Digital Time and Date

Welcome Note

Wednesday, January 9, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 09

1951 - டாக்டர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் முதன் முதலாக தனது உதவியாளரான ஸ்டூவர்ட் கிராட்டாக் என்பவருக்கு பென்சிலின் மூலம் சிகிச்சை அளித்தார்.




1768: லண்டனில் முதலாவது நவீன சர்க்கஸ் கண்காட்சி நடைபெற்றது.

1776: சேர் ஹம்பரி டேவி, சுரங்க ஊழியர்களுக்கான டேவி விளக்கை பரிசோதித்தார்.

1822: போர்த்துக்கேய இளவரசர் முதலாம் பெட்ரோ மன்னரின் உத்தரவை மீறி பிரேஸிலில் தங்கியிருக்கத் தீர்மானித்தார்.

1927: கனடாவில் திரையரங்கொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் பலி.

1970: சிங்கப்பூரில் உயர் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.

1980 - மெக்காவிலுள்ள மசூதியைத் தாக்கியதற்காக சவூதி அரேபியாவில் 63 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.


1991: குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பதற்கான முயற்சியாக அமெரிக்க,ஈராக் பிரதிநிதிகள் ஜெனீவாவில் சந்தித்தனர்.


1995 - விண்வெளியில் அதிக காலம் வாழ்ந்த பெருமையைப் பெற்றார் ரஷ்ய விண்வெளி வீரரான வலேரி பொலியகோவ்.


2005: சூடான் அரசாங்கத்திற்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் எனும் தீவிரவாதக் குழுவுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது.

யோசிங்க நல்லா யோசிங்க .......

1. மண்ணிலிருந்து மண்ணெண்ணெய் எடுக்கலாம்; கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா?

2. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டா போலீஸ் வரும்; ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் போட்டா ரயில் வருமா?

3. தண்ணியில கப்பல் போனா ஜாலி; கப்பல்ல தண்ணி போனா காலி!

4. ஹோட்டலில் காசு கொடுக்கலேனா மாவாட்டச் சொல்லுவாங்க.... ஆனால் பஸ்ல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்டச் சொல்லுவாங்களா?

5. யானை மேல நாம உட்கார்ந்தா சவாரி! நம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி!



6. அம்மா அடிச்சா வலிக்கும்... போலீஸ் அடிச்சா வலிக்கும்... ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்... ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?

7. என்ன தான் ரயில் வேகமா போனாலும், அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும்.

8. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும்.

9. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் பேலன்ஸ்(balance) பண்ண முடியும்.

10. வாயால நாய்ன்னு செல்ல முடியும்ஸ ஆனா நாயால வாய்ன்னு செல்ல முடியாது.

11. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும்.

12. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா?

13. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா?

14. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்பு அடிச்சா தண்ணி வருமா?

15. எவ்வளவு பெரிய பல் டாக்டரா இருந்தாலும் கடிக்கிற செருப்போட பல்லைப் பிடுங்க முடியுமா?

16. டீ ஸ்பூனால டீ கலக்கலாம். டேபிள் ஸ்பூனால டேபிளைக் கலக்க முடியுமா?

17. மெழுகை வைத்து மெழுகுவத்தி செய்யலாம். ஆனா கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியாது.



நன்றி பூவன்

Tuesday, January 8, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 08




1297: மொனாக்கோ சுதந்திரம்பெற்றது.

1811: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் சார்ள்ஸ் டெஸ்லான்ட்ஸ் என்பவர் தலைமையில் கறுப்பின அடிமைகள் மேற்கொண்ட கலகம் முறியடிக்கப்பட்டது.

1835: அமெரிக்காவின் தேசிய கடன் தொகை முதல் தடவையாக பூச்சியம் ஆகியது.

1912: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1917 - பிரிட்டனில் நாடெங்கும் ஒரே நேரத்தில் 2 மில்லியன் மரங்கள் நடப்பட்டன. மரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதே அதற்குக் காரணம்.

1938 - இந்தியாவில் முதல் வண்ணத் திரைப்படம் வெளியானது. இம்பீரியல் பிலிம் கம்பெனிக்காக அர்தேஷிர் இரானி என்பவர் தயாரித்த அந்தப் படத்தின் பெயர் "கிஸான்கன்யா."

