குண்டானவர்களுக்கு புற்று நோய் வருமா?
கடந்த
16 ஆண்டுகள் ஆராய்ச்சியில் 9 லட்சம் குண்டு பேர்வழிகளின் சுகாதார
அறிக்கையையும் அவர்கள் வார்த்தைகளையும் ஆராய்ந்தபோது சில உண்மைகள் தெரிய
வந்துள்ளதாக கனடா கேன்சர் மருத்துவ சொசைட்டி கூறியுள்ளது.
ஆண்களில்
52 வயதுக்கு மேல் பெண்களில் 62 வயதுக்கு மேல் குண்டாக இருப்பவர்களில்
பலருக்கும் புற்றுநோய் வந்துள்ளது. மார்பகம், கருப்பப, குடல், சிறுநீரகம்,
கல்லீரல், மூத்திரப்பைகள் ஆகியவற்றில் கேன்சர் நோய் இவர்களில் பலருக்கு
வந்துள்ளது. குறிப்பாக ஆண்களில் குடல், கல்லீரல், வயிறு, வாய் என்று சில
பகுதிகளில் வருவது பொதுவாக உள்ளது.
குண்டாக இருப்பவர்களுக்கு
மற்றவர்களை விட ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோரின், இன்சுலின் ஆகிய ஹார்மோன்கள்
அதிகமாக சுரக்கும். அதனால் புற்றுநோய் வரும் என்று புற்றுநோய் ஆராய்ச்சி
மைய நிபுணர் பார்பரா ஒய்லி கூறுகிறார். அதனால் தான் டாக்டர்கள் நாற்பதை
தாண்டினால், பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறுகின்
சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ
1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்
2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்
3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ்ல எதுவும் வைக்கவேண்டாம்
பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.
இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...
நீண்ட
காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை
மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ்
ஹாப்கின்ஸ்(ஜோஹ்ன்ஸ் HOPKINS) என்ற மருத்துவ விஞ்ஞானி சொல்கிறார்.
1)
ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில்
தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய
வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர்
இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில்
உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று
மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.
3)
ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது
கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும்
தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும்
தடுக்கப்படுகிறது.
4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால்
அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (நுத்ரிதிஒநல் deficiencies) உள்ளதாக
அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை
காரணிகளாகிறது.
5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த
ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
6) கீமொதெரபீ
சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு,
இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது.
மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும்
பாதிக்கிறது
7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது
(Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை
எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது
8) ஆரம்பகால
கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக்
குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு
சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.
9)
கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு
மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து
கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான
பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.
10) கீமொதெரபீ மற்றும் கதிர்
வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில்
அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற
இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.
11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
12)
இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும்
எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது.
ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.
13)
கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே
இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது
(enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின்
அழிக்கும் செல்லானது (body's own கில்லெர் cells) கேன்சர் செல்லை அழிக்க
உதவியாகிறது.
14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants,
vitamins, minerals, எபாஸ் etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப்
பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம்
கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள
பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது.. (Other
supplements like vitamin E are known to cause apoptosis, or programmed
cell death, the body's normal method of disposing of damaged, unwanted,
or unneeded cells)
15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body)
மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள்
கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும்
மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின்
அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு
செலுத்தவும், சுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக்
கொள்ளுங்கள்!
16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர்
செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை
உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப்
பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க
உதவுகிறது.
உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-
1) கேன்சர்
செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர்
செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது.
சர்க்கரைக்கு
மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame
எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த
அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table
Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக
Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
2) பால்
உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல்
(gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே
பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம்,
கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
3) அமிலத் தன்மையில்
கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை
வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த
அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின்
ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது
மிகவும் ஆபத்தானது..
4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ்
காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு
பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக
இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள
நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து
அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது.
ஆரோக்கியமான செல்கள் வளர
உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு
நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள்
(enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய்
விடுகிறது.
5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன்
உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea)
எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது.
சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை
அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும்.
Digital Time and Date
Welcome Note
Saturday, December 8, 2012
கணினியில் God mode என்றால் என்ன?
