தெரிந்து கொள்ளுங்கள்
•இங்கிலாந்தில் பதிவு எண் இல்லாமல் வாகனத்தைப் பயன்படுத்தும் அனுமதி பெற்றவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் இங்கிலாந்தின் அரசி.
•அமெரிக்காவிலுள்ள
வாகன அசெம்பிளி மாளிகை எனப்படும் விண்வெளிக் கலங்களைத் தயாரித்து ஒன்று
சேர்க்கும் நிலையத்தில் 4 கதவுகள் உள்ளன. இவைகள்தான் உலகிலேயே மிகப் பெரிய
கதவுகளாக கருதப்படுகின்றன.
•உலகிலேயே அதிகமாகப் பயிரிடப்படும் காய் வெங்காயம்.
•தென்
அமெரிக்காவில் விளையும் ஒரு வகைச் செடியின் இலைகள்தான் உலகிலேயே மிகவும்
இனிப்பானவை. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையை விட இது இனிப்பாக
இருக்குமாம். இதன் பெயர் ஸ்டீவியா.
•பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி தரும் நாடு தைவான்.
•மாலத்தீவிலுள்ள மொத்த பெண்களில் 54 சதவீதம் பேர் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள்.
•சுக்கிரன் கிரகத்தில் எப்போதும் புயல் வீசிக் கொண்டே இருக்கும்.
•2 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் ஒரே வால் நட்சத்திரம்: டெல்வியான் காமெட் 1914.
•85 சதவீதம் விவசாய நிலம் கொண்ட இந்திய மாநிலம் - பஞ்சாப்.
•கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை 1843-ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் அறிமுகமானது.
•ரயில் போக்குவரத்தே இல்லாத இந்திய மாநிலம் - மேகாலயா.
•இந்தியாவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி - வி.எஸ்.ரமாதேவி.
ஸ்லக்
எனப்படும் உயிரினம் ஓடுகளற்ற நத்தை இன வகையைச் சேர்ந்தது. இதற்கு சுத்தமாக
காது கேட்காது. இரண்டு ஜோடி உணர்வுக் கொம்புகளைக் கொண்டவை. தலையின்
மேலுள்ள இந்த உணர்வுக்கொம்புகள் வெளிச்சத்தை உணர்வதற்கும் வாசனையை
உணர்வதற்கும் பயன்படுகின்றன.
இந்தக் கொம்புகள் அறுந்து விழுந்தாலும்
மீண்டும் வளரும் தன்மை உடையவை. இவை 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே
தோன்றியவை என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
உலகின் மிகப் பழைமையான தேசியக் கொடி டென்மார்க் நாட்டின் தேசியக் கொடிதான் என்கிறார்கள்.
சிவப்பு
பின்புலத்தில் வெண்மை நிற ஸ்காண்டிநேவியன் சிலுவை அடையாளத்தைக் கொண்ட
கொடி. பதினான்காம் நூற்றாண்டு முதல் இந்தக் கொடி பயன்பாட்டில் உள்ளது.
•நமது
தலைமுடியின் அளவே இருக்கும் காரீயக் கம்பி, துத்தநாகக் கம்பி, அலுமினியக்
கம்பி ஆகியவை தாங்கக்கூடிய எடையை விட அதிக எடையை நமது தலைமுடி தாங்கும்.
•மேற்கு ஆசியா, ஸ்ரீலங்கா, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளிலும் பல்லாங்குழி விளையாட்டு புழக்கத்தில் உள்ளது.
முதல் இடம
•கோதுமை உற்பத்தியில் முதல் இடம் பஞ்சாப் மாநிலம்.
•கரும்பு உற்பத்தியில் முதல் இடம் உத்திரப் பிரதேசம்.
•சணல் உற்பத்தியில் முதல் இடம் மேற்கு வங்காளம்.
•உயர் புகையிலை உற்பத்தியில் முதல் இடம் ஆந்திரப் பிரதேசம்.
•நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடம் குஜராத்.
பூமி
•ஆயிரம் ஏரிகளின் பூமி - பின்லாந்து.
•வெள்ளை யானைகளின் பூமி - தாய்லாந்து.
•புனித பூமி - பாலஸ்தீனம்.
•கங்காரு பூமி - ஆஸ்திரேலியா.
•பளிங்கு பூமி - இத்தாலி.
•ஐந்து நதிகளின் பூமி - பஞ்சாப்.
•இடி, மின்னல் பூமி - பூட்டான்.
•அல்லிகளின் பூமி - கனடா.
No comments:
Post a Comment