வயதுக்கு வந்த பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் !!!!
பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.
இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு
மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப்
பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும்
கவனிக்க வேண்டியது அவசியம்.
டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?
* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு
வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.
*
சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல்,
ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த
வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள்
தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும்,
பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.
* அடுத்து,
இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது
மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம்.
அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த
வேண்டும்.
* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது
உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி
மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி
இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக்
கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக்
கொள்வது பற்றியும் கூற வேண்டும்.
* வேலைக்கு செல்லும் தாய்மார்கள்
தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக
செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச
வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை
வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.
* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக
அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை
சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால்,
படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை
மேம்படும்.
இன்று ஒரு தகவல்
Digital Time and Date
Welcome Note
Monday, January 21, 2013
சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு !!!
சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு !!!
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமால் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.
பல்லாயிரக்கணக்கான திரை ரசிகர்களுக்கு நகைச்சுவை எனும் மருந்து தந்த அந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை எவ்வளவு சோகம் நிறைந்தது தெரியுமா? சோகத்திலும் சிரித்த அந்த உன்னத கலைஞனின் கதையைத் தெரிந்துகொள்வோம்.
1889 ஏப்ரல் 16 ந்தேதி லண்டனில் பிறந்தார் சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின், அவரது பெற்றோர்கள் மேடை இசை கலைஞர்கள், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். மேடைக்கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே தீர்த்தார் தந்தை அதன் பலன் நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறு வயது சாப்ளின். 5 வயதே ஆனபோது சார்லி சப்ளினின் முதல் மேடை அரங்கேற்றம். தாய் நோய்வாய்ப்பட்டதால் பையனை மேடைக்கு தள்ளினார் தந்தை மிரண்டுபோன சாப்ளின் மேடையில் ஏறி தனக்குத்தெரிந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பாடினார் அதனால அவரை மேடையிலிருந்து இழுத்துச்செல்லும் நிலைமை ஏற்பட்டது.
அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலி வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14 ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
1913 ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ’ என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு நல்ல வாய்ப்பை வழயங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார் 'மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும் கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே '20 minutes of love’ என்ற முதல் படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. தனது எல்லா படங்களிலும் எல்லோரையும் சிரிக்க வைத்த சாப்ளினின் திருமண வாழ்வில் கசப்புக்கு மேல் கசப்பு ஏற்பட்டது.
1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்துகொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின்.
சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான தி கிட் 1921 ல் வெளிவந்தது தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925 ல் 'தி கோல்ட் ரஷ்’ என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை மேலும் அவர் கம்யுனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.
1951 ல் 'தி லைம் லைட்’ என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம் 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார். 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.
அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அதோடு 'Los angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார். 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.
"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"
என்று கூறுகிறார் சாப்ளின். அதை கூறியது மட்டுமல்ல அதனை வாழ்ந்தும் காட்டினார். இன்று வாய்விட்டு சிரிக்க நினைக்கும் மில்லியன் கணக்கானோர் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். இது ஒன்றே அந்த மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டு சென்றிற்கும் மாபெரும் சொத்தாகும்.

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி.............
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி.............
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும்....
"இன்று இந்துக்கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை, பாரம்பரியம்,
புனிதநூல்களைத் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் கிண்டல்
பண்ணுகிறார்கள். கிறித்தவ பாதிரிகள், முசுலீம் மௌல்விகள் என்றால் பெரிய
மகாத்மா போலவும், கோயில் பூசாரிகள் – இந்துத் துறவிகள் கயவர்களாகவும்
சித்தரிக்கப்படுகிறார்கள். எனவே வானொலி, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்
போன்றவற்றில் இந்துக்களை இழிவுபடுத்தும் எந்தக்கருத்தும் வராமல் தடை செய்ய
வேண்டும். அதனைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.”
- “இந்துக்களுக்கு உரிமைகிடையாதா?” – இந்துமுன்னணிவெளியீடு.
இந்து தர்மம், பண்பாட்டை யாரும் வெளியிலிருந்து மெனக்கெட்டு கிண்டல்
பண்ணத் தேவையில்லை; வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள்,
ஸ்ருதிகள், ஸ்தோத்திரங்கள் இவற்றையெல்லாம் இந்து முன்னணியே மலிவு விலையில்
அச்சடித்து வெளியிட்டாலே போதும். கடவுளர்கள் உருவான கதை, ஊடல் – கூடல்
-ஆபாசங்கள், தேவலோக அழகிகளான ரம்பா – ஊர்வசி – மேனகைகளிடம் கடவுள்களும்,
முனிவர்களும் மயங்கிய கதைகள், அய்யப்பன் – விநாயகர் பிறந்த கதைகள் இன்ன
பிறவற்றையெல்லாம் மக்கள் தெரிந்து கொண்டு ‘ப்பூ இந்து தர்மம் இதுதானா’
என்று ஒதுக்கி விடுவாரகள். அப்படித் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே
இந்து மதவெறியர்களும் – உபந்நியாசம் செய்பவர்களும் இந்து தர்மம் – பண்பாடு
பற்றி பூடகமாகவும் தமிழ்ச் சிறு பத்திரிகைகளின் புதுக்கவிதை பாணியில்
புரியாமலும் பேசி வருகிறார்கள்.
”நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு
புட்பம் சாத்தியே, சுற்றி வந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட
கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ” என்று சித்தர்கள் அன்று
கேட்டார்கள். புத்தர், மகாவீரர், சார்வாகர், நியாயவாதிகள், மீமாம்சவாதிகள்,
பூதவாதிகள் என்று பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய அனைவரும் ‘இந்து
தர்மத்தை’ புரியும்படி மக்களிடம் விளக்கியதற்காகவே ஒடுக்கப்பட்டார்கள்.
அவர்களுடைய இலக்கியங்களும் பெருமளவு அழிக்கப்பட்டன.
