Digital Time and Date

Welcome Note

Wednesday, December 26, 2012

பிரபல நிறுவனங்களின் 'லோகோ' வளர்ச்சி

நாம் நீண்ட நாட்கள் பார்த்து பழகிய பல நிறுவனகளின் 'லோகோ' என்ற அவர்களின் அடையாள சின்னமானது பல காலங்களில் சிறுசிறு மாற்றங்களுடன் உருமாறியுள்ளன. இவை காலத்துக்கு ஏற்றவாறு மாறக்கூடியதும் கூட. அவ்வாறு மாற்றமடைந்துள்ள சில நிறுவன 'லோகோக்களை' பார்ப்போம்.

01.Mozilla Firefox

இந்நிறுவனம் சமீப காலத்தில் உருவானது. இவை புதிய இணையதள பிரவுசராகும். பலவகையான நன்மைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இவை இணைய உலகில் பிரபலமான ஒன்று.




தற்பொழுத்துள்ள  லோகோ 


02.Coca Cola

இவை குளிர்பானங்கள் தயாரிப்பில் உலக புகழ் பெற்ற நிறுவனமாகும். இதன் 'லோகோ' மிகவும் பிரபலமானது. இந்த 'லோகோவே' இவற்றின் விற்பனைக்கு    மிகவும் துணையாக நிற்கின்றது.



தற்பொழுத்துள்ள  லோகோ


03.LG Electronics

இந்நிறுவனம் வீட்டு உபயோக எலெக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து சந்தையிடுகின்றன. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் உலக நாடுகள் முழுவதும் பிரபலமான விற்பனை பொருட்களாகும்.

தற்பொழுத்துள்ள  லோகோ 



04.NIKE 


இந்நிறுவனம் காலணி தயாரிப்பிலும் மற்றும் ஆடைதயாரிப்பிலும் உலகளவில் புகழ் பெற்ற ஒன்றாகும். இதன் தயாரிப்புகள் அனைத்து நாடுகளிலும் சந்தையிடப்படுகிறது.

தற்பொழுத்துள்ள  லோகோ 



05.Microsoft 

கணினி உலகில் இந்நிறுவனம் முடிசூடா மன்னனாக திகழ்கின்றது. இன்று அனைவரும் பயன்படுத்தி வரும் விண்டோஸ் (WINDOWS) இந்நிறுவனம் உருவாக்கியதுதான். இன்றும் இது உலகமுழுவதும் பிரபலமானது.


தற்பொழுத்துள்ள  லோகோ 


06.Mitsubishi 

இந்நிறுவனம் கார்கள் தயாரிப்பிலும் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பிலும் பிரபலமானவையாகும். இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை அனைத்து நாடுகளிலும் சந்தையிட்டுள்ளன.




தற்பொழுத்துள்ள  லோகோ 



07.Apple 


இந்நிறுவனம் பிரபலமான கணினி, மடிகணினி  மற்றும் கைப்பேசி (CELLPHONE) போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து சந்தையிடுகின்றன. இவற்றின் தயாரிப்புகள் உலக புகழ்ப்பெற்ற விற்பனை பொருட்களாகும்.



தற்பொழுத்துள்ள  லோகோ

இவற்றில் ஏதேனும் தவறு இருப்பின் உங்கள் கருத்துகள் மூலம் தெரிவிக்கவும்  மீண்டும் அடுத்த பதிவில் பார்க்கும் வரை...


நன்றியுடன்
அறிவு கடல் 

Tuesday, December 25, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 25


கிறிஸ்துமஸ் - இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் முக்கிய பண்டிகை கி.பி.440 ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் டிசம்பர் 25 ஆம் தேதியையே கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடி வருகிறது.

800 - சார்லமேன் புனித ரோமப் பேரரசனாக முடிசூடினான்.

1000 - ஹங்கேரிப் பேரரசு முதலாம் ஸ்டீபனின் கீழ் கிறிஸ்தவ நாடாக உருவாக்கப்பட்டது.
1066 - முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1643 - கிறிஸ்மஸ் தீவு உருவாக்கப்பட்டது.

1741 - ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.

1758 - ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் அவதானிக்கப்பட்டது.

1868 - அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.

1892 - சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் கடலின் நடுவிலுள்ள ஒரு பாறையில் அமர்ந்து தனது மூன்று நாள் தியானத்தைத் தொடங்கினார்
1914 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறிஸ்துமஸ் தின போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

1926 - ஜப்பானின் டாயீஷோ மன்னன் இறந்தான். அவனின் மகன் ஹிரோஹிட்டோ அரசனானான்.

1932: சீனாவில் கான்ஸு நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 275 பேர் பலி.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் மீதான ஜப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.

1947 - சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.

1968 - சம்பளம் அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 42 தலித் மக்கள் தமிழ்நாட்டில் உயிருடன் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

1977 - இஸ்ரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்

1977: நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளின் தனது 88 ஆவது வயதில் காலமானார்.

1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.

1989: ருமேனிய ஜனாதிபதி நிகோலோ சௌசெஸ்குவும் அவரின் மனைவி எலினாவும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டு, இரகசிய இராணுவ விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளிகளாக காணப்பட்டதால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1990 - உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

1991 - சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

1991 - உக்ரேன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.

2003 - மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் தரையில் இறங்வதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.

2004 - காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் சந்திரனான டைட்டானில் இறக்குவதற்காக ஹியுஜென்ஸ் என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது ஜனவரி 14, 2005 இல் டைட்டானில் இறங்கியது.