கணினியில் God mode என்றால் என்ன? அதை செயல்படுத்துவது எப்படி? இதன்
பயன்கள் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம். கணினியில் GodMode
என்பது நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான ஒரு வசதியாகும். இதைப்பற்றிய
விபரங்களை இப்பதிவில் பார்ப்போம்.
காட்மோட் என்றால்?
(What is Godmode?)
Windows இயங்குதளத்தில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு அமைப்பு (settings) இருக்கும். உதாரணமாக Action Center, Administrative Tools, Auto Play, Backup and Restore, Bitlocker drive encryption, color management, credential management, Date and time,
Default Programs, Desktop gadgets, Device manager, Device Printers, Display, Ease of Access center, Folder Options, Fonts, Getting Started, Home Group, Indexing Options, Internet Options, keyboard, Locations and other Sensors, Mouse, Network and sharing center, Notifications Area Icons, Parental controls, Performance information and Tools, Personalization, Phone and Modem, Power Options, Programs and Features, Region and Language, RemoteApp and Desktop connections, Sound, Speech Recognition, Sync Center, System, Taskbar and Start menu, Trouble Shootings, User account, Windows CardSpace, Windows Defender, Windows Firewall, Windows Update என நிறைய செட்டிங்ஸ்கள் இருக்கின்றன.
இவ்வாறு விண்டோசில் நிறைய செட்டிங்ஸ்கள் இருக்கிறது.. இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியேதான் அணுக முடியும்.
அவ்வாறில்லாமல் அனைத்து செட்டிங்ஸ்களையும் ஒரே இடத்தில் அணுக வேண்டி உருவாக்கிய ஒரு சிறிய உபயோகமே(utility) இந்த காட்மோட்(God Mode) ஆகும். இந்த God Mode ற்கு Windows Master Control Panel Shortcut என்ற மற்றுமொரு பெயரும் உண்டு.
God Mode -ஐ நம் கணினியில் கொண்டுவருவது எப்படி?
இது மிகவும் சுலபம்தான். இதற்கு உங்கள் கணினியில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு புதிய போல்டரை (New Folder) உருவாக்குங்கள்.
கோப்புறை உருவாக்குவது எப்படி?
(how to create new folder?)
desktop ==>right click==>new==folder இந்த முறையிலும் புதிய கோப்புறையை உருவாக்கலாம்.
அந்த புதிய கோப்புறைக்கு பெயராக கீழிருப்பதை அப்படியே தட்டச்சிட்டோ, அல்லது காப்பி செய்து இட்டுவிடுங்கள்.
GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
அவ்வளவுதான். உங்கள் கணினியில் இப்போது Godmode உருவாகியிருக்கும்.

இப்போது உங்கள் போல்டரானது இப்படி மாறியிருக்கும். அதை கிளிக் செய்யும்போது விண்டோஸில் உள்ளதை செட்டிங்களையும் தொகுத்துக் காட்டும்.
இப்போது விண்டோசில் உள்ள அனைத்து செட்டிங்ஸ்களும் இந்த காட்மோடில் காண்பிக்கப்படும். உங்களுக்கு ஏதேனும் ஒரு செட்டிங்சில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியிருப்பின் இந்த காட்மோட் டை கிளிக் செய்து, வேண்டிய செட்டிங்சை கிளிக் செய்து அதில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

Windows-ன் அனைத்து Settingsகளும் இந்த Godmode-ல் தொகுப்பட்டு கிடைப்பதால் ஒவ்வொரு செட்டிங்ஸ்ஆக நாம் தேடி அலையவேண்டியதில்லை...
குறிப்பு: இந்த பயன்மிக்க utility உருவாக்கியவர் மைக்ரோசாப்ட்டில் பணிபுரியும் ஒருவர்தான். இந்த வசதியானது விண்டோஸ் 7 (Windows 7 32 bit,64bit), விண்டோஸ் விஸ்டா(Windows Vista 32 bit), ஆகிய இயங்குதளங்களில் செயல்படுகிறது.
நன்றி : muthu raj

Friday, December 7, 2012
வரலாற்றில் இன்று
டிசம்பர் 6
1060 - முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான்.