தற்காலத்தில்
அம்பேத்கரும், பெரியாரும் இதைச் செய்ததற்காகவே இந்து மதவெறியர்களால்
கேவலமாக ஏசப்படுகிறார்கள். ”எல்லாம் இறைவன் செயல் என்றால் கொலை கொள்ளை எவன்
செயல்?” என்ற திராவிடர் கழகப் பிரச்சாரத்திற்கு, ‘எல்லாம் மனிதச் செயல்
என்றால் ஈ.வெ.ராவிற்கும் மணியம்மைக்கும் குழந்தையில்லையே ஏன்?’ என்று இந்து
முன்னணி தனது வெளியீடு ஒன்றில் பதிலளித்திருக்கிறது. இதுபோக ‘பெரியாரைக்
கொளுத்துவோம்’ என இராம.கோபாலன் பகிரங்கமாக அறிவிக்க முடிகிறது என்றால்
அதன்பின்னே வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் டன் கணக்கில் உள்ளது.
ஆகவே, ‘இந்து தர்மத்தை’ அம்பலப்படுத்தும் அதாவது இழிவுபடுத்தும் அனைவரும்
இன்றுவரை ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மை. ‘இந்து
தர்மத்தை’ விமரிசிப்பதற்கெதிரான தடை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஏதோ
புதிதாக விதிக்க வேண்டும் என இந்து முன்னணி கோருவதன் பொருள் தண்டனையை
அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.
அடுத்து வானொலி – வானொளியில் இந்து மதம் இழிவுபடுத்துப்படுகிறது என்பது உண்மையா? நிச்சயம் கிடையாது.
இந்நாட்டு உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தின் புராணப்
புரட்டுக்கள்தான் தொடர்ந்து ஒலி-ஒளி ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.
இராமானந்த சாகரின் இராமாயணம், சோப்ராவின் மகாபாரதம், சாணக்கியன்,
ஸ்ரீகிருஷ்ணா, ஜெய் அனுமான், சிவமகாபுராணம் முதலான ஏராளமான புராணக் கதைகள்
தூர்தர்சனிலும், தனியார் அலைவரிசைகளிலும், இந்தி மற்றும் தேசிய மொழிகளில்
மாற்றம் செய்யப்பட்டும் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. தீபாவளி, ஓணம்,
ஹோலி, ரக்சாபந்தன், விநாயகர் சதுர்த்தி, இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி,
சரஸ்வதி பூஜை, வருடப்பிறப்பு போன்ற இந்துப் பண்டிகை நாட்களில் சங்கராச்சாரி
அருளுரையுடன் துவங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனைய மதப் பண்டிகைகளுக்குக்
கிடையாது.
மேலும் விநாயகர் ஊர்வலம் பம்பாயிலிருந்தும், கிருஷ்ண
ஜெயந்தி மதுராவிலிருந்தும், தியாகய்யர் உற்சவம் திருவையாற்றிலிருந்தும்,
அமர்நாத் யாத்திரை ஜம்முவிலிருந்தும், ஜெகந்நாதரின் தேரோட்டம்
பூரியிலிருந்தும், தசரா ஊர்வலம் மைசூரிலிருந்தும், காளி பூஜை
கல்கத்தாவிலிருந்தும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலிருந்தும், ஓணம் ஊர்வலம்
திருவனந்தபுரத்திலிருந்தும், மகர விளக்கு ஐயப்பன் கோவிலிலிருந்தும்
நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. குடமுழுக்கு, தேரோட்டம் போன்ற உள்ளூர்
நிகழ்ச்சிகள் வானொலி மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. இவைகளுக்காகப் பலகோடி
ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஒலி – ஒளிபரப்பு நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இத்தகைய சலுகை ஏனைய மதங்களுக்குக் கிடையாது. மேலும் ராமனைக் கசிந்துருகும்
கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளானாலும் சரி, மாணவர்களின் தமிழ்ப்பாட நூலின்
கடவுள் வாழ்த்துப் பகுதியில் இடம் பெறும் திருவாசகமானாலும் சரி
பார்ப்பனியத்திற்குத் தரப்படும் முக்கியத்துவத்தில் நூற்றிலொரு பங்கு கூட
முசுலீம் – கிறித்தவ மதங்களுக்குக் கிடையாது.
காலனிய ஆதிக்கத்தை
எதிர்த்துப் போராடி உயிர் துறந்த இந்திய அரசர்களில் முதன்மையானவன் திப்பு.
அவன் பிறப்பினால் ஒரு முசுலீம் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். கும்பல் திப்புவைக்
கட்டோடு வெறுக்கிறது. ‘திப்பு சுல்தான்’ தொடரை ஒளிபரப்பியதற்காக பல
தூர்தர்சன் நிலையங்கள் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டன. அதன்பிறகு
தொடருக்கு முன்னால் ”இது உண்மைக் கதையல்ல, கற்பனைச் சம்பவங்கள் நிறைந்தவை”
என்ற அறிவிப்போடு பல சமரசங்களுடன்தான் திப்புவின் தொடர் ஒளிபரப்பானது.
”திப்புவின் வரலாறு பொய், இராமாயணம் உண்மை” என்று வரலாற்றையே இந்த
மதவெறியர்களால் புரட்டிப் போட முடிகிறது என்றால் இந்த முட்டாள்தனத்தை
தாலிபான்களின் ஆட்சியில் கூடக் காண முடியாது.
’47 பிரிவினையின்
போது நடந்த இந்து – முசுலீம் கலவரப் பின்னணியை வைத்துத் தயாரிக்கப்பட்ட
‘தமஸ்’ தொடரையும் இந்துமத வெறியர்கள் எதிர்த்தனர். பார்ப்பன இந்து மதம்
விதவைகளை எப்படிக் கேடாக நடத்துகிறது என்பதைக் கருவாகக் கொண்ட
தீபாமேத்தாவின் ‘வாட்டர்’ படப்பிடிப்பையே ஆர்.எஸ்.எஸ். கும்பல் தடை
செய்திருக்கிறது. சரஸ்வதியை உள்ளபடி நிர்வாணமாய் வரைந்தார் என்பதற்காக
ஓவியர் எம்.எப். உசைனைத் தாக்கியதும் இவர்கள்தான்.
