Digital Time and Date

Welcome Note

Sunday, May 13, 2012

ஆமினா அசில்மி - பெயரை கேட்டாலே ஒரு புது உற்சாகம்!




ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ).

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணை...த்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" ----- ஆமினா அசில்மி
ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.

ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.

அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார்.

திரும்பி வர தாமதமாக, வகுப்பு துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார்.

மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார்.

அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்

"அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்"
ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது

"நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்"
இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன் சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவர்களுக்கு கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.

"நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று...நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை"
பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்...

"நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதர்க்காக"
ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான் எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய் என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

"நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்."
பன்றி இறைச்சி மற்றும் குடியை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம் கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி ஆராயச் செய்தார்கள்.

அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது.

"அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின"
1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை அமீனா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

"இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்"

"நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்"
இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள்.

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.

ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

''Jazaakallaahu khairan'' ஷேக் அப்துல் காதர்.

மங்குஸ்தான் பழம் பற்றிய தகவல் !!!!




பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள் குடலுக்கு நல்லது.

... பழங்காலத்தில் மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும்.

இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர்.

இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு

Tamil - Mangosthan

English - Mangosteen

Malayalam - Mangusta

Telugu - Maugusta

Botanical Name - Garcinia mangostana

சீதபேதி

இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.

உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

கண் எரிச்சலைப் போக்க

கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.

மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

மூலநோயை குணப்படுத்த

நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

சிறுநீரைப் பெருக்க

சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.

* இருமலை தடுக்கும்

* சூதக வலியை குணமாக்கும்

* தலைவலியை போக்கும்

* நாவறட்சியை தணிக்கும்.

மங்குஸ்தான் பழத்தில்

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்

கொழுப்பு - 0.1 கிராம்

புரதம் - 0.4 கிராம்

மாவுப் பொருள் - 14.8 கிராம்

பாஸ்பரஸ் - 15 மி.கி.

இரும்புச் சத்து - 0.2 மி.கி

உடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு பயனடைவோம்.

உங்களுடைய பழைய Blog ஐ,எப்படி வேறு தளத்திற்கு திசைதிருப்புவது.


முதலில் நீங்கள் Blogger HTML ஐ திருத்துவதற்கு முன் அதை backup எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய Blogger கணக்கை திறந்து, Layout ஐ click செய்து, Edit HTML ஐ click செய்யவும். இப்போது உங்களுடைய HTML Edit திறந்திருக்கும்.அதில் Ctrl+F ஐ கொடுத்து, <head> என Type செய்யவும். பின் <head>கீழ் இந்த codeஐ type செய்யவும் அல்லது copy and paste செய்யவும்.

<meta name="robots" content="noindex" />
<script type="text/javascript"><!--//--><![CDATA[//><!--
var url = "URL of where you want the blog to be redirected"
(document.images) ? location.replace(url) : location.href = url;
//--><!]]></script>
<meta http-equiv="refresh" content="0;URL=URL of where you want the blog to be redirected" />






பிறகு <body> என்பதன் கீழ் இந்த codeஐ type செய்யவும் அல்லது copy and paste செய்யவும்.

<p><a href="URL of where you want the blog to be redirected"></a>.</p>

EG:-







"URL of where you want the blog to be redirected" என்ற இடத்தில் நீங்கள் எந்த தளத்திற்கு உங்கள் Blog ஐ திசைதிருப்ப வேண்டுமோ, அந்த தளத்தின் இணைய தள முகவரியை Type செய்க.

Saturday, May 12, 2012

காதுகளை பாதுகாக்கும் வழிமுறைகள்



சுகாதார செய்தி.

காதுகளை பாதுகாக்கும் வழிமுறைகள்

காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் ...என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானாகவே வெளியாகிவிடும்.

இதனால் காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் பண்ணுதல் கூடாது, நம் காதுகள் 80 லிருந்து 85 டெசிபல் வரை தான் சப்தத்தை தாங்கும் சக்தியுள்ளது என்பதால் அதற்கும் அதிகமான சப்தத்தை தவிர்ப்பது நல்லது.

சைனஸ், டான்சில், தாடை எலும்பியல் பிரச்சினை என்றாலும் காது பாதிக்கும் என்பதால் இப்பிரச்சினைகளை உடனே கவனிக்க வேண்டும்.

சப்தம் குறைவான இனிமையான பாடல்களை கேட்க வேண்டும். ஓடும் வண்டியிலிருந்து ரேடியோ, டேப் போன்ற இரைச்சலான சப்தத்தை தவிர்க்க வேண்டும்.

தொடர்ந்து பலமணி நேரங்கள் கைபேசியில் பேச வேண்டிய சூழ்நிலையில் ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது.


இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்:-


 

முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.

... இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.

குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இக்கட்டுரையில் குறிப்பிட முடியாது எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.

பெருவெடிப்புக் கொள்கை:

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,

1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.

2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.

3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் – சந்திரன்களாக உருவாகின.

- என்பதாகும்.

அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.



(படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)

சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.



படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:

சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.

அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.



படம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.

மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)