நா‌ம் ‌சில அ‌றிகு‌றிகளை வை‌த்தே எ‌ந்த ‌வை‌ட்ட‌மி‌ன் ந‌மது உட‌லி‌ல் குறை‌கிறது, அ‌ந்த வை‌ட்ட‌மினை‌ப் பெற எ‌ந்த ‌விதமான உணவு உ‌ட்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று மு‌ன்கூ‌ட்டியே அ‌றி‌ந்து கொ‌‌ண்டா‌ல் பல நோ‌ய்க‌‌ளி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌க்கலா‌ம்.
வைட்டமின் `ஏ’ : இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் `பி’ : இது குறைந்தால் வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.
கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

வைட்டமின் `சி’ :
இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் `டி’ : வைட்டமின் `டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி’யை தயாரித்துக் கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி’ அதிகம் உள்ளது. அ‌திகாலை 7 ம‌ணி வெ‌யி‌‌லி‌ல் நா‌ம் ‌நி‌ன்றா‌ல் சரும‌ம் வை‌ட்ட‌மி‌ன் டியை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ம்.

வைட்டமின் `ஈ’ : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையும் உண்டாகும். நீண்ட நாளைய தோள்பட்டை வலி ஆகியவற்றிற்கும் வைட்டமின் ஈ உதவும்.

கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.