1664 - கலிலியோ தூக்குமேடையைச் சந்தித்த நாள்.


1973: நெதர்லாந்தில் ரயில் விபத்தில் 93 பேர் பலி.

1973: அமெரிக்க வாட்டர்கேட் விவகாரத்தில் வாட்டர்கேட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்திற்குள் சட்ட விரோதமாக புகுந்த 7 நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பமாகின.

1978: வெளிநாட்டு நிர்ப்பந்தங்கள் காரணமாக, வங்காளத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானை பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ விடுதலை செய்தார்.

1989: பிரிட்டனில் வீதியொன்றில் விமானம் விழுந்ததால் 47 பேர் பலி.

1996: ஸயர் நாட்டில் விமானமொன்று கோளாறுக்குள்ளாகி சந்தையொன்றில் விழுந்ததால் 350 பேர் பலி.

வரலாற்றில் இன்று

ஜனவரி 07



1610: கலிலியோ கலிலி ஜூபிட்டர் கிரகத்தின் நான்கு பெரிய சந்திரன்களை முதல் தடவையாக அவதானித்தார்.

1782: அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கியான அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

1785: பிரான்ஸை சேர்ந்த ஜீன் பியரி பிளங்கர்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் ஜெவ்ரி ஆகியோர் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸுக்கு பலூனில் பறந்தனர்.

 
1797: இத்தாலியின் நவீன தேசிய கொடி பாவனைக்கு வந்தது.

1919: சேர்பியாவுடன் மொன்டேநீக்ரோ இணைப்பதற்கு எதிராக மொன்டேநீக்ரோ கெரில்லாக்கள் கிளர்ச்சி செய்தனர். இப்போராட்டம் தோல்வியில் முடிவுற்றது.

1927: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடான முதலாவது தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1949 - ஜீன்ஸ் எனப்படும் மரபணுக் கூறின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது தெற்கு லிபோர்னியா பல்கலைக்கழகம்.


1950: அமெரிக்காவின் டெவன்போர்ட் நகர வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலி.

1952: அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன், அமெரிக்காவிடம் ஐதரசன் குண்டுகள் இருப்பதாக அறிவித்தார்.

1954: நியூயோர்க் நகரில் ஐ.பி.எம். தலைமையகத்தில் கணினி மூலம் மொழிபெயர்ப்பு செய்துகாண்பிக்கப்பட்டது.

1959: கியூபாவில் பிடெல்காஸ்ட்ரோவின் அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரித்தது.

1972: ஸ்பெய்னில் இடம்பெற்ற விமான விபத்தில் 104 பேர் பலி.

1980: 3 வருடங்கள் அதிகாரத்தை இழந்திருந்த இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியது.

1990: இத்தாலியின் பைஸா சாய்ந்த கோபுரம் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

1999: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மீதான நாடாளுமன்ற குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

Monday, January 7, 2013

புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...

புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...

அல்லாஹ் இவ்விறை இல்லத்தை கட்டப் பணித்த போது கிஸ்வாவைப்பற்றி ஏதும் குறிபபிடவில்லை எனினும் பண்டை காலம் தொட்டே கிஸ்வா போர்த்துவதை ஒரு வைபவமாகப் பல அரசர்களும் நடத்தி வந்ததாக வரலாற்றிலே காண முடிகிறது. கிஸ்வாவைப்பற்றி சில தகவல்களை தொகுத்துத் தருகிறார். கடடுரை ஆசிரியர் டாக்டர் பாக்கவி அவர்கள்.

முதல் கிஸ்வா

1. கி.பி 400-ல் யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி மன்னன் மக்கா வந்த போது அங்குள்ள மக்கள் அவரை சரிவர மரியாதை செலுத்தாததால் கஃபாவை இடித்துத்தள்ள எண்ணிய சமயம் கடுமையான நோய்க்குள்ளானார். அறிஞர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க நோய் நீங்கப் பெற்றார். பின்னர் கண்ட கனவின் பலனாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு கிஸ்வாவை போர்த்தியதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்ததாம்.
2. பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு செய்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.
3. கலீபா உமர்(ரலி) அவர்கள் கி.பி 634-ல் (ஹிஜ்ரி 13) எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினாhகள்.

