Digital Time and Date

Welcome Note

Saturday, December 29, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 29



சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்

1170 – இங்கிலாந்து, கண்டர்பரி ஆயர் தோமஸ் பெக்கெட் அவரது தேவாலயத்தில் வைத்து இரண்டாம் ஹென்றி மன்னனின் நான்கு ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

1690 – இத்தாலியின் அன்கானோர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானிய போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.

1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயோர்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர்.

1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.

1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு YMCA பொஸ்டனில் அமைக்கப்பட்டது.

1876 – ஐக்கிய அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் தொடருந்து பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர்.


1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.

1891 - தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.

1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார்.

1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1930 - அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.

1937 - ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாசி ஜெர்மனியர் தீக்குண்டுகள் வீசியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

1972 – புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் கொல்லப்பட்டனர்.

1975 – நியூயோர்க் நகர விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.

1987 - 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.

1989 - ஹொங்கொங் வியட்நாமிய அகதிகளை பலவந்தமாக வெளியேற்றியதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.

1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது.

1996 - குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.

1997 - ஹொங்கொங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.

1998 - கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

2001 – பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று

டிசம்பர் 28





1065 - லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது
1612 - கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.

1832: ஜோன் சி கல்ஹோன், அமெரிக்க உப ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய முதல் மனிதரானார்.

1836 - தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.

1836 - மெக்சிகோவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.

1846 - அயோவா ஐக்கிய அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது.
1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுக்கு உரிமை கோரியது.

1869 - சிங்கப்பூரில் Chewing gum தடை செய்யப்பட்டிருக்கிறது. வில்லியம் எஃப் சிம்பிள் ( William F Semple ) என்பவர் அதற்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1879: ஸ்கொட்லாந்தில் ரயில் பாலமொன்று உடைந்து 75 பேர் பலி.

1885 - இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.

1891 - யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.

1895 - பிரான்சின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.

1908: இத்தாலியின் சிசிலி தீவின் மெசின்னா நகரில் 7.2 ரிக்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதால் 75 ஆயிரம் பேர் பலி.

1918: சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கொன்ஸ்டன்ஸ் மார்கிவிக் பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் எம்.பியானார்.


1929 - நியூசிலாந்தின் காலனித்துவ காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட சமோவாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.

1930 - மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.

1958 - கியூபாவின் 1937 : இந்திய டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பிறந்த தினம்

1940 : இந்திய அரசியல் தலைவர் ஏ.கே.அந்தோணி பிறந்த தினம்
சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.

1981 - அமெரிக்காவின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எலிசபெத் கார் வேர்ஜீனியாவில் பிறந்தது.

1983 - யுனெஸ்கோ எனும் அமைப்பிலிருந்து விலகியது அமெரிக்கா.

2005 - இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜான்ஜுக் என்பவர் உக்ரேனுக்கு நாடுகடத்த ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2006 - எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுத் துருப்புக்களும் சோமாலியா தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இஸ்லாமிய போராட்ட அமைப்பின் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.

2007 - நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

2010: அல்ஜீரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம்.

Thursday, December 27, 2012

வரலாற்றில் இன்று

 டிசம்பர் 27

உலக வங்கி நிறுவப்பட்ட நாள்

1537 - ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.

1703 - இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கு ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.

1831 - சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.

1845 - பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.

1864 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.

1918 - ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.

1922 - ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது.

1923 - ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்
1934 - பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.

1945 - 28 நாடுகள் ஒன்று கூடி World Bank எனப்படும் உலக வங்கியை நிறுவின. இன்டர்நேசனல் மானிட்டரி பண்ட் என்றழைக்கப்படும் அனைத்துலக பண நிதியமும் அமைக்கப்பட்டது

1949 - இந்தோனீசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.

1956 - தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1968 - சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

1978 - ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.

1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.

1985: பலஸ்தீன கெரில்லாக்கலால் ரோம், வியன்னா நகரங்களின் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

1993 - World Trade Organization எனப்படும் உலக வர்த்தக நிறுவனம் நிறுவப்பட்டது
1996 - தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.

 2002: ரஷ்யாவின் செச்னிய பிராந்தியத்தில் இரு வாகன குண்டுத்தாக்குதல்களில் 72 பேர் பலி.


2007: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார்

Wednesday, December 26, 2012

ORATHANADUKARTHIK: சொர்க்கத்தை இவ்வுலகில் அனுபவிக்கும் ஒரே நபர் சுல்தானின் வாழ்கை வரலாறு பாகம் -2

ORATHANADUKARTHIK: சொர்க்கத்தை இவ்வுலகில் அனுபவிக்கும் ஒரே நபர் சுல்தானின் வாழ்கை வரலாறு பாகம் -2