வரலாற்றில் இன்று

டிசம்பர் 24



1294: பாப்பரசர் பதவியிலிருந்து 5 ஆம் புனித செலஸ்டின் ராஜினாமா செய்ததால் 8 ஆம் பொனிபேஸ் பாப்பரசராக தெரிவானார்.
1582 - இலண்டனில் முதன் முதலில் குழாயின் மூலமாக வீடுகளுக்குக் குடிநீர் விற்பனை செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது
1690 - யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துமஸ் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.

1715 - சுவீடனின் துருப்புகள் நோர்வேயை ஆக்கிரமித்தன.

1777 - கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.

1851 - வாஷிங்டன் டிசியில் காங்கிரஸ் நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.

1906 - ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.

1914 - முதலாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

1914 அல்பேனியா சுதந்திரம் பெற்றது.

1924 - அல்பேனியா குடியரசாகியது.
1929: ஆர்ஜென்டீன ஜனாதிபதி ஹிபோலிட்டோ யிரிகோயெனை படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டது.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் ஜப்பானியப் படைகளிடம் வீழ்ந்தது.

1941 - இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் ஜப்பானியரிடம் வீழ்ந்தது.

1951 - லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் ஐட்ரிஸ் லிபிய மன்னனாக முடிசூடினார்.

1954 - லாவோஸ் விடுதலை பெற்றது.

1966: அமெரிக்க இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கனடா எயார் விமானமொன்று தென் வியட்நாமில் விபத்துக்குள்ளாகி 129 பேர் பலி.

1968 - மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.

1968 - James Lovell, William Anders, Frank Borman என்ற மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள் முதன் முதலில் நிலாவை அடைந்தனர்.

1979 - ஆப்கானிஸ்தானின் கம்யூனிச அரசைக் காப்பதற்காக சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை முற்றுகையிட்டது.

1979 - ஐரோப்பாவின் முதலாவது விண்கலம் ஆரியான் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.


1997: அல்ஜீரியாவில் கலவரங்களால் 50-100 பேர் படுகொலை.

2005 சூடானுக்கு எதிராக சாட் குடியரசு யுத்தப் பிரகடனம் செய்தது.

2008: உகண்டாவின்கிளர்ச்சிக் குழுவொன்று கொங்கோவில் 400 பேரை படுகொலை செய்ததன் மூலம் கொங்கோவுக்கு எதிராக தொடர் தாக்குதல்களை ஆரம்பித்தது.

வரலாற்றில் இன்று

டிசம்பர் 23



தேசிய உழவர்கள் நாள்.
1783 - ஜோர்ஜ் வாஷிங்டன் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.

1914 - முதலாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.

1916 - முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றனர்.

1922 - தினசரி செய்திகளை வழங்கத் தொடங்கியது பிபிசி எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம்.

1947 - முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

1948 - முன்னாள் ஜப்பானியப் பிரதமர் Hideki Tojo -வும் ஆறு ஜப்பானிய ராணுவத் தலைவர்களும் தோக்கியோவில் தூக்கிலிடப்பட்டனர். மனுக்குலத்துக்கு எதிராக அவர்கள் இழைத்த கொடுமைகளுக்காக அந்தத் தண்டனை.

1954 - முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்கொள்ளப்பட்டது.

1957: அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இயன் கிறேக் வரலாற்றின் மிக இளமையான ( 22 வருடங்கள், 194 நாட்கள்) டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரானார்.


1958 - டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.

1970: நியூயோர்க் நகரில் உலக வர்த்தக நிலையத்தின் வடக்குக் கோபுரம் 1368 அடி (417) மீற்றர் உயரத்தை அடைந்தது. அக்காலத்தில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக அது விளங்கியது.

1972: மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 10,000 பேர் பலியாகினர்.

1972 - தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.

1979 - சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.

1986 - எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.

1990 - 88% சிலொவேனிய மக்கள் யூகொஸ்லாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2002: ஈராக்கின் மிக் 25 விமானத்தின் மூலம் ஆளில்லா விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. உலகில் ஆளில்லா விமானமொன்று தாக்குதலொன்றில் சம்பந்தப்பட்டது அதுவே முதல் தடவை.

2003: சீனாவில் இயற்கை வாயு அகழ்வுக் களமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 234 பேர் பலி.

2005: அஸர்பைஜானில் ஏற்பட்ட விபத்தினால் 23 பேர் பலி.

2005: சூடானுக்கு எதிராக ஆபிரிக்காவின் சாட் நாடு யுத்தப் பிரகடனம் செய்தது.

Saturday, December 22, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 22



1790 - துருக்கியின் இஸ்மாயில் நகரை ரஷ்யாவின் சுவோரவ் என்பவனும் அவனது படைகளும் கைப்பற்றின.

1807 - வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டது
1845 - பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.

1849 - ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

1851 - இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.

1895 - எக்ஸ்ரேயைக் கண்டுபிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்ஹெம் ரோண்ட்ஜென் ( Wilhelm Rontgen) முதன் முதலாக தனது மனைவியின் கையை எக்ஸ்ரே எடுத்துக் காட்டினார்
1915 - மலேசியாவின் இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

1937 - லிங்கன் சுரங்கம் நியூயோர்க் நகரில் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
1938 - எழுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அடியோடு அழிந்து போய் விட்டது என்று கருதப்பட்ட கொயலாகாந்த் இன மீன் வகை அன்ஜூவான் தீவுக்கருகே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வீ-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.

1989 - ஒரு வார சண்டையின் பின்னர் இயோன் லியெஸ்கு, கம்யூனிச ஆட்சியாளரான நிக்கலாய் செய்செஸ்குவை வீழ்த்தி ருமேனியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1989 - கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பேர்லினில் பிரித்த "பிராண்டன்பேர்க் கதவு" 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.

1990 - மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன விடுதலையடைந்தன.