1240 - உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
1768 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
1790 - ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.
1865 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.
1877 - வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
1884 - வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
1897 - வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.
1917 - பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1926 - பிரான்சில் பனிமழை பெய்தது. வெள்ளையாகப் பெய்ய வேண்டிய பனி மழை கறுப்பாகப் பெய்ததுதான் அதிசயம்.
1957: வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்துச் சிதறியது.
1921 - இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
1922 - ஐரிய சுதந்திர நாடு உருவானது.
1957 - வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
1971 - இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.
1977 - தென்னாபிரிக்கா பொப்புதட்ஸ்வானாவுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
1985 - உலகிலேயே மிக அதிகமாக விற்பனையானது என்ற சாதனையைச் செய்து தனது பெயரையும் கின்னஸ் புத்தகத்தில் இணைத்துக் கொண்டது கின்னஸ் புத்தகம்
1992 - அயோத்தியாவில் 16ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி இந்துத் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது.
2006 - செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.

டிசம்பர் 7
அனைத்துலக விமானப் போக்குவரத்து நாள்.
1787 - டெலவெயர் 1வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
1900 - மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார்.
1910 - யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
1917 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.
1917 - தமிழத் தென்றல் திரு வி.க. ஆசிரியராகப் பொறுப்பேற்ற தேசபக்தன் வார இதழ் வெளிவரத் தொடங்கியது.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர் ஹவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.
1949 - சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது.
1971 - பாகிஸ்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.
1972 - அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் "அப்போலோ 17" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1975 - கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.
1988 - யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார்.
1991 - Carl Lewis க்கு திடல்தட வீரர்களுக்கான Jesse Owens விருது வழங்கப்பட்டது
1995 - கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

இந்தியாவின் தேசிய நீர் விலங்கு!
இந்தியாவின் தேசியப் பறவை எது ? இந்தியாவின் தேசிய விலங்கு? சுலபமாக மயில், புலி என்று சொல்லிவிடுவீர்கள். இந்தியாவின் தேசிய நீர் விலங்கு எது தெரியுமா? தெரியாவிட்டாலும் பிரச்சினையில்லை. தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவின் தேசிய நீர் விலங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டால்பின்’.
கடலில் துள்ளி விளையாடும் டால்பின்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில பேர் பார்த்தும் கூட இருப்பீர்கள். ராமேஸ்வரத்துக்கு அருகிலிருக்கும் குருசடை தீவுக்கு அருகாக டால்பின்களை நிறைய காண்பதாக மீனவர்கள் சொல்கிறார்கள். . ஏனெனில் மனிதனுக்குப் பிறகு உயிரினங்களில் அதிக பகுத்தறிவோடு வாழும் விலங்கு டால்பின் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நாய்கள், யானைகள் போன்றே மனிதனுக்கு இணக்கமான நீர்வாழ் உயிரினம் இது.
நம் நாட்டின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டிருப்பது கடலில் வாழும் டால்பின்கள் அல்ல. நதிநீரில் வாழும் டால்பின்கள். டால்பின்கள் நதிகளிலும் வாழும் ஓர் உயிரினம். இவை கடல் டால்பின்களை ஒப்பிடுகையில் உருவம், அளவு மற்றும் குணத்தில் நிரம்பவே மாறுபடுகிறது.
நதிநீர் மாசுபடுதல் மற்றும் மனித வேட்டைகளின் காரணமாக இந்த உயிரினம் அருகிக் கொண்டே வருகிறது. இந்த வகை டால்பின்களுக்கு பார்வைக் குறைபாடு உண்டு. சிலவற்றுக்கு சுத்தமாக கண்ணே தெரியாது. எனவே ஆபத்து வருவதை அறியாமல் எங்கோ போய் முட்டிக்கொண்டு மரணிக்கின்றன. குறிப்பாக மனிதர்கள் பயன்படுத்தும் படகுகளிலும், மீன்வலைகளிலும் மாட்டிக் கொண்டு உயிரிழக்கின்றன.