4. கலீபா உத்மான்(ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரமளான் பிறை 27-லும் துல்ஹஜ் மாதம் ஹஜ்ஜுக்கு முன்னரும் இருமுறை கிஸ்வா அணிவிக்கப்பட்டது.

5. கலீபா முஆவியா(ரலி)யின் காலத்தில் முஹர்ரம் 10-ம் நாள் அன்று பட்டுத்துணியாலும் ரமலான் கடைசியில் கபாத்தி என்ற கட்டித் துணியாலும் போர்த்தினார்கள்.

6. இவர் காலத்தில் தான் ”லாயிலாஹ இல்லல்லாஹ்” ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை’ என்ற அரபி வாக்கியம் பொறித்த கிஸ்வாக்கள் பயன்படுத்தப்பட்டன.

7. காலப் போக்கில் ஒரு முறை அணிவித்த கிஸ்வாவை அகற்றாமலேயே அதன் மீது மீண்டும் கிஸ்வாவை அணிவித்து வந்தனர். இதனால் கஃபாவின் மீது பெருத்த பளு சேரவே ஹிஜ்ரி 160-ல் (கி.பி.775) கலீபா அல்மஹ்தீ அல் அப்பாஸி பழைய கிஸ்வாக்களை அகற்றிவிடப் பணித்தார்.

சிகப்பு, பச்சை,வெள்ளை கிஸ்வாக்கள்

8. சிகப்பு, பச்சை, வெள்ளை ஆகிய நிறங்களில் தான் ஆரம்ப காலங்களில் கிஸ்வாக்கள் போர்த்தப்பட்டு வந்தன்.

கறுப்பு நிற கிஸ்வா

கலீபா அல் நாஸிருல் அப்பாஸி காலத்தில் தான் (ஹிஜ்ரி 575 – கி.பி.1179) முதன் முதலில் கறுப்புநிறம் பயன்படுத்தப்பட்டது. அதுவே இன்று வரை தொடர்கிறது.
9. கி.பி.1342 – ஹிஜ்ரி 743 ல் எகிப்தை ஆண்ட சுல்தான் கலாவூன் கிஸ்வா தயாரிப்பிற்காகவும் கஃபாவின் பராமரிப்புக்காகவும் எகிப்து நாட்டு மூன்று விவசாய கிராமங்களின் வருமானத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
10. சுல்தான் கலாவூன் ஆட்சிக்கு 300 ஆண்டுகட்கு பிறகு வந்த உத்மானிய சுல்தான் சுலைமான் மேலும் ஏழு கிராமங்களின் வருமானங்களை வழங்கினார். கஃபாவுடன் மதீனா ரௌலா ஷரீபும் பராமரிப்பில் சேர்க்கப்பட்டது.
11. பல நூறு ஆண்டுகளாக கிஸ்வாக்கள் எகிப்திலிருந்து மக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இவைகளை கொண்டுவர 15-க்கு மேற்பட்ட ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன.

‘மஹ்மல்’ என்று அழைக்கப்படும் அழகிய பல்லாக்குகளை ஒட்டகங்கள் மேல் வைத்து அவைகளில் கிஸ்வாவின் பகுதிகளை கொண்டு வருவர்.
12. இந்த ஊர்வலம் புறப்படும் போது எகிப்தே விழாக்கோலம் பூணும், அது மக்கா வந்தடைந்ததும் இசைத் தாளங்களுடன் ஆடிப்பாடி மக்கா வாசிகள் அந்த ஒட்டகங்களை வரவேற்பர்.
13. ஹிஜ்ரி 843 – (கி.பி 1924) ல் மன்னர் அப்துல் அஸீஸ் இப்ன் ஸவூது இப்படி ஆடிப்பாடி கிஸ்வாவை கொண்டுவரும் நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு முரணாகயிருப்பதைக் கண்டித்ததால் மீனாவில் வைத்து எகிப்தியர்களுடன் மோதல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கிஸ்வாவை எகிப்து அனுப்புவதை நிறுத்திக் கொண்டது.

சவூதியில் கிஸ்வா தயாரிப்பு

14. அவ்வாண்டே மன்னர் அப்துல் அஸீஸ் இந்தியாவிலிருந்து கை தேர்ந்த தொழிலாளிகளை கொண்டு வந்து கிஸ்வா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார்.