இந்தியாவின் திரையுலகமும் கூட பார்ப்பனியத்தின் பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்ட ஊதுகுழலாகத்தான் இருக்கின்றது.
இந்தித் திரையுலகைக் கட்டுப்படுத்துவது பால்தாக்கரேவின் சிவசேனா
கும்பல்தான். ‘ரோஜா’ படத்தில் காசுமீர் முசுலீம் மக்களைக் கேவலப்படுத்திய
மணிரத்தினம், ‘பம்பாய்’ படத்திலும் முசுலீம்களைக் கலவரக்காரர்களாக
உண்மைக்கும் புறம்பாகச் சித்தரித்ததனாலேயே தாக்கரேயின் பாராட்டையும்,
அனுமதியையும் பெற்றார். மணிரத்தினத்தின் இத்தகைய படங்கள் தூர்தர்சனின் ஏதோ
ஒரு அலைவரிசையால் மாதந்தோறும் இப்போதும் திரையிடப்படுகிறது. பாகிஸ்தான்
எதிர்ப்பை வைத்து முசுலீம்களை பயங்கரவாதிகளாக – வில்லன்களாகக் காட்டும்
படங்கள் தற்போது ஏராளம் வருகின்றன. முசுலீம்களையும், கம்யூனிஸ்டுகளையும்
கேவலப்படுத்தி ஹாலிவுட்டில் 80-களில் வந்த படங்களின் போக்கிற்கு இணையானது
இது.
விஜயகாந்த், அர்ஜுன் போன்றோரது ‘தேசபக்தி’ப் படங்களிலும்,
தெலுங்கின் மசாலாப் படங்களிலும், அவ்வளவு ஏன் கடவுளைக் கேலி செய்து
வெளிவந்த வேலுபிரபாகரனின் ‘புரட்சிக்காரன்’ படத்திலும் ‘பின்லேடன்’தான்
வில்லன். தாடியும், குர்தாவும், கண்களில் தெறிக்கும் வெறியும் கொண்ட
முசுலீம் பயங்கரவாதிகளாய் இவர்கள் காட்டப்படுகிறார்கள். மேலும் முசுலீம்
கிறித்தவப் பெயர் கொண்டவர்களே கடத்தல்காரர்களாகவும், சட்ட விரோதத் தொழில்
செய்பவர்களாகவும் திரைப்படத்தில் தோன்றுவது இந்தியத் திரை மரபாகவே
நிலைபெற்று விட்டது. பார்ப்பனியத்தின் பண்பாட்டை ஆதரிப்பவரே நல்ல முசுலீம் –
கிறித்தவராகத் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்றனர்.
திராவிட
இயக்கத்தின் தூண்டுதலில் வந்த எம்.ஆர்.இராதாவின் (பார்ப்பனியத்தின் சமூக
விரோதத் தன்மையை எதிர்த்து வந்த) படங்களும், நாடகங்களும், கல்லடியும்,
சொல்லடியும் எதிர்கொண்டே மக்களிடம் சென்றன. இவரைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள்
அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சமரசத்திற்கிணங்க
பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகி விட்டனர். தி.மு.க.வின் முன்னாள்
கொ.ப.செ.யான ராஜேந்தர் தீவிரமான ஆஞ்சநேய பக்தர், பக்திப் படங்களை மாதம்
ஒன்று என எடுத்துத் தள்ளும் இராம நாராயணன் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக
இருந்தவர்.
தன் மகனுக்கு ‘பிரபாகரன்’ என்று பெயரிட்டு
மகிழ்ந்தவரும், தனது ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை விடுதலைப் புலிகளின்
தலைவர் பாராட்டியதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவருமான நடிகர்
விஜயகாந்த், ஒரு மாதிரி தேசியம் கலந்த தமிழ்ப் பற்றாளனாகக் காட்டிக்
கொள்பவர். ‘கள்ளழகர்’ தொடங்கி பின்னர் வெளிவந்த ‘நரசிம்மா’ வரை
இராம.கோபாலனுக்குப் போட்டியாகப் பேச ஆரம்பித்திருக்கிறார் விஜயகாந்த்.
‘நரசிம்மா’ படத்தில் ”இந்தியாவில் ஒரு முசுலீம், ஜனாதிபதியாக, கிரிக்கெட்
காப்டனாக மாறமுடியும், உங்க பாகிஸ்தானில் ஒரு இந்து வரமுடியுமா? இங்கே
ஏராளம் மசூதிகள் கட்ட முடியும், உங்க பாகிஸ்தானில், இந்துக் கோவில்கள் கட்ட
முடியுமா?” என்று ஒரு காசுமீர் முசுலீம் ‘தீவிரவாதியிடம்’ விஜயகாந்த்
வாதிடுகிறார்.
எனவே, தமிழ்த் திரையுலகின் மணிரத்தினம், விசு,
பாலசந்தர், ஜீ.வி., சங்கர், கமலஹாசன், பாலகுமாரன், சுஜாதா, வாலி போன்ற
பார்ப்பனர்களானாலும், விஜய்காந்த், பாரதிராஜா, எஸ்.தாணு, இளையராஜா,
வைரமுத்து போன்ற சூத்திர – பஞ்சமர்களானாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து
தேசபக்த – பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்டவர்கள்தான். பிரபல பின்னணிப்
பாடகியான சித்ரா சென்னை ஆர்.எஸ்.எஸ். குரு பூஜையில் வருடந்தோறும் பாட்டுப்
பாடுகிறார். கௌதமி, எஸ்.வி.சேகர், விசு, விஜயசாந்தி, சத்ருகன்சின்ஹா,
விக்டர் பானர்ஜி என இந்திய அளவில் திரை நட்சத்திரங்கள் பா.ஜ.க.வில்
குவிந்து கிடக்கின்றனர். இராமாயணத் தொடரில் இராமன், சீதையாக நடித்த
நடிகர்கள் கூட பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களாக
நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
அரசியல் மற்றும் மக்களின்
போராட்டங்களைப் பதிவு செய்யும் ‘டாக்குமென்டரி’ பட உலகிலும் இந்து
மதவெறியர்களை எதிர்த்து ஏதும் செய்ய இயலாது.