இந்தியாவில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய வற்றாத நதிகளில் இப்போது நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே டால்பின்கள் வாழ்கின்றன. 1993ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் கங்கையில் மட்டும் அறுநூறும், பிரம்மபுத்ராவில் மட்டும் நானூறும் இருந்தன. கங்கையில் வாழும் டால்பின்கள் ‘சூசு’ (Susu) எனவும், சிந்துவில் வாழும் டால்பின்கள் ‘புலான்’ (Bhulan) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்திய நதிநீர் டால்பின்கள் பொதுவாக பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில், நீண்ட மூக்கோடு, பெரிய தலையோடு காணப்படும். அதிகபட்சமாக எட்டு அடி நீளம். சராசரியாக நூறு கிலோ எடை. மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் மிகக்கூர்மையான தலா இருபத்தெட்டு பற்கள் உண்டு. இருபுறமும் அகலமான துடுப்பு போன்ற இறக்கைகள் உண்டு. திமிங்கலத்தைப் போலவே இவையும் பாலூட்டி இனம் என்பதால் நுரையீரல் மூலமாகவே சுவாசிக்கிறது. முப்பது முதல் ஐம்பது நொடிகளுக்கு ஒருமுறை நீர்மட்டத்துக்கு மேலே வந்து சுவாசித்துவிட்டு செல்லும். இவற்றின் கர்ப்பக்காலம் ஒன்பது மாதம். புதியதாக பிறக்கும் டால்பின் குட்டிகள் 65 செ.மீ நீளம் இருக்கும். குட்டியாக இருக்கும்போது தாய்ப்பாலும், வளர்ந்த பிறகு சிறுமீன்கள், இறால் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும். நதிநீர் டால்பின்கள் சராசரியாக முப்பத்தைந்து ஆண்டுகள் உயிர்வாழும். பார்வைக் குறைபாடு இவைகளுக்கு இருப்பதால் கடல் டால்பின்களைப் போல பயிற்சியளித்து, மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. கடல் டால்பின்கள் அமெரிக்க ராணுவத்தில் கூட உளவுப் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா டால்பின்களுக்குமே ஒலியலைகளை (Sonar sense) கிரகித்துக் கொள்ளக்கூடிய தன்மை உண்டு. நீரில் வாழும் பாலூட்டிகளில் டால்பின்கள் மட்டுமே இந்த சிறப்பினைப் பெற்றிருக்கின்றன. ஒலியலைகளை உணர்வதின் மூலமாகவே இவை இரை தேடுகின்றன. டால்பின்களால் 2,00,000 ஹெர்ட்ஸ் அளவுக்கான அல்ட்ரா சோனிக் ஒலியலைகளை ஏற்படுத்த முடியும் (மனிதர்களது காது 18,000 ஹெர்ட்ஸ் அளவுக்கே கேட்கும் சக்தி கொண்டது). பார்வைக் குறைபாட்டை ஒலிகள் மூலமாகவே டால்பின்கள் தவிர்க்கின்றன.
சீனநதி டால்பினான ‘பைஜி’ என்ற உயிரினம் அழிந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. கடைசியாக ‘பைஜி’யை 2004ஆம் ஆண்டுதான் பார்க்க முடிந்ததாம்.
உலகின் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக இருப்பதால், இவற்றைக் காக்கும் முகமாக ‘தேசிய நீர் விலங்காக’ மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை பிரதமரின் அமைச்சரவை ஏற்றுக்கொண்டதின் அடிப்படையில் டால்பின் அதிகாரப்பூர்வமாக ‘இந்தியாவின் தேசிய நீர் விலங்காக’ மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி மீதமிருக்கும் டால்பின்களை காக்கவும், அவை இனப்பெருக்கம் செய்யவும் இனி திட்டங்கள் தீட்டப்படும்.
இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி மாமிசத்துக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ இந்த டால்பின்களை வேட்டையாடும் பட்சத்தில், வேட்டையாடுபவர்கள் மீது சட்டம் பாயும். பெரும்பாலும் மருத்துவத்துக்கு உதவும் மீன் எண்ணெய்கள் தயாரிக்கவே இவை வேட்டையாடப் படுகின்றன. வேட்டையாடுபவர்களுக்கு ஒன்று முதல் ஆறு வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)