15. 1927 –ல் (ஹிஜ்ரி 1346) இறுதியில் சவூதி தொழிற்சாலையில் தயாரிக்கப்;பட்ட கிஸ்வா போர்த்தப்பட்டது. இது பத்து ஆண்டுகள் தொடர்ந்தது.

16. 1950-ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பின்பு எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் உரிமையப் பெற்றது. இது 1962 வரை தொடாந்தது.

17. அதன் பின்னர் மன்னர் ஸவூது பின் அப்துல் அஸீஸ் ஆட்சியில் மீண்டும் கிஸ்வாவை மக்காவிலேயே தயாரிக்கத் தொடங்கினார்.

18. சுமார் 240 சவூதி கைவினைஞர்கள் பணிபுரியும் இந்த தொழிற்சாலை பிற பள்ளி வாசல்களில் விரிக்க பயன்படும் விரிப்புகளையும் தயாரித்து வருகிறது.

19. கிஸ்வாவை தயாரிக்க 670 கிலோ தூய வெள்ளைப்பட்டு நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்நூலுக்குப் பின்னர் உயர்தர கறுப்புச் சாயம் பூசுகின்றனர்.

650 சதுர மீட்டர்

20. ஒரு கிஸ்வா 47 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் 14 மீட்டர் நீளமும் 95 செ.மீ அகலமும் கொண்டது. அதன் மொத்த பரப்பு 650 சதுரமீட்டர்.

10 கோடி செலவில் கிஸவா (120 கிலோ தங்கமும் வெள்ளியும்)

21. 120 கிலோ தங்கமும் வெள்ளியும் (1க்கு 4 விகிதத்தில்) கலந்த இழைகளால் திருகுர்ஆன் வசனங்கள் மிக நுட்பமான முறையில் பின்னப் படுகின்றன. கிஸ்வா தயாரிக்க ஆகும் மொத்தச் செலவு 170 லட்சம் ரியால்கள் (சுமார் 10 கோடி ருபாய்)

தங்கத்தில் கதவு

22. கஃபாவின் கதவுகள் தரைமட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளன. இவை தங்கத்தினால் செய்யப்பட்டவை. இந்த வாயிற் பகுதியை மறைக்கும் திரை (7.5 ஒ 4 மீட்டர்) அளவுடையது. அதுவும் சிறந்த வேலைப்பாடுகளால் ஆனவை. கஃபாவின் உள்ளே செல்ல நகரும் ஏணிப்படிகளை பயன்படுத்துகின்றனர்.

23. கஃபாவின் உட்சுவர்களையும் அதன் கூரைப் பகுதிகளையும் பச்சை நிற பட்டுத் துணியால் அலங்கரிக்கின்றனர். அவைகளிலும் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்படுகின்றன.

24. ஒவ்வொரு ஆண்டும் ஷாபான் மாத்திலும், துல்ஹஜ்ஜு மாதத்திலும் கஃபாவின் உட்தளம் சந்தனத்தாலும், உயர்ரக வாசனைத் திரவியங் களாலும் கழுகப்படும். உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாமியப் பிரதி நிதிகளும் தலைவர்களும் பங்கேற்று கழுக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

புதிய கிஸ்வாக்கள்

25. ஹஜ்ஜுக்கு முன்பாக கழுகும்போது புதிய கிஸ்வா அணிவிக்கப்படும்.

26. பழைய கிஸ்வா பல சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய கலாசாலைகள், தொல் பொருட்காட்சியங் களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது.

UNO வில் கிஸ்வாவின் ஒரு புகுதி

27. கஃபாவின் வாசல் திரையினைப் போன்ற வேலைப்பாடுகள் அமைந்த (9 ஒ 2.5 மீட்டர்); அளவுடைய திரைச் சீலையை 1983-ம் ஆண்டு சவூதி மன்னர் ஃபஹ்து உலக முஸ்லிம்கள் சார்பில் அமெரிக்காவில் உள்ள உலக நாடுகள் மன்றத்து (UNO) வரவேற்பு அறையில் தொங்விட அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.

Dr. Ahmad Baqavi Ph.D.