அத்வானியின் ரத
யாத்திரையை வைத்து இந்து மதவெறியர்கள் நடத்திய ‘ராமஜென்ம பூமி’க்
கலவரங்களைப் பதிவு செய்து ‘கடவுளின் பெயரால்’ என்ற ஆவணப் படத்தின் மூலம்
அம்பலப்படுத்தியவர் ஆனந்த் பட்வர்த்தன. அந்தப் படம் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பக்கூடாது என்ற அரசு உத்தரவை முறியடிக்க அவர் 8 ஆண்டுகள்
நீதிமன்றத்தில் போராட வேண்டியிருந்தது. அதேபோல ரூப் கன்வர் என்ற இளம்
பெண்ணை உடன்கட்டையேற்றிக் கொன்ற பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தைப் பதிவு
செய்து ஒரு குறும்படமாக்கிய 5 பெண் பத்திரிகையாளர்களுக்கும் அதே
நிலைமைதான். போலீசு நடத்திய வெறியாட்டத்திற்குப் பிறகு, கொடியங்குளத்தின்
அவலத்தை வீடியோவில் பதிவு செய்து தாழ்த்தப்பட்ட மக்களிடம் திரையிட்டது
‘புதிய தமிழகம்’ கட்சி. அதைக்கூட தடை செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டவர்
இந்து முன்னணி இராம.கோபாலன்.
இப்படி காட்சி ஊடகத்தில் மட்டுமல்ல,
செய்தி ஊடகத்திலும் பார்ப்பனியமே தலைதூக்கித் துரத்துகிறது. இந்தியாவின்
அநேக மாத, வார, நாளிதழ்கள் பார்ப்பன – மேல்சாதியினரிடமே இருப்பதால் இந்து
மீட்புவாதத்திற்கும், பிற்போக்குத் தனங்களுக்கும் கோட்டையாக அவை
விளங்குகின்றன. ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம், வார – மாத ராசி பலன்கள்,
சாமியார்களின் அருளுரைகள், கோவில் யாத்திரைகள் எல்லாம் இந்தப்
பத்திரிகைகளில் நிரம்பி வழியும். எல்லா மதத்தினரும் வாங்கிப் படிக்கும்
குமுதம், விகடன் வகையறாக்கள் தீபாவளிக்கு மூன்று புத்தகங்கள் வெளியிடும்.
ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்காக மூன்று பக்கங்களைக் கூட
அதிகரிக்காது.
உள்நாட்டு – வெளிநாட்டு சினிமா கிசுகிசுக்கள்
நிரம்பி வழியும் தினமலரின் வாரமலர் பக்கங்களில் கீழே ராமகிருஷ்ண பரமஹம்சரது
பொன்மொழிகள் தவறாமல் இடம் பெறும். ‘பொய்யே உன் பெயர்தான் தினமலரா’
என்பதற்கேற்ப தமிழகம் முழுவதும் ஜெலட்டின் குச்சிகளும், ஐ.எஸ்.ஐ.
உளவாளிகளும் நிரம்பி வழிவதாக இப்போதும் கூசாமல் எழுதுகிறது தினமலர்.
பா.ஜ.க.வின் அரசியலை ஆதரிப்பதற்குத் தனது தலையங்கப் பக்கத்தையே
ஒதுக்கியுள்ளது தினமணி. தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து,
இந்தியாடுடே போன்ற பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களில் பலர் ஆர்.எஸ்.எஸ்.
கும்பலைச் சேர்ந்தவர்கள்தான்.
இந்து மதவெறியர்களுக்கு நேரடிப்
புரவலராக இருக்கும் தினமலர், பார்ப்பனியத்தின் இலக்கியப் பத்திரிகையான
காலச்சுவட்டிற்கும் புரவலராக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தனது அலுவலகத்திலேயே
பெருமையுடன் விற்பனை செய்யும் ஜெயமோகனின் ‘விஷ்ணு புரம்’ நாவலுக்கு பணஉதவி
செய்தவர் பொள்ளாச்சி மகாலிங்கம். கோக் – பெப்சி முகவராக இருக்கும்
மகாலிங்கத்தின் கல்லூரிகளில்தான் ஆர்.எஸ்.எஸ்.இன் பயிற்சி முகாம்கள்
இன்றும் நடக்கின்றன. ”எங்கே பிராமணன், மகாபாரதம், இராமாயணம்” இவற்றை வைத்தே
‘அரசியல்’ பத்திரிகை நடத்தும் ‘சோ’ தனது பா.ஜ.க. விசுவாசத்திற்குப் பரிசாக
ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைப் பெற்றார். இவரைப்போலவே இந்து மதவெறியரின்
பத்திரிகையாளராக இருந்த அருண் சோரி – இன்று அமைச்சர் பதவியையே பரிசாகப்
பெற்றிருக்கிறார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கில –
இந்தி நாளேடுகள் பல பாபர் மசூதி இடிப்பிலும், மண்டல் கமிசன்
பிரச்சினையிலும், பா.ஜ.க.வின் ஊதுகுழலாய்ச் செயல்பட்டன. முலாயம்சிங்
முதலமைச்சராக இருந்தபோது 90-ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற அயோத்தி கரசேவை
கலவரத்தில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாகப் பொய்ச் செய்தி
வெளியிட்ட ஆஜ், தைனிக் ஜாக்ரண், சுதந்திர சேத்னா, சுதந்திர பாரத் எனும் 4
இந்தி இதழ்கள் ‘இந்திய பிரஸ் கவுன்சிலினால்’ கடும் கண்டனம் செய்யப்பட்டன.
இக்கண்டனத்தைக் கூட ஏனைய தேசியப் பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்து விட்டன.
சட்டரீதியில் மதச் சார்பின்மை என்று சொல்லிக் கொண்டாலும் செய்தி ஊடக
நிறுவனங்களில் இயல்பாக உள்ள ‘இந்து’ ஆதிக்கம் சிறுபான்மை மக்களைத்
தனிமைப்படுத்துகிறது. போட்டி மதவாதம் எழுவதற்கு இத்தகைய இந்து செய்தி
நிறுவனங்களும் ஒரு காரணமாகின்றது.