உலகின் முதல் நாகரீகம் - 2

1949இல் அமெரிக்காவை முதன் முதலில் கண்டுபிடித்தது கொலம்பஸ் என்று வரலாறு குறிப்பிடுகிறது. அதே வரலாறு தான் கொலம்பஸ் முதன் முதலாக அமெரிக்காவில் தரையிரங்கிய போது ஒரு மனித இனத்தைக் கண்டதாகவும் அவர்களை இந்தியர்கள் என்று எண்ணி கொலம்பஸ் அவர்களை இந்தியர்கள் என்றழைத்து பின் நாளில் அவர்கள் சிவப்பு இந்தியர்கள் என்றும் அமெரிக்க இந்தியர்கள் என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்றால் அங்கிருந்த மனிதர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? கொலம்பஸ்க்கு முன் அழகும் ஆபத்தும் நிறைந்த அட்லாண்டிக் கடல் பகுதியை கப்பல்கள் கடந்தனவா? வட மற்றும் தென் அமெரிக்க பகுதிகளின் முந்தய கால வரலாற்றை தொடர்ச்சியாக பல ஆராய்ச்சிகள் மூலம் ஆய்வு செய்ததில், வல்லுனர்கள் தெரிவிக்கும் உன்மைகள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது. இதன் மூலம் உலகம் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் இழைத்த அநீதி வெளிப்படுகிறது. முனைவர் பேரன் ரோபர்ட் ஃப்ரெய்ஹெர் வான் ஹைன் கெல்டெர்ன் (Dr Baron Robert Freiherr von Heine Geldern) மற்றும் கோர்டொன் எக்ஹோம் (Gordon F. Ekholm) என்ற உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்னவென்றால்: “இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஃபா – ஹைனை (கி.பி. 399 – 414) ஏற்றிச் சென்ற மிகப் பெரிய அளவுடைய கப்பல்களுக்கு மெக்ஸிகோவையும், பெருவையும் அடைந்திருப்பது சாத்தியமில்லாமல் இருந்திருக்காது. 
 ஐரோப்ப நாடுகளில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல்களை விட நினைத்துப் பார்ப்பதற்கு கூட முடியாத பன் மடங்கு பெரிய வலுவான கப்பல்களை கொலம்பஸ் பிறப்பதற்க்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் உபயோகித்தனர்.” ஸ்பெய்ன் வரலாற்று ஆய்வாளர் திரு. ஃப்ரே ஷாஹௌன் (1515 கி.மு) அவர்களது காலத்தில் இருந்து இன்று வரை அமெரிக்காவின் வரலாற்றையும், சிகப்பு இந்தியர்கள் என்றழைக்கப்படும் அமெரிக்க பழங்குடி மக்களின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதில் ஆய்வாளர்கள் பெரும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அதில் பலர் இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்த மக்கள் தான் கடல் மார்கமாக அமெரிக்கவை வந்தடைந்து அங்கு ஒரு பெரும் நாகரீகத்தை உருவாக்கினர் என்னும் முடிவுக்கு வந்துள்ளனர். “மெக்ஸிகோவின் வரலாறு” (“A Compact History of Mexico”) என்ற புத்தகத்தை எழுதிய திரு. இக்னகியோ பெர்னல் என்னும் எழுத்தாளர் ஆசியாவில் இருந்து சுமார் முப்பத்தைந்தாயிரம் (35,000) ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் அமெரிக்கவிற்குள் நுழைந்தனர் என்கிறார். ஆனால் 
திரு ஆர்கியோ நுன்ஸ் என்னும் பிரிட்டனிய அனு விஞ்ஞானி ஆசியாவில் இருந்து 11000 ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர் என்று குறிப்பிடுகிறார். சில்வைன் லெவி (Sylvain Levi) எனும் பிரெஞ்சு கீழ்த்திசைவாணர் (Orientalist) கிழக்கு நாகரீகம், மதம், இலக்கியங்கள் மற்றும் வரலாற்றைப் பற்றி ஆய்வுகளை எழுதிய்ருக்கிறார். “இந்தியாவும் உலகமும்” என்ற பிரஞ்சு மொழி புத்தகத்தில் அவர் ” பெர்ஸியா முதல் சீனக் கடல்பகுதி வரையில், பனிபடர்ந்த சைபீரியா முதல் ஜாவா மற்றும் போர்னியோ தீவுகள் வரை, ஒசீயானியா முதல் சாகாற்றா வரை, இந்தியா அவளுடைய நம்பிக்கை, வரலாறு, கொள்கை மற்றும் நாகரீகத்தைப் பரவச்செய்திருக்கிறாள். 
பல்லாயிறமாண்டு வரலாற்றில் அவள் உலக மனித இனத்தின் நான்கில் ஒரு பகுதியில் அவளுடைய சுவடுகளைப் பதித்திருக்கிறாள். அவளுடைய பழம்பெருமைகளைத் தெரியாமல் இத்தனைக் காலம் வாழ்ந்திருந்தாலும் அவளுக்கு உலக வரலாற்றை சொந்தம் கொண்டாட முழு உரிமையும் உண்டு.” என்று குறிப்பிடுகிறார். பல கடினமான முயற்சிகளின் பின்னனியில் இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய கலாச்சாரம் இந்தியாவையும் தாண்டி பல நாடுகளில் பரவியிருப்பதை கண்டறிந்துள்ளனர். 
தெங்கிழக்கு ஆசிய நாடுகள் தவிர இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் அமெரிக்காவும் இதில் அடங்கும். இதற்கான பல ஆதாரமும் இப்போது கிடைத்திருக்கிறது. பண்டைய கால பஸிபிக் கடல் பயணத்தை உறுதிப் படுத்தும் ஒரு முக்கிய ஆதாரமாய் விளங்குவது பண்டைய கால காகித தயாரிப்பு தொழில்நுட்பம். சீனா, தெங்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா மற்றும் மீசோ அமெரிக்கா பகுதிகளில் இத்தொழில்நுட்பம் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது. மைக்கேல் கோ (Michael Coe) அவருடைய புத்தகத்தில் காகித தயாரிப்பு தொழில் நுட்பம் கிழக்கு இந்தோனேசியாவில் இருந்து மீசோ அமெரிக்காவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்றிருக்கிறது என்று தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுவது இந்த தொழில் நுட்பம் சென்றிருக்கும் பட்சத்தில் இவ்விரு தேசங்களுக்கும் இடையில் தகவல் பரிமாற்றமும் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார். 
அன்புடன் சின்னவன்