Digital Time and Date

Welcome Note

Tuesday, January 15, 2013

லூயி பிரெய்ல் - வரலாற்று நாயகர்!

லூயி பிரெய்ல் - வரலாற்று நாயகர்!





இரவும் பகலும், இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதி. துருவ பிரதேசங்களில்கூட ஆறுமாத இருளுக்குப்பின் ஆறுமாதம் ஒளி பிறக்கும். ஆனால் எப்போதுமே இருள் சூழ்ந்த ஒரு நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நம் கற்பனைக்குகூட எட்டாத ஓர் இருள் சூழ்ந்த உலகம் இருக்கிறது அதுதான் கண்பார்வையற்றோரின் உலகம். ஐம்புலங்களில் ஆக விலைமதிக்க முடியாதது 'கண்'தான். கண் பார்வையிழந்தவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத முடங்கி கிடந்த காலம் உண்டு. அவர்களின் வாழ்வில் விடிவெள்ளியாய் உதித்து அவர்கள் எழுத, படிக்க ஓர் எளியமுறையை வகுத்துத்தந்த ஓர் அற்புத வரலாற்று மாந்தரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். அவர்தான் 'பிரெய்ல்' எனப்படும் எழுத்துமுறையை உருவாக்கித்தந்த லூயி பிரெய்ல் (Louis Braille).






1809-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக பிரான்சில் பிறந்தார் லூயி பிரெய்ல். அவரது தந்தை ஓர் தோல் வியாபாரி பலவித தோல்களை வெட்டி கைப்பைகள், பணப்பைகள், காலணிகள் போன்றவற்றை தைத்து விற்பனை செய்வார் அதுதான் அவர்களது குடும்பத்தொழில். சிறுவயதிலிருந்தே மிகவும் சுட்டியாகவும், துறுதுறுவென்றும் இருந்த பிரெயிலுக்கு தந்தையைப் பார்த்து அவரைப்போலவே தோலை வெட்டி தைத்து விளையாடுவதில் அலாதி பிரியம். அவருக்கு மூன்றே வயதானபோது ஒருநாள் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. அப்பா இல்லாத சமயம் அவர் கத்தி ஊசியுடன் தோல் தைத்து விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென்று அலறல் சத்தம் சமயலறையிலிருந்து ஓடிவந்து பார்த்த அம்மாவின் இதயத்துடிப்பு சில வினாடிகள் அடங்கிப்போனது. ஒரு கண்ணில் இரத்தம் கொட்ட வலி தாங்க முடியாமல் துடித்துக்கதறினான் பிஞ்சு பாலகன் பிரெய்ல்.


தோலில் துளைபோட உதவும் கூர்மையான ஊசிபோன்ற கருவி அவன் கண்ணை பதம் பார்த்துவிட்டது என்பதை உணர்ந்த அந்த தாய் பதறியடித்துக்கொண்டு பிரெயிலை மருத்துவமணைக்கு கொண்டு சென்றார். பிரெயிலை பரிசோதித்த மருத்துவரைப் பார்த்துக்கொண்டே பிரார்த்தனையில் மூழ்கினார் அந்த தாய். பிரெய்ல் ஒரு கண்ணில் பார்வை இழக்கப்போகிறான் என்ற செய்தியை மருத்துவரின் கவலை தோய்ந்த கண்கள் அந்த தாய்க்கு உணர்த்தின. ஒரு கண்ணில் கட்டுப்போட்டு வீட்டுக்கு அனுப்பினார் மருத்துவர். பிரெயிலுக்கு இருள் என்றாலே பயம் இரவில் தூங்கும்போதுகூட மெழுகுவர்த்தி ஒளியில்தான் தூங்குவான். சில நாட்களுக்கு பிறகு ஒருமுறை "அம்மா இருட்டிவிட்டது ஏன் இன்னும் மெழுகுவர்த்தி ஏற்றவில்லை?" என்று கேட்டான் பிரெய்ல் தாயின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது ஏனெனில் அப்போது பட்டப்பகல் நேரம்.


முதல் கண்ணில் ஏற்பட்ட காயத்தினால் இரண்டாம் கண்ணும் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வையை இழந்துவிட்டான் பிரெய்ல் என்பதை அறிந்து உள்ளுக்குள்ளேயே அழுதது அந்த தாய் உள்ளம். அப்போது பிரெயிலுக்கு வயது நான்குதான். அன்று அந்த தாய் சிந்திய கண்ணீருக்கு ஒட்டுமொத்த பார்வையற்றோர் சமூகமே இன்று நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த வயதில் ஏற்பட்ட இயலாமைதான் பார்வையற்றோரின் சரித்திர நாயகனாக பிரெயிலை பிற்காலத்தில் உயர்த்தியது. பார்வையிழந்தும்கூட இரண்டு ஆண்டுகள் வழக்கமாக பள்ளிக்கு சென்றார் பிரெய்ல். ஆனால் எழுதவும் படிக்கவும் முடியாது என்பதால் பள்ளியை தொடர முடியாமல் போனது.





பிரெயிலுக்கு பத்து வயதானபோது பாரீஸில் (paris) உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தனர் பெற்றோர். அந்தப்பள்ளியில் வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது ஆனால் எழுத கற்றுத்தரப்படவில்லை. அவர்களுக்கான எழுத்துகள் தாள்களில் புடைத்திருக்கும் அதனை விரல்களால் தொட்டு உணர்ந்து ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி வாசிக்க வேண்டும் அது மிகவும் சிரமமான ஒன்று. ஒரு வாக்கியத்தை படித்து முடிக்கும் முன் ஆரம்ப எழுத்துகள் மறந்து போகும். தம்மைப்போன்றோர் வாசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த முறை இருக்க வேண்டுமே என்று சிந்திக்கத் தொடங்கினார் பிரெய்ல்.


ஒருமுறை அந்தப்பள்ளிக்கு Charles Barbier என்ற இராணுவ வீரர் வருகை தந்தார். இரவு நேரங்களில் பேசிக்கொள்ளாமல் இராணுவ வீரர்கள் செய்திகளை பறிமாறிகொள்ள ஒருமுறையை அவர் உருவாக்கியிருந்தார். பணிரெண்டு புள்ளிகளை கொண்ட அந்த முறையில் எளிய செய்திகளை பறிமாறிகொள்ளலாம் அதனை 'sonography' என்று அவர் அழைத்தார். ஆனால் அது சிரமமானது என்று கூறி அதனை நடைமுறைப்படுத்த இராணுவம் மறுத்துவிட்டது. பார்வையற்றோர் பள்ளிக்காவது அது பயன்படட்டும் என்று Charles தனது முறையை பிரெய்ல் படித்த அந்த பள்ளியில் விளக்கிக்காட்டினார். அதனை ஆராய்ந்த பிரெய்லுக்கு அதில் நிறைய விசயங்கள் அடங்கியிருப்பதாகபட்டது. அதனை கொஞ்சம் எளிமைப்படுத்தினால் ஒரு நல்ல முறையை உருவாக்கலாம் என்று நம்பிய அவர் அடுத்த சில மாதங்களுக்கு சொந்தமாகவே பல சோதனைகளை செய்து பார்த்தார். அதன்பலன் மூன்றே ஆண்டுகளில் அவருக்கு 15 வயதானபோது ஆறு புள்ளிகளை கொண்ட ஒரு எழுத்துமுறையை கண்டுப்பிடித்தார். அதுதான் அவரது பெயரிலேயே 'பிரெய்ல்' முறை என்று இப்போது அழைக்கப்படுகிறது.




பிரெய்ல் முறையில் புள்ளிகள் தாளில் உயர்ந்து எழும்பி நிற்கும் தொடுவதன் மூலம் அந்த புள்ளிகளை உணரலாம். உதாரணத்திற்கு A என்ற எழுத்தைக்குறிக்க ஒரு புள்ளி, B என்ற எழுத்தைக்குறிக்க இரண்டு புள்ளிகள் இதேபோல் ஆறு புள்ளிகளை 64 விதமாக பயன்படுத்தும் முறைதான் 'பிரெய்ல்' முறை. அந்த முறையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்த பிரெய்ல் சில ஆண்டுகளில் கணிதத்திற்கும், இசைக்கும்கூட எழுத்து வடிவங்களை உருவாக்கினார். 1829-ஆம் ஆண்டில் தாம் உருவாக்கிய முறையை விளக்கும் புத்தகத்தை வெளியிட்டார். ஆரம்பத்தில் பிரெய்ல் முறையை அந்தப்பள்ளிக்கூடம் கண்டுகொள்ளவில்லை ஓர் ஆசிரியர் அதற்கு தடைகூட விதித்தார். ஆனால் நாளடைவில் அந்த முறையின் மகிமையை உலகம் உணரத் தொடங்கியது. குறிப்பாக பார்வையற்றவர்களின் உலகம் புத்துணர்ச்சி பெற்றது. அதுவரை எழுதவும் படிக்கவும் முடியாமல் இருந்தவர்களுக்கு 'பிரெய்ல்' முறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.


தாம் கற்ற பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றி அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார் பிரெய்ல். துரதிஷ்டமாக அவருக்கு காசநோய் ஏற்பட்டு 1852-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் தனது 43-ஆவது வயதில் அவர் காலமானார். அவர் இறந்தபிறகுதான் அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்தது பிரெஞ்சு அரசாங்கம். சரியாக நூறு ஆண்டுகள் கழித்து 1952-ஆம் ஆண்டு அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு தேசிய வீரர்களுக்காக கட்டப்பட்ட புகழ்பெற்ற 'Pantheon' அரங்கில் அடக்கம் செய்யப்பட்டது.





'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றார் ஒளவையார் கொன்றை வேந்தனில். ஆனால் அந்த கண்களே இல்லாதவர்களுக்குகூட எண்ணையும், எழுத்தையும் கொண்டு சேர்த்திருக்கிறார் லூயி பிரெய்ல். அவர் தந்த வரத்தால்தான் பின்னாளில் John Milton, Helen Keller, sir arthur pearson போன்ற கண் பார்வையற்ற வரலாற்று நாயகர்களை உலகம் சந்திக்க முடிந்தது. பிரெய்ல் நான்கு வயதிலேயே பார்வையை இழந்தபோதும் எல்லாப் பாடங்களிலும் மிகச்சிறப்பாக தேறினார் என்பதும் Chello, Organ ஆகிய இரண்டு இசைக்கருவியையும் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டார் என்பதும் நாம் வியக்க வேண்டிய் வரலாற்று உண்மைகள்.


தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே அவருக்கு இருகண்களாக செயல்பட்டன. நம்மில் பெரும்பாலோர் ஐம்புலங்களும் நன்றாக செயல்படும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். ஆனால் ஐம்புலங்களில் ஆக முக்கியமான கண்ணை இழந்தபோதும்கூட தன்னம்பிக்கையை இழக்கவில்லை லூயி பிரெய்ல். ஓர் அபூர்வ கண்டுபிடிப்பால் தன்னைப் போன்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தார் அவர். அந்த தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் நம் வாழ்விலும், பிறரது வாழ்விலும் ஓர் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் செயல்படுவோருக்கு வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுகூட இயற்கையின் நியதிதான்.


(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

வரலாற்றில் இன்று

ஜனவரி15






பிறப்புகள்



[b]காசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhav, ஜனவரி 15, 1926 –ஆகஸ்ட் 14, 1984) தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர். இவர் 1952 ஆண்டுஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[/b]




  • இறப்புகள்

காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது. தமிழில் வனம் ,
கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது
குறிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பின் 9.4% அல்லது மொத்த
நிலப்பரப்பின் ஏறத்தாழ 30% காடுகளினால் மூடப்பட்டுள்ளது. முன்னர் காடுகள்
நிலப்பரப்பின் 50% வரை மூடியிருந்ததாக மதிப்பிட்டுள்ளனர். உலகின் பல
பகுதிகளிலுமுள்ள காடுகள்காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன.
உயிர்க்கோளத்தில் முக்கியமான அம்சமாக விளங்கும் காடுகள், பல
உயிரினங்களுக்குப் புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப்பெருக்கைக்
கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள்
உண்டு.

தாசுமேனியாவில் உள்ள மிதவெப்பவலய மழைக்காடு:

காடுகளை,
மரங்களை அடிப்படையாகக் கொண்டே வகைப்படுத்துவது வழமை எனினும், காட்டுச்
சூழல்மண்டலம் , பல்வேறு வகையான விலங்குகள் , நுண்ணுயிர்கள் போன்றவற்றையும்
உள்ளடக்குகின்றன. அத்துடன், ஆற்றல் சுற்றோட்டம், உணவு வட்டம் போன்ற
இயற்பியல் மற்றும் வேதியியல் சார்ந்த செயற்பாடுகளும் இதற்குள் அடங்குவன.
சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக்
காடுகளின் சில வகைகளாகும்.

வெப்பமண்டலக் காடுகள்:
உலகில் வாழும் 50 சதவீத உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடு
காடுகள்
பல்வேறு தளங்களால் ஆன அமைப்புக் கொண்டவை. இவற்றில் மரங்களின் மேல்
பகுதிகளால் ஆன மேல்தளமும், உயரம் குறைந்த தாவரங்களினால் ஆன கீழ்த்தளமும்
அடங்கும். சிக்கல்தன்மை கூடிய காடுகளில் ஐந்து தளங்கள்வரைஇருக்கும்.
மிகவும் உயரத்தில் உள்ள மேல்தளம் உயர் மரங்களின் மேற்பகுதிகளால் ஆனது.
அதற்குச் சற்றுக் கீழுள்ள தளம் நடுத்தர உயரம் கொண்ட சிறு மரங்களால் ஆனது.
அதற்குஅடுத்த தளம் உயரம் குறைவான குறு மரங்களினால் அமையப் பெற்றது.
மேலிருந்து நான்காவது நிலையில் உள்ள தளம் செடிவகைகளைக் கொண்டிருக்கும்.
ஐந்தாவதான நிலத்தளம் புல் , பூண்டுகளினால் ஆனது. நான்காவது, ஐந்தாவது
தளங்கள் முறையே செடித்தளம் , பூண்டுத்தளம் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு.
சில வேளைகளில் நில மட்டத்தில் பாசிகளைக் கொண்டஒரு தளமும் இருப்பது உண்டு.

வளம்
மிகுந்த நிலப்பகுதிகளில் அமைந்த பெருங்காடுகளிலேயே ஐந்து தளங்களைத்
தெளிவாகக் காண முடியும். வளம் குறைந்த பகுதிக் காடுகளில் பெரும்பாலும்
மேல்தளம், கீழ்த்தளம், நிலத்தளம் என மூன்று தளங்களையே இனங்காண முடியும்.
வளமற்ற வரண்ட பகுதிகளில் உள்ள காடுகள் சிலவற்றில் தளங்களைத் தெளிவாக
இனங்கண்டுகொள்ள முடியாத வகையில் இடைப்பட்ட நிலைகளிலும் தாவரங்கள்
இருப்பதைக் காணலாம்.

சுவிட்சர்லாந்தின் அல்ப்சு தேசியப் பூங்கா பகுதியில் உள்ள ஊசியிலைக் காடு:
மரங்கள்
வளர்வதற்கு உகந்த எல்லாப் பகுதிகளிலும் காடுகளைக் காண முடியும். அடிக்கடி
தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள இடங்களையும், மனித நடவடிக்கைகளினால்
மாற்றங்களுக்கு உள்ளான சூழல் கொண்ட இடங்களையும், வேறுவகையில்
பாதிப்புகளுக்கு உள்ளான இடங்களையும் தவிர்த்து, மரம் வளர்
எல்லைக்கோட்டுக்கு உட்பட்ட எல்லா உயரங்களிலும் காடுகள்உள்ளன. 10° வடக்கில்
உள்ள குறுக்குக் கோட்டுக்கும், புவிமையக் கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில்
உள்ள காடுகள் பெரும்பாலும் வெப்பவலய மழைக்காடுகளும் , 53° வடக்கு 67°
வடக்கு ஆகிய குறுக்குக் கோடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள
காடுகள் வடதுருவப்புலக் காடுகளும் ஆகும். பொது விதியாக பூக்கும் தாவர
வகைகளைக் கொண்ட அகன்ற இலைக் காடுகளில் , வித்துமூடியிலித் தாவர வகைகளைக்
கொண்ட ஊசியிலைக் காடுகளில் இருப்பதிலும் பார்க்கக் கூடுதலான இனங்களைக்
காணமுடியும். எனினும் இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன.

காடுகளைப்
பல்வேறு வழிகளில்வகைப்பாடு செய்துள்ளனர். அவற்றுள் ஒன்று காடுகள்
அமைந்துள்ள உயிர்ச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. இந்த் வகைப்பாட்டில் அக்
காடுகளில் உள்ள முதன்மையான தாவர வகைகளின் இலைகளின் இருப்பு நிலையும்
(பசுமையிலைத் தாவரம், இலையுதிர் தாவரம்) கவனத்தில் கொள்ளப்படுகிறது.இன்னொரு
முறையிலான வகைப்பாடு காட்டிலுள்ள முதன்மை இனங்கள் அகன்ற இலைத் தாவரங்களா,
ஊசியிலைத்தாவரங்களா என்பதை அடிப்படையாகக் கொண்டது.

மடகாசுக்கரில் உள்ள அடர்த்தியற்ற ஒரு காடு.
பலரும்
பல்வேறு வகைப்பாட்டுமுறைகளை முன்மொழிந்திருந்தாலும், எல்லோரும்
ஏற்றுக்கொள்ளக்கூடியதாக எதுவும் அமையவில்லை. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் ,
உலகக் காப்புக் கண்காணிப்புமையம் என்பன இணைந்து உருவாக்கிய வகைப்பாடு பிற
வகைப்பாடுகளை எளிமையாக்கி உருவாக்கியது ஆகும். இந்த முறை உலகின் காடுகளை 26
முதன்மை வகைகளாக வகைப்படுத்துகிறது. இது, காலநிலை வலயங்களையும், மரங்களின்
வகைகளையும் கருத்தில் கொள்கிறது. இந்த 26 வகைகளையும், 6 பெரும் பிரிவுகளாக
வகைப்படுத்தலாம். அவை:

1. மிதவெப்ப ஊசியிலைக் காடுகள் ,
2. மிதவெப்ப அகலிலை மற்றும் கலப்பிலைக் காடுகள் ,
3. வெப்பவலய ஈரக் காடுகள் ,
4. வெப்பவலய வரண்ட காடுகள் ,
5. அடர்த்தியற்ற காடுகளும் புற்றரைக் காடுகளும் ,
6. வளர்ப்புக் காடுகள்
என்பன.

நன்றி அறிவுலகம்

உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!

உலகிலேயே ஊழல் நிறைந்த நாடு அமெரிக்கா - ஜாக்கிசான் ஆவேசம்............!!

உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான். அமெரிக்காவைவிட எங்கள் நாடு சிறந்தது என பிரபல ஆக்ஷன் நடிகர் ஜாக்கிசான் கூறியுள்ளார்,

அமெரிக்க
ஊடகங்கள் சமீபகாலமாக சீன அரசுக்கு எதிராகவும், சீனாவுக்கு எதிராகவும் சீன
அரசியல் தலைவர்களை இகழ்ந்தும் சீனாவில் ஊழல் மலிந்து விட்டது. அந்த
நாட்டின் பிரதமர் வென்ஜியாபாவோ உள்ளிட்ட தலைவர்கள் ஊழல் மூலம் சொத்துக்களை
குவித்துள்ளனர் என தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்க
ஊடகங்களின் இச்செய்திகள் குறித்து நடிகர் ஜாக்கிசானிடம் கருத்து
கேட்கப்பட்டபோது, அவர் அமெரிக்காவுக்கு எதிராக ஆவேசத்துடன் கருத்துத்
தெரிவித்தார். ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில்...

உலகிலேயே
ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான், சீனா அல்ல. இங்கும் ஊழல் பிரச்சினை
உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன்
ஒப்பிடும்போது சீனாவில் ஊழல் குறைவுதான். சீனர்கள் தங்களை மட்டுமே
விமர்சனம் செய்து கொள்வர், வெளிநாட்டினர்களை அவர்கள் ஒருபோதும் இகழ்வதோ
விமர்சனம் செய்வதோ இல்லை. அந்த வகையில் எங்கள் நாடு மிக சிறந்தது என்று
அவர் கூறினார்.

சங்கை ரிதுவான்

ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக,
ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசமுடியாது! (
அவர்களின் கவணம்தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில்
இருக்கும். இரண்டிலும் இருக்காது! )

மொழி :
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்!
அதனால்
தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள்.3 வயது
ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை
தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன்:
ANALYTICAL SKILLS)
ஒரு
பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய
படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம்
ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான
தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால்இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள
முடியும்.

ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

வாகன‌ம் ஓட்டுதல்:
வாகனத்தை
ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம்,
பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை
(சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை
வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.

ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.
இதற்கு
காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக
வாகனம் செலுத்தும்போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம்
வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும்
இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை
எதிர்கொள்கின்றார்கள்.

பொய்ப்பேச்சு!:
ஆண்கள் பெண்களின்
முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை
அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால்
அதை உணரமுடிவதில்லை.

காரணம் பெண்கள் பேசும் போது70% ஆன முக
மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர்.
ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்.
பல
பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும்
தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக
இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை
கண்டுகொள்வார்கள்.

ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு
பெண்னின்மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது
ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக
திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனைதீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.

தேவைகள்:
மதிப்பு, வெற்றி, தீர்வுகள்,பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை:
ஒரு
பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை
இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது

உரையாடல்:
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

நடவடிக்கை:
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறி வியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.

RIYASdotCOM