மொத்தத்தில் நம் நாட்டின்
காட்சி – செய்தி – பொழுதுபோக்கு ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனமயமாக்கப்பட்டு
இந்து மத வெறியின் பக்கவாத்தியங்களாகச் செயல்படுபவைதாம். இருப்பினும்
பார்ப்பனியத்தின் சென்சார் கண்களில் சிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக
எழும் ஒன்றிரண்டு கலகக்குரல்களையும் நெரிக்க வேண்டும் என்பதுதான் இந்து
மதவெறி பாசிஸ்டுகளின் விருப்பம். இட்லரின் இந்திய வாரிசுகள் வேறு எப்படி
இருப்பார்கள்?
நன்றி :வினவு
இலங்கை மற்றொரு அழிவை நோக்கியா?
இலங்கை மற்றொரு அழிவை நோக்கியா?
இதை முழுமையாக வாசிக்கவும்
சுத்த பைத்தி யக்காரத் தனம்.
இப்படித் தான் சில இன வாதிகளால் ஆரம் பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் விரோ தப் பிரசாரங்களை வர்ணிக்க வேண்டும்.
சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டு, களம் இறங்கியுள்ள இச்சிறிய
சக்தியின் செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்திற்கு அபாயகரமானவை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இச் சக்திகளின் செயற்பாடுகள் நாடு தழுவிய ரீதியில் சூடு பிடித்துள்ளன.
அண்மையில் இரு முஸ்லிம் நடை பாதை வியாபாரிகள் சில பெளத்த பிக்குகளால்
எம்பிலிப்பிட்டியவில் தாக்கப்பட்டனர். இது குறித்த முறை யீட்டை ஏற்க மறுத்த
பொலிஸார், பிறகு ஜே.வீ.பியின் தலையீட்டை அடுத்தே முறைப்பாட்டைப் பதிவு
செய்துள்ளனர். வாளோடு காட்சி தரும் ஒரு மனிதன் ‘பள்ளிவாயலை அகற்று, அல்லது
நாம் அகற்றுவோம்’ என்று கூறுவது போல் சித்தரிக்கும் சில சுவரொட்டிகள்
மஹியங்கனையில் ஒட்டப்பட்டிருந்தன.
தனது மூன்றாவது பிரசவத்திற்காக
வந்திருந்த முஸ்லிம் பெண்ணிற்கு பலவந்தமாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய
முயன்ற, அரசாங்க வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் பற்றிய தகவல்கள் அண்மையில்
வெளியானது.
மூன்று வாரங்களுக்கு முன் மக்கொ னைப் பகுதியில்,
அப்பகுதியில் வாழும் சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களைச்
சேர்ந்தவர்களால், பெளத்த பிக்கு ஒருவரின் ஓராண்டு மறைவை நினைவு கூறும்
வகையில், வைத்திய முகாமொன்று ஒழுங்கு செய்யப்பட்டது. மறைந்த பிக்கு எல்லா
சமூகங்களைச் சேர்ந்தவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டவராவார். அப் பகுதி
பள்ளி நிர்வாகிகள் அவரது இறுதி யாத்திரையின் போது, அவரது சடலத்தை சுமந்து
சென்றிருந்தனர்.
குறித்த வைத்திய முகாம் நடை பெற்றுக் கொண்டிருந்த
போது, இரண்டு இனம் தெரியாத பிக்குகள், மேலும் சிலருடன் ஆடம்பர வாகன
மொன்றில் அவ்விடத்திற்கு வருகை தந்து, வைத்திய முகாமை மூடி விடுமாறு
கேட்டுக் கொண்டனர். முகாமை ஒழுங்கு செய்யும் பணியில் கலந்து கொண்டிருந்த
பிக்கு ஒருவர் நிலமையை விளக்க முயன்றபோது, அவர் எச்சரிக்கப்பட்டதோடு, வைத்
திய முகாமை பலவந்தமாக மூடவும் செய்தனர்.
சமூகங்களுக்கிடையிலான
நல்லுற வைக் குலைக்கும் இந்த வெளி நபர்கள் யார்? இச்சக்திக்கு நிதியுதவி
செய்பவர்கள் யார்? நிதியுதவி மேற் கொள்ளப்படுவதன் நோக்கம் என்ன? எவ்வாறு
அவர்கள் சுதந்திரமாக செயற் படுகிறார்கள்? இவையே இன்றுள்ள விடை காணப்பட
வேண்டிய வினாக் களாகும். இக்குழுவினரின் செயற் பாடுகள் சமாதானத்தை
விரும்பும் மைய நீரோட்ட சிங்கள சமூகத் தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்
துவதில் சந்தேகமில்லை.
எவ்வாறாயினும், சட்டத்திற்கு முரணாக
செயற்படும் இக்குழுவின ரை சட்டத்திற்கு முன்கொண்டு வருவதற்கான எவ்வித
நடவடிக் கைகளும் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை. இது தொடர்பில் இன்று வரை
முஸ்லிம் சமூகம் குறிப்பிடத் தக்க சகிப்புத் தன்மையை வெளிப்
படுத்தியுள்ளது. ஆனால், இச்சகிப்புத் தன்மை எது வரை தொடரும் என்பதே கேள்வி.
ஒரு கட்டத்தில், சில முஸ்லிம்கள் தமக்கெதிரான பிரச் சாரங்களுக்கு எதிராக,
எதிர்மறையான துலங்களைக் காட்டலாம். அத்தகைய துலங்கல் முஸ்லிம் விரோத
நிகழ்ச்சி நிரலை மேலும் பலப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தப்படலாம்.
யுத்தம் ஏற்படுத்திய காயங்கள் எவ்வளவு ஆழமாக இருப்பினும், விடுதலைப்
புலிகள் மீதான இராணுவ வெற்றியைத் தொடர்ந்து, எல்லா சமூகங்களும் ஒரு
சிறப்பான எதிர் காலத்தை நோக்கி நடை போடலாம் என்ற நம்பிக்கை நாடு முழுதும்
பரவியது. அந்நம்பிக்கையில் இவ்வின வாத சக்திகள் மண்ணை வாரி இறைக் கும்
கைங்கரியத்தை தற்போது மேற் கொண்டு வருகின்றன.
மைய நீரோட்ட
சிங்களவர்களின் மனங்களை முஸ்லிம்களுக்கு எதிரா கத் திசை திருப்பும்
இவ்விஷப் பிரச்சா ரம் சிறிய, ஆனால், நன்கு ஒழுங் கமைப்பட்ட சிறிய
குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது. 19 சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமான இணைய
தளங்கள் இவர்களது பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
முதலில் அநுராதபுரத்தில் நானூறு ஆண்டுகள் பழைமையான தர்ஹா ஒன்றை
தகர்த்தார்கள். பிறகு பிரதம பெளத்த பிக்குவின் தலைமையில் தம்புள்ளை
பள்ளிவாசல் மீதான தாக்குதல் இடம்பெற்றது. ஒரு பள்ளிவாசலைத் தாக்கி, ஜும்ஆ
தொழுகையை ஒரு ரவுடிக் கும்பல் தடை செய்வது இதுவே இலங்கை வரலாற்றில் முதன்
முறையாகும்.
அதிலிருந்து ஆரம்பித்து சிறியதும், பெரியதுமாக பள்ளி
வாயல்களை இலக்கு வைத்து பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், இத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்ட ’வெளி நபர்கள்‘ இதுவரை
சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை.
முஸ்லிம் வியாபார நிலையங்களைப்
பகிஷ்கரிக்குமாறும், முஸ்லிம்களுக்கு காணி, கட்டிடங்களை விற்பனை செய்ய
வேண்டாம் என்றும் கோரும் துண்டுப் பிரசுரங்கள் நாடு பூராகவும் இன்று
விநியோகிக்கப்படுகின்றன.
இப்பிரசாரத்தை முன்னெடுப்பவர்கள் ஒரு
மில்லியன் இலங்கையர்கள் முஸ்லிம் நாடுகளிலேயே பணி புரி வதையும், இதனால் ஆறு
பில்லி யன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணி நாட்டுக்குக் கிடைப்
பதையும் மறந்து விட்டார்களா?
நாட்டின் மசகு எண்ணெய்த் தேவை யில்
பெரும்பகுதியை இந்நாடுகளே பூர்த்தி செய்கின்றன. எமது தேயிலை, பாரம்பரியமற்ற
ஏற்றுமதிப் பொரு ட்கள் என எமது ஏற்றுமதிகளின் குறிப்பிடத்தக்க ஒரு வீதம்
முஸ்லிம் நாடுகளை நோக்கியதாகவே அமை ந்துள்ளது. இந்நாடுகளில் இரு ந்து
பெருமளவிலான உல்லாசப் பிர யாணிகள் இங்கு வருகை தருகின் றனர். பல முஸ்லிம்
முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்கின்றனர்.
இறுதி யுத்தத்தில்
மேற்குலகும், கீழைத்தேய பெளத்த நாடுகளும் கைவிரித்த போது, பாகிஸ்தான்,
லிபியா, ஈரான் போன்ற நாடுகளே இலங்கைக்கு இராணுவ உதவிகளை மேற்கொண்டன. கடந்த
மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்குச்
சாதகமாகவே வாக்களித்தன. முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் முஸ்லிம் உலகில்
இலங்கைக்கு இருக்கும் இத்தகைய சாதகமான நிலைக்கு அச்சுறுத்தலாக அமையாதா?
அனைத்துக்கும் மேலாக விடுதலைப் புலிகளுக்கு முஸ்லிம்கள் தமது ஆத ரவை வழங்க
முன்வராமையே நாடு பிரிவினைக்கு உள்ளாகாமல் இருப் பதை உறுதி செய்தது.
குறிப்பாக யுத்தத்தின் ஆரம்ப கட்டங்களில், இலங்கை இராணுவம், போதிய
வளங்களைக் கொண்டிராத காலப் பகுதியில், முஸ்லிம்கள் தம் ஆதரவுக் கரத்தை
விடுதலைப் புலிக ளுக்கு நீட்டியிருந்தால், தமிழீழம் உருவாகியிருக்கலாம்.
எனினும், பல்வேறு இழப்புகள், தியாகங்களை மேற்கொள்ள முன்வந்தார்களேயன்றி,
முஸ்லிம் சமூகம் அத்தகையதொரு முடிவை எடுக்கவில்லை.
எனவே, யாருடைய
நலவுக்காக இவ்வினவாதக் கும்பல் செயற் படுகிறது? மேற்குலக கிறிஸ்தவர்
களையும், கிழக்குலக ஹிந்துக்களை யும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிய
பிறகு, தற்போது உலகளவில் பெளத்தர்களையும் முஸ்லிம்களுக்கு எதிரான பகடைக்
காய்களாக மாற்ற யூத சக்திகள் முயல்கிறார்கள் என்பதை இவர்கள்
அறிந்திருக்கிறார்களா?
தம்புள்ளை தாக்குதலைப் போலவே, பங்களாதேஷ்
பெளத்தர்க ளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டவர் களும் வெளியிடங்களில்
இருந்து வர வழைக்கப்பட்டவர்கள் என அறிக்கை கள் கூறுகின்றன.
வொஷிங்டன்- டெல்அவிவ்- புதுடில்லி என்ற முஸ்லிம் விரோத அச்சின் இன்னொரு
அங்கமே இலங்கையில் நடந்தேறிக் கொண்டிருப்பதாக பலர் சந்தேகிக்கின்றனர்.
எனவே, சிங்கள சமூகத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த சக்திகள் இது தொடர்பில்
தலையிட்டு, நாட்டை மற்றொரு அழிவில் இருந்து பாதுகாப்பதற்கு முன்வர வேண்டிய
மற்றொரு முக்கிய வரலாற்றுக் கட்டத்தை நாடு தற்போது கடந்து கொண்டிருக்கிறது.
இந்திய இனவாத அமைப்புக்கள் 7877 கோடி இந்திய ரூபாய்களை முஸ்லிம்களுக்கு
எதிரான கலகங் களைத் தூண்டுவதற்கான ’நன்கொ டையாகப்‘ பெற்றுள்ளன என்ற இந்திய
தகவல் அமைச்சின் அறிக்கையை த மில்லிகஸட் என்ற புது டில்லியைத் தளமாகக்
கொண்ட தினசரி (டிசம்பர் 2009) செய்தியாக வெளியிட்டிருந்தது. இந்நன்கொடை
இஸ்ரேலினால், ஐரோப்பாவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அவ் வாறே, இந்திய இனவாத
அமைப் புத் தலைவர்களின் இஸ்ரேல் விஜ யங்களும் அண்மைக்காலத்தில் அதி
கரித்துள்ளன. இஸ்ரேலில் வைத்து மூளைச் சலவை செய்யப்படும் இவர்கள்,
முஸ்லிம்களுக்கு எதிரான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின் றனர்.
இலங்கையிலும் இது தானே நடக்கிறது? அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும்,
ஏனைய வர்களும் இஸ்ரேலுக்கு விஜயம் செய்கின்றனர். இஸ்ரேலைக் கட்டித் தழுவும்
இவர்களுக்கு இஸ்ரேலின் பின்னணி பற்றிய அ,ஆ பாடம் கூட தெரிந்திருப்பதில்லை.
எமது அச்சு ஊடகங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ள இஸ்ரேலுக்கு சாதகமான,
முஸ்லிம்களுக்கு எதிரான ஆக்கங்களை நோக்கும் போது, நாட்டில் இஸ்ரேலின்
ஆதிக்கம் வெளிப்படையாக வளர்ந்து வருவதைப் புரிந்து கொள்வது சிரமமானதல்ல.
யூதர்கள் மூலம் நாட்டுக்கு ஏற்படக் கூடிய அபாயத்தை அமெரிக்காவின் ஆரம்ப
கர்த்தாக்களுள் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் பல நூற்றாண்டுகளுக்கு முன்
எச்சரித்தார். அவர் எச்சரித்தது போலவே, இன்று யூதர்கள் அமெரிக்காவை ஆட்டிப்
படைப்பவர்களாக மாறியுள்ளனர். இந்த வரலாற்றில் இருந்து இலங்கை முக்கியமாக
கற்றுக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.
ஹலால் சான்றிதழ்,
பெண்களின் உடை, மாடறுத்தல், சனத்தொகைப் பெருக்கம் என பல்வேறு அமசங்களை
முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சா ரத்திற்கான துப்புக்களாக இவர்கள் எடுத்துக்
கொண்டுள்ளனர். இவை தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், அவை
சமாதானமான வழிகளில் தீர்வு காணப்பட முடியு மானவையே!
எனினும்,
அதற்குப் பதிலாக இந்துத் துவப் பாசிச அமைப்பான சிவசேனாவை ஒத்த தீவிர
முஸ்லிம் விரோத அமைப்பொன்று, அண்மையில் பெளத்த விகாரையொன்றில் கூட் டம்
ஒன்றை ஏற்பாடு செய்தது. அக்கூட்டத்தில் முஸ்லிம்கள் சிங் கள வர்களினதும்,
பெளத்தர்களினதும் இருப்புக்கு முஸ்லிம்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள்
என்ற தவறான குற்றச்சாட்டொன்றை முன் வைத்துள்ளது.
இப்பிரசாரங்களின்
மிக முக்கிய நோக்கம் முஸ்லிம்களை அடக்கி யொ டுக்கி, அவர்களை ஓரங்கட்டுவது
தான். ஆனால், முஸ்லிம்கள் இலங்கையில் ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டுத்தான்
இருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பொலிஸ் திணைக்களம்,
இராணுவம் என்ப வற்றில் முஸ்லிம்கள் இணைத்துக் கொள்ளப்படுவது மிக மிகக்
குறைவு. மிக அரிதான முஸ்லிம்களையே அரச திணைக்களங்கள், ஏனைய அரச சார்பு
நிறுவனங்களில் காண முடியும். தனியார் துறை கூட முஸ்லிம்களுக்கு கதவடைப்பு
செய்தது போன்ற நிலையே தொடர்கின்றது.
முஸ்லிம் விவகாரங்களில்
மாற்றாந் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் இப்போக்கு தொடர்ந்து கொண்டே
இருக்கிறது. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட 130000 முஸ்லிம்கள், யுத்தம்
நிறைவடைந்து மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இன்னும் அகதி முகாம்
களில் மிக மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
தமது
ஆசனங்கள், பதவிகள், சுக போகங்கள் என்பவற்றுக்காக தமது ஆன்மாக்களை அடகு
வைத்து விட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ் விவகாரம் தொடர்பில் வாய்
திறக்கவே தயங்குகிறார்கள். வெட்கக் கேடான விடயம் என்னவென்றால், ஐ.தே.கட்சி
துணைத் தலைவர் சஜித் பிரேமதாச அதிகரித்து வரும் முஸ்லிம் விரோத உணர்வுகள்
குறித்து குரல் எழுப்ப முற்பட்ட போது, சில முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்கள் அவரை அனுமதிக்காமைதான்.
இது தொடர்பில் ஜே.வீ.பி
நடந்து கொண்ட முறையைப் பாராட்டத் தான் வேண்டும். இத்தோடு தொடர்பான மற்றொடு
அம்சத்தையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத் தமானதா கும். 44
வயதான முஹம்மத் ரபீக் என்ற மடவளை பஸாரைச் சேர்ந்த சிறிய கடை உரிமையாளர்
கடந்த மாதம் வாகன விபத்தொன்றில் கொல்லப் பட்டார். அவரது மரணச் சடங்கில்
மஹியங்கனையில் இருந்து 20 பஸ் வண்டிகள் நிறைய சிங்களவர்கள் வந்து கலந்து
கொண்டார்கள். தமது சொந்த குடும்பத்தவர் ஒருவரை இழந்தது போன்று, இரவு 10 மணி
வரை அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். இவ்வாறுதான் இத்தனை காலமும் சிங்கள -
முஸ்லிம் உறவு இருந்திருக் கிறது.
இலங்கை முஸ்லிம்களைப் பற்றி
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா பின்வருமாறு குறிப்பிட்டார்.
‘இலங்கை முஸ்லிம் சமூகத்தினதும், அதன் நிறுவனங்களினதும் சிறப்பம்சம்
என்னவென்றால், அது ஆயுதப் போராட்டமொன்றிற்கோ, அழிவிற்கோ தம்மை ஒரு போதும்
ஒழுங்கு செய்து கொள்ளவில்லை. நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பரவியிருக்கும்
இவர்கள் சமாதானப் பிரியர்கள். தமது கலாசாரத் தனித்து வத்தைக் காத்துக்
கொள்ளும் அதே வேளை, ஏனைய இன, மதப் பிரிவின ரோடு பழகி, சிறப்பான தொடர் பைப்
பேணி வருகிறார்கள். இது பாரா ட்டப்பட வேண்டியதொரு அம்சமா கும்‘.
தற்போதைய நிலையில் சிங்கள சமூகத்தின் பொறுப்பான சக்திகள் இப்பிரசாரங்கள்
தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இல்லாத போது, மீண்டும் இந்நாடு மற்றொரு கொலைக் களமாக மாற்றமடையலாம்.
நன்றி விடிவெள்ளி
பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்!
பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்!
இந்தியாவை ஆட்சி செய்யும்
சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விடயமாகும்.
இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்து கொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!
இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்து கொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!
* காஞ்சி சங்கராச்சாரி: காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும்.
புகழ்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை . சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது. காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக நேபாள பெண்மணி ஒருவருடன் தலைக் காவேரிக்கு ஓடியது.
அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து இழுத்ததால் அவர் டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக பேட்டி கொடுத்தது. பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது, தமிழில் குடமுழுக்கு கூடாது என்று சொன்னது. சங்கரா பல்கலைக் கழகத்துக்கு இந்தியன் வங்கியில் இருந்து தவறாக ரூ.1 கோடி நிதியுதவி பெற்றது. ரா என்ற எழுத்தில் தொடங்கும் நடிகையோடு உல்லாசம் புரிந்தது.

* பிரேமானந்தா: திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர்
பிரேமானந்தா சாமியார். பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இவருக்கு
உண்டு. பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆசிரமம், மற்றும் நகைகள், பணம் என்று
இவரிடம் கோடிகள் குவிந்து கிடந்தன.
புகழ்: போதை பொருள் வியாபாரம், ஆசிரமத்தில் உள்ள இளம் ஏழை பெண்களை வெளிநாட்டுகாரனுக்கு கூட்டி கொடுத்தது, கொலை செய்தது . இதனால் அவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

* நித்யானந்தா: 32
வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணா மலையில் பிறந்தவர். 33
நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர்,
பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப்
பீடம். பெரும் செல்வாக்கு,
புகழ்: நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் சல்லாபம். ஆசிரமத்து பெண்களை அமெரிக்கா லாஸ்வேகாஸ் நகருக்கு அழைத்து சென்று நிர்வாண நடனம் நடக்கும் கிளப்களில் அவர்களை நிர்வாணமாக்கி அவர்களோடு நடனம் ஆடியது. பின்னர் விடுதி அறையில் அவர்களோடு செக்ஸ் வைத்து கொண்டது.

சாப்ட்வேர் என்ஜீனியர் படித்த பெண்ணை மது வாங்கி வரச்சொன்னது,
மதத்தின் பெயரால் அவரை மது அருந்த சொல்லி பலவந்தபடுத்தி அவர்
மயக்கநிலையில் இருக்கும் போது கற்பழித்தது. இப்படி பல பெண்களின் வாழ்க்கையை
கெடுத்தது. வாழ்க்கைக்குத் தேவையான 64 தந்திரங்களில் 6 வகையான தந்திரங்கள்
செக்ஸ் தொடர்பானவை என்றும், அதைக் கற்றுத் தரும்போது நிர்வாணமாக
இருப்பதும், உடலுறவு போன்றவற்றில் ஈடுபட வேண்டி வரும் என்று கூறி தனது
தியான பீடத்துக்கு வரும் பெண்களிடம் ஒரு 10 பக்கம் கொண்ட ஒப்பந்தத்தில்
கையெழுத்து வாங்கியது, இதுபோல் கூறி அந்த பெண்களை ஏமாற்றி செக்ஸ் உறவு
கொண்டது. அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் என்பவரின் மனைவி ஷியாமளாவை
அவரிடம் இருந்து அபகரித்தது .
சிவ் முரத்திவேதி: இவர் சத்ய
சாய்பாபாவின் சீடர். சொந்தமாக கோவில், புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூர்
நகரங்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள்.
புகழ்: கோவில்
சுரங்க அறையில் இளம் பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார தொழிலில்
ஈடுபடுத்தி வந்தது . கல்லூரி மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் என பல பெண்கள்
கணவனை பிரிந்த பெண்கள் இவர்களை வைத்து கோவிலின் உள்ளே சுரங்க அறை அமைத்து
விபச்சாரம் நடத்தியது.
டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசாரவிடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டது. டெல்லி தவிர பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி விபச்சாரத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்.

* கல்கி பகவான்: விஜய்குமார்
நாயுடு என்ற கல்கி பகவான். தன்னை கல்கி அவதாரம் என்றும், தன் மனைவியை அம்மா
பகவான் என்றும் சொல்லிக்கொண்டவர். தன்னைக் காண வரும் பக்தர்களிடம் கட்டாய
கட்டணமாக ரூ 5000 வரை பெறுகிறார். சிறப்பு தரிசனத்துக்கு ரூ 25000 கட்டணம்.
ஹோமம் செய்ய ரூ 60000 கட்டணம்.
புகழ்: அம்மா பூஜை என்ற பெயரில் மட்டும் ரூ 240 கோடியும், விஜய்குமார் நாயுடுவின் மகன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி ரூ 3000 கோடியும் அடித்தது . இளம் ஆசிரம பெண்களை வெளிநாட்டவர்களுக்கு விருந்தாக அளித்தது. போதைப் பொருள் பதுக்கல், பல கோடி ரூபாய் மோசடி செய்தது. . ॥ இறைவன் நாடினால் தொடரும் ॥

Subscribe to:
Posts